கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் நலதிட்ட உதவிகள்!
நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தற்சார்பு வேளாண்மையில் நேரடி விற்பனையில் சிறந்து விளங்கும் விவசாயி திருமூர்த்தி, பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பில் ஜனகன், சிறந்த விவசாயப் பங்களிப்பிற்கு மனோன்மணி ஆகியோருக்கு விருதுகளும் தலா ஒரு லட்சத்திற்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் நடிகர் சிவகுமார் வழன்கினார்.
அதோடு சிறு குறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கருவிகளை வடிவமைப்பவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக உடுமலைப்பேட்டை சசிகுமார் அவர்களுக்கு 75 ஆயிரமும் இரண்டாம் பரிசாக வேலூர் ராஜா மற்றும் கரூர் துரைசாமி அவர்களுக்கு 25 ஆயிரமும் மூன்றாம் பரிசாக ஈரோடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கோக...









