ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாகாரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்! – தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பாராட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நெகிழ்ச்சி!
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாகாரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்! - தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பாராட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நெகிழ்ச்சி!
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, , இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மூத்த பத்திரிகையாளர் தேவிமணி, சிகரம் குழும நிறுவனர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக இயக்குனர் திரு பாரதிராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆளுயர ரோஜா மாலையும், மலர் கிரீடமும், நினைவு பரிசும் வழங்கி இயக்குனர் இமயத்தின் 40...









