புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

HOME SLIDER

விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்…. நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்!

விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்…. நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்.... நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்! பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் பிரபாஸ். இவருக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. தற்போது ராதே ஷ்யாம், சலார், ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலமான நடிகர் ஆகிவிட்டதால் அவரின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் நடிகர் பிரபாஸை தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்க முயற்சித்துள்ளன. கடந்த ஓராண்டில் நடிகர் பிரபாஸுக்கு காலணிகள், மின்னணு பொருட்கள், சோப்பு என ஏராளமான விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இவற்றில் நடித்திருந்தால் அவருக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் கிடைத்திருக்குமாம். ஆனால் அவர் அவற்றில் நடிக்க ...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – கதாயுதத்துடன் வாகை சூடிய நியூசிலாந்து!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – கதாயுதத்துடன் வாகை சூடிய நியூசிலாந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - கதாயுதத்துடன் வாகை சூடிய நியூசிலாந்து! இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்த நிலையில், 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா, விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். புஜாரா 15 ரன்கள், ரகானே 15 ரன்கள், ஜடேஜா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷப் பண்ட், 41 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க...
இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்! தமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் கடந்த 21-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. இது குறித்து சட்டசபையில் இடம்பெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதம் நடந்தது. அவர்களின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். 3 தினங்கள் சட்டசபையில் நடந்த விவாதத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேசினார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச...
புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா!

புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா! “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜமோகன் அடுத்தாக அட்ரஸ் என்னும் படத்தை இயக்கி இருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் அதர்வா, புரட்சி வாலிபராக நடித்திருக்கிறார். காளி என்ற கதாபாத்திரத்தில் வரும் அதர்வா, நட்புக்காக சிறிய வேடத்தில் நடித்து கொடுத்திருக்கிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடிக்கிறார். மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலி சோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
தனுஷ் – செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு!

தனுஷ் – செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் - செல்வராகவன் இணையும் படத்தின் புதிய அறிவிப்பு! இயக்குனர் செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்....
எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் இயக்கி இருக்கும் விஜயன்!

எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் இயக்கி இருக்கும் விஜயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் இயக்கி இருக்கும் விஜயன்! தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கத்தில் தற்போது லாபம் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில் எஸ்.பி.ஜனநாதன் காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். எஸ்.பி.ஜனநாதனின் படங்கள் எப்படி தமிழ் சினிமாவில் பேசப்பட்டதோ அதுபோல், அவருடைய உதவியாளராக பணியாற்றிய எஸ்.டி.புவி, புதிய படத்தை இயக்கி வெள்ளித்திரைக்கு கொண்டு வந்து அனைவரையும் கவர இருக்கிறார். இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுடன் 2004 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்த எஸ்.டி.புவி, விஜயன் என்னும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். விஜயன் படத்தில் பாரி, கார்த்திகேயன், யோகி, ஆர்த்தி வினோ, லைலிதா, ஶ்ரீனிதி உள்ளிட்ட...
மெட்ரோ ரெயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்!

மெட்ரோ ரெயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மெட்ரோ ரெயிலில் 34 ஆயிரம் பேர் பயணம்! மெட்ரோ ரெயில் சேவை ஒரு மாதத்திற்கு பின்பு நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் 5 நிமிடத்திற்கு ஒரு சேவையும் மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு சேவையும் அளிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ரெயில் நிலையங்களில் குளிர்சாதன வசதி தடை செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் அதிக அளவு பயணம் செய்தனர். முதல் நாளில் 29 ஆயிரம் பேர் பயணித்தனர். நேற்று இந்த எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், விமான நிலையங்களில் அதிக பயணிகள் பயணம் செய்தனர். அதேபோல ஆலந்தூர், திருமங...
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி! தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக திமுக, அதிமுக இடையே  விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது, தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு பெறுவோம் என்றார். ‘அதிமுக ஆட்சியில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது நீட் விவகாரம் குறித்து வலியுறுத்தினேன். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்கவேண்டும்’ என கேட்டுக்கொண்டார். இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வி...
இத்தாலியில் 28ந்தேதி முதல் வெளியே செல்லும் பொதுமக்கள் முக்கவசம் அணிய தேவையில்லை!

இத்தாலியில் 28ந்தேதி முதல் வெளியே செல்லும் பொதுமக்கள் முக்கவசம் அணிய தேவையில்லை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இத்தாலியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், வரும் 28ந்தேதி முதல் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்து உள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்றின் 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பரவலை தடுப்பதில் தடுப்பூசி சிறப்பாக பணியாற்றுவதால், உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றனர். இத்தாலி நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையிலர, கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், அங்கு வருகிற 28ந்தேதி முதல்  பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு உள்ள வடமேற்கில் ...