கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது, பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்.
இதுகுறித்த இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. போதுமான கால அவகாசம் இருந்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்புகளுக்கும் காரணமாகியிருக்கும் பிரதமர் மோடி இந்த நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத...









