ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

‘தெருகூத்துக் கலைஞனி’ல் மீண்டும் இணைந்திருக்கும் எல். ராமச்சந்திரன் – விஜய் சேதுபதி கூட்டணி

‘தெருகூத்துக் கலைஞனி’ல் மீண்டும் இணைந்திருக்கும் எல். ராமச்சந்திரன் – விஜய் சேதுபதி கூட்டணி

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ‘தெருகூத்துக் கலைஞனி’ல் மீண்டும் இணைந்திருக்கும் எல். ராமச்சந்திரன் - விஜய் சேதுபதி கூட்டணி விஜய் சேதுபதியின் ‘தெருகூத்து கலைஞன்’ காலண்டர் வெளியீடு தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இது அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகவே தொடர்கிறது. நலிவடைந்து இருக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசாங்கம் மாதந்தோறும் நிதி உதவி அளித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான முனைவர் எல். ராமச்சந்திரன் பிரத்யேக முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். தெருக்கூத்து க...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை ஒரு கும்பல் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தனர். இந்த கும்பலிடம் மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் கதறும் வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி, பொள்ளாச்சி அ.தி.மு.க. நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரேன்பால், பாபு என்ற பைக்பாபு ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வ...
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 38 பேர் பலி

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 38 பேர் பலி

HOME SLIDER, உலக செய்திகள்
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் அரசு நடத்தும் தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுரங்கங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், அந்நாட்டின் மேற்கு கொர்டோபென் மாகாணம் ஃப்ஜா என்ற கிராமத்தில் அரசு நடத்தும் தங்கச்சுரங்கம் செயல்பட்டு வந்தது. அந்த தங்கச்சுரங்கம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் மூடப்பட்டிருந்தது. இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த படையினரும் விலக்கிக்கொள்ளப்பட்டனர். இந்நிலையில், அந்த தங்கச்சுரங்கத்திற்குள் நேற்று அனுமதியின்றி நுழைந்த 50-க்கும் மேற்பட்டோர் தங்கம் எடுக்கும் நோக்கத்தோடு சுரங்கத்தை தோண்டியுள்ளனர். அப்போது, சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில், சுரங்க இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீ...
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நீண்ட நாள் கோரிக்கையான விபிஎஃப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (டிசம்பர் 29) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரு படத்தை திரையரங்கில் டிஜிட்டல் முறையில் திரையிடும்போது, திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டருக்கான கட்டணமாக தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட வேண்டிய கட்டணமே விபிஎஃப் ஆகும். அத்துடன் எல்பிடி (லோக்கல் பாடி டேக்ஸ்) வரியையும் ரத்து செய்து, ஒரே மாதிரி வரி வசூலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கௌரவ ஆலோசகர் டி. ராஜேந்தர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது டி.ராஜேந்தர் பேசுகையில், “அயல்நாடுகளில் பெரும்பாலும் விபிஎஃப் கட்டணம் கிடையாது. இங்கு தயாரிப்பாளர்கள் மீது கட்டணம் ஒரு சுமையாக செலுத்தப்படுகிறது. இந்த கட்டணத்தால் சிறுபட தயார...
சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த அம்மா – மகன் பாசம்: ‘கணம்’ டீஸர் வெளியீடு

சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த அம்மா – மகன் பாசம்: ‘கணம்’ டீஸர் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, டிரைலர்கள், வீடியோ
  சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த அம்மா - மகன் பாசம்: 'கணம்' டீஸர் வெளியீடு வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படி வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது 'கணம்'. இந்தப் படத்தின் டீஸரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது. பல்வேறு திரையுலகினரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஸ்ரீகார்த்திக் இப் படத்தை குறித்து சொன்னதாவது. "அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் தான் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கியுள்ளேன். சின்ன பட்ஜெட் படமாக தொடங்கப்பட்டு, தற்போது சயின்ஸ் ஃபிக்‌ஷன் ம...
கானா பாடல்களால் நிறைந்த கானசபை!

கானா பாடல்களால் நிறைந்த கானசபை!

HOME SLIDER, செய்திகள்
  கானா பாடல்களால் நிறைந்த கானசபை . நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த இந்த ஆண்டிற்க்கான மார்கழியில் மக்களிசை மதுரையில் 18-ஆம் தேதியும், கோவையில் 19-ஆம் தேதியும் நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மார்கழியில் மக்களிசை ஐந்தாவது நாளாக சென்னை கிருஷ்ணா கானா சபாவில் கோலாகலத் திருவிழாவாக "கானா பாடல்கள்" என பெயரிடப்பட்டு நடந்தது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா அவர்கள் "இந்நிகழ்ச்சியில் பாடிய கானா கலைஞர்களை அரசாங்கத்தின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்வேன்" என்றும் கவிஞர் கபிலன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை சிறப்பித்தார். பின்பு கவிஞர் கபிலன் அவர்கள் "இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கு மார்கழி...
எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் இசைஞானி வெளியிட்ட ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் இசைஞானி வெளியிட்ட ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

HOME SLIDER, NEWS
  இசைமேதை' எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி. பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே இறைவனை கொண்டு வந்து நிறுத்திய தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது. திருமாலின் புகழைப் பாடும் வெங்கடேச சுப்ரபாதம்; திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி : 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார். இத்தகைய சிறப்புமிக்க வெங்கடேச சுப்ரபாதத்தை இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் புதிய அத்தியாய...
கட்டில் திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு

கட்டில் திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், வீடியோ
  கட்டில் திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்து விரைவில் வெளிவர இருக்கும் கட்டில் திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பீ.லெனின் கதையில் ‌சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடித்து, ஸ்ரீகாந்த்தேவா இசையில் வைரமுத்து, மதன் கார்க்கி பாடலில் உருவான கட்டில் திரைப்படம் நாளை தொடங்கவுள்ள 19வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=BXQ2aV2qOZI  ...
சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி!

சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி! உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் இந்த நோய் வேகமாக பரவி பலரை காவு வாங்கியது. தற்போது உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பொதுமக்களை மீண்டும் பயமுறுத்தி வருகிறது. சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு தற்போது இருந்து வருகிறது. இதனால் சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான சியான் உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 3 நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு ஒருவர் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால்...
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோவாவில் பிரமாண்ட சிலை!

கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோவாவில் பிரமாண்ட சிலை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோவாவில் பிரமாண்ட சிலை! கால்பந்து என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது சிறப்பான ஆட்டத்தினாலும், கட்டுக்கோப்பான உடற்தகுதி மூலமும் உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தியாவில் வடகிழக்கு மாநிலம் மற்றும் கோவாவில் கால்பந்து விளையாட்டு பிரபலம். இந்தியாவை கிரிக்கெட் ஆக்கிரமித்த போதிலும், இங்கு கால்பந்து விளையாட்டுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. இந்த நிலையில் கோவா மாநிலம் பனாஜியில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிரமாண்ட சிலை நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவா மாநில மந்திரி மைக்கேல் லோபோ கூறுகையில் ‘‘இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும், கால்பந்தை கோவா மாநிலம், இந்தியாவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் இந்த நிலை நிறுவப்பட்டுள்ளது. நம்முடைய குழந்தைக...