சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்!

16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
16 தையல்... நிற்க முடியவில்லை... அர்ச்சனா உருக்கம்! சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார். சமீபத்தில் இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பெற்றதாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா முதல் முறையாக யூடியூப் சேனலில் நேரலையில் வந்து பேசினார். அவரை பார்த்த ரசிகர்களோ, எப்பொழுது மீண்டும் வேலைக்கு வருவீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னால் இப்போ கூட வர முடியும். ஆனால் என் வலது தொடையில் 16 தையல் போடப்பட்டிருக்கிறது. 16 தையல் போடப்பட்டிருப்பதால் கால் பலவீனமாக இருக்கிறது. ஷூட்டிங்கிற்கு வந்தால் 15, 16 மணிநேரம் நிற்க வேண்டும். என்னால் தற்போது அவ்வளவு நேரம் நிற்க முடியாது. நான்...
அன்று ஆப்கான் மந்திரி… இன்று ‘பீட்சா’ டெலிவரி நபர்!

அன்று ஆப்கான் மந்திரி… இன்று ‘பீட்சா’ டெலிவரி நபர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அன்று ஆப்கான் மந்திரி... இன்று ‘பீட்சா’ டெலிவரி நபர்! சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே தந்துகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னொரு வித்தியாச செய்தி. வெளிநாட்டுக்குத் தப்பியோடிய ஜனாதிபதி அஷ்ரப் கனி  அரசில் மந்திரியாக பதவி வகித்த சையத் அகமது ஷா சதாத், தற்போது ஜெர்மனி நகரம் ஒன்றில் பீட்சா டெலிவரி நபராக வேலை பார்க்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு அஷ்ரப் கனி  மந்திரிசபையில் சதாத் இணைந்தார். தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மந்திரியாக பதவி வகித்த அவர், பின்னர் அப்பொறுப்பில் இருந்து விலகினார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெர்மனியின் லீப்சிக் நகருக்கு இடம் பெயர்ந்த சதாத், தற்போது அங்கு பீட்சா டெலிவரி நபராக பணியாற்றுகிறார். பீட்சா டெலிவரி பையுடன் அவர் சைக்கிள் ஓட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றிருக்கின்றன. ஆனால் முன்னாள் ஆப்கான் மந்திரி சையத் அகமது ஷா ...
மதுரையில் நடந்த துணிகர சம்பவம்- ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் கைது!

மதுரையில் நடந்த துணிகர சம்பவம்- ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் கைது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மதுரையில் நடந்த துணிகர சம்பவம்- ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் கைது! சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷத் (வயது 36). டெய்லரான இவர், சொந்தமாக பேக் கம்பெனி வைக்க முடிவு செய்தார். இதற்கான பொருட்கள் வாங்க சிலரிடம் கடனாக ரூ.10 லட்சம் வாங்கிய அவர், கடந்த மாதம் 5-ந்தேதி மதுரை-தேனி ரோட்டில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் மாவுமில் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார். அப்போது, ஏற்கனவே வாங்கிய கடன் ரூ.10 லட்சத்தையும் கையில் வைத்திருந்தார். இந்தநிலையி்ல அங்கு போலீஸ் வாகனத்தில் வந்த மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, அவருடைய தம்பி பாண்டியராஜன், மற்றும் பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோர் அர்ஷத்தை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பையோடு பறித்துச்சென்றனர். இதுகுறித்து அர்ஷத், மாவட்ட குற்ற தடுப்புப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பே...
‘தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

‘தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு! ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக படத்தை திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டது. நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு தலைவி படத்தை வெளியிடுவோம் என கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார். தற்போது தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'தலைவி' திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் அதிமுகவினரிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெறும். ...
நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்! அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும். இந்நிலையில், பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு 10 ஆண்டுக்கான கோல்டன் விசா நேற்று வழங்கப்பட்டது. இதற்காக அபுதாபி பொருளாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த துறையின் தலைவர் முகம்மது அலி அல் சோரபா அல் ஹம்மாதி இருவருக்கும் கோல்டன் விசாவை வழங்கி க...
நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் புகை கோபுரம்: அரவிந்த் கெஜ்ரிவால்!

நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் புகை கோபுரம்: அரவிந்த் கெஜ்ரிவால்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் புகை கோபுரம்: அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. பக்கத்து மாநிலங்களில் உள்ள விவசாயிகள், பயிர் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதை போக்க புகை கோபுரங்கள் அமைக்குமாறு டெல்லி அரசுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, புகை கோபுரம் அமைக்கும் திட்டத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும், டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தலா ஒரு புகை கோபுரத்தை அமைத்துள்ளன. கன்னாட்பிளேஸில், நாட்டிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்ட புகை கோபுரத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். பின்னர் அவர...
7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்!

7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்! கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னகுப்பம், வண்டிப்பாளையம், சேந்தமங்கலம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ ரூ.5 என்ற விலையில் சுமார் 7 டன் வெண்டைக்காயை அப்பகுதியை சேர்ந்த வியாபாரியான இளங்கோ மற்றும் அவரது குழுவை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் திடீரென வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால், இவர்களிடம் இருந்து வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்யவில்லை. இதனால் வெண்டைக்காயை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வந்தனர். இதனிடையே குடானில் தேக்கமடைந்த வெண்டைக்காய் யாருக்கும் பயனின்றி வீணாகி ...