சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்

ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்

CINI NEWS, HOME SLIDER
    ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன் தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க, ஸ்ருதிஹாசனின் சமூக வலைத்தள பக்கத்தை, தொடர்ந்து பல நாட்களாக அழைப்புகள் மற்றும் வாழ்த்து குறுஞ்செய்திகளால் ரசிகர்கள் மூழ்கடித்துவிட்டனர். அனைத்து ரசிகர்களின் பொங்கி வழியும் அன்பில் மூழ்கிதிளைக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ஒவ்வொரு ரசிகருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க முயன்று வருகிறார். மேலும் இந்த ஆண்டு, ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளில், நமது சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார். இதனையொட்டி மனநலம், திரைப...
தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடிப்பில் முக்கோணக் காதல் ‘கெஹ்ரையான்’

தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடிப்பில் முக்கோணக் காதல் ‘கெஹ்ரையான்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகைகள்
  தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஹ்ரையான்’. வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார். இப்படம் வரும் பிப்ரவர் 11ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் 88 லட்சத்துக்கு அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது   நவீன காதலர்களையும், அவர்களுக்கிடையிலான உறவுச் சிக்கல்களையும் ஒரு முக்கோணக் காதல் வழியாக சொல்லும் படமாக தெரிகிறது ‘கெஹ்ரயான்’. தீபிகா - சித்தாந்த் இடையிலான கெமிஸ்ட்ரி படத்துக்கு பெரிதளவில் கைகொடுக்கும் என்பது ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கேற்ற சில ‘போல்ட்’ ஆன காட்சிகளும் ட்ரெய்லர் முழுக்க வருகின்றன. கவுஷல் ஷாவின் ஆர்ப்பாட்டமில்லா...
வசூலைக் குவித்த ‘புஷ்பா’ சுகுமார் இயக்கத்தில் தனுஷ்?

வசூலைக் குவித்த ‘புஷ்பா’ சுகுமார் இயக்கத்தில் தனுஷ்?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ‘புஷ்பா’ இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடினார். ‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கிய படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெளியாகி இரண்டே நாட்களில், உலக அளவிலான பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடி வசூலைக் குவித்தது. கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து ‘புஷ்பா’ முதல் நாளில் ரூ.45 ...
“ஓ மை கடவுளே” இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் சிம்பு!

“ஓ மை கடவுளே” இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார் நடிகர் சிம்பு, இவரின் திறமையை பாராட்டி சமீபத்தில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இவரது படங்களுக்கு போதுமான வரவேற்பு இருந்த நிலையில், இவரை மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் விதமாக ‘மாநாடு’ படம் அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவருக்கு பல படங்கள் வரிசைகட்டி நிற்கிறது, சில படங்களில் இவர் நடித்துக்கொண்டும் இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை AGS என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணிவாணி இயக்கத்தில் தமிழில் வ...
உக்ரைனின் எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவிக்கும் ரஷ்யா!

உக்ரைனின் எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவிக்கும் ரஷ்யா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
    உக்ரைனின் எல்லைப் பகுதியில் தங்களது நாட்டு ராணுவத்தை ரஷ்யா குவித்து வருவதால் பதற்றம் நிலவுகிறது. 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.   இந்த நிலையில் சுமார் 1 லட்சம் படைவீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே போர் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகயை அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன.. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “ ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. ரஷ்யா ஏதோ செய்ய இருக்கிறது” என்று ...
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திருத்த வழக்கு தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திருத்த வழக்கு தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
      தமிழ்த்தாயை கவுரவிக்கும் விதமாக முழு பாடலையும் பாட வேண்டும் என்றும், இதற்காக அரசு இணையதளம் உள்ளிட்ட ஆவணங்களில் முழு பாடலையும் வெளியிட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில்,ஜெ.மோகன்ராஜ் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய நீராருங் கடலுடுத்த' என தொடங்கும் பாடல், தமிழ்நாட்டில் அரசு, தனியார் நிகழ்ச்சி, பள்ளி, கல்லூரிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக பாடப்படுகிறது. ஆனால் இதில் பல வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது சுந்தரனார் எழுதிய முழு பாடலில், பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பது போல, கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும், ஆரியம்போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்...
காமாட்சி அம்மன் கோவில் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள்!

காமாட்சி அம்மன் கோவில் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி பூஜையும், மாசி கொடை விழாவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக தங்குமிடம், கழிவறைகள், குளியலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 17-ந்தேதி பவுர்ணமி பூஜையை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள குளியலறையில் குளிக்க சென்ற பெண் பக்தர் ஒருவர், அங்கு மறைவான இடத்தில் ரகசிய கேமரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார். தொடர்ந்து குளியலறைகள் முழுவதும் கோவில் ஊழியர்கள் சோதனை செய்தபோது, அங்கு மேலும் 2 இடங்களில் ரகசிய கேமராக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் பூசாரி முருகன், விளாத்திக...
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நடிகை!

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
    பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் முதல் குழந்தைக்கு தாய் ஆகி உள்ளார். இந்த தகவலை அவரது கணவர் நிக் ஜோனஸ் தமது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் நிக்கை டேக் செய்து ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ள பிரியங்கா, "நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்பு நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத...
லிப் லாக் முத்தக் காட்சியில் நடிப்பதற்காக சம்பளத்தை உயர்த்திய நடிகை!

லிப் லாக் முத்தக் காட்சியில் நடிப்பதற்காக சம்பளத்தை உயர்த்திய நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகைகள்
    சினிமா துறையில் கவர்ச்சிக்கும், முத்தக்காட்சிகளுக்கும் மறுத்த பல நடிகைகள் அவர்களுடைய வாய்ப்பை இழந்து பிறகு அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கின்றனர். இந்த பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் தற்போது இணைந்துள்ளார். 2015-இல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக சேர்ந்தவர் அனுபமா. இவர் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான அ ஆ தெலுங்கு படத்தில் சமந்தாவும் அனுபமா பரமேஸ்வரனும் கதாநாயகியாகளாக நடித்தனர். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படம் அனுபமாவிற்கு முக்கிய படமாக அமைந்தது. அதன் பிறகு அவருக்கு வந்த பல படவாய்ப்புகளில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் மற்றும் முத்தக்காட்சிகள் இருந்ததால் அப்படங்களை ...