புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

ராகுல் காந்திக்கு கொரானா பாதிப்பு..!

ராகுல் காந்திக்கு கொரானா பாதிப்பு..!

HOME SLIDER, NEWS, politics
  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று தனக்கு உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார் https://twitter.com/RahulGandhi/status/1384442319638867969?s=19  ...
ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முன்பதிவு செய்த தரிசன டிக்கெட் 90 நாட்களுக்கு செல்லும் – திருப்பதி தேவஸ்தானம்

ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முன்பதிவு செய்த தரிசன டிக்கெட் 90 நாட்களுக்கு செல்லும் – திருப்பதி தேவஸ்தானம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முன்பதிவு செய்த தரிசன டிக்கெட் 90 நாட்களுக்கு செல்லும் - திருப்பதி தேவஸ்தானம் கொரோனா 2-ம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்தது ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்துள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், தரிசனத்திற்கு வர முடியாமல் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் 90 நாட்களுக்குள் வந்து ஏழுமலை...
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த நாசா ஹெலிகாப்டர்..!

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த நாசா ஹெலிகாப்டர்..!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த நாசா ஹெலிகாப்டர்..! செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் ரேவர் சேகரித்து வருகிறது. பெர்சவரன்ஸ் ரேவருடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இன்ஜெனியூனிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. இந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டரை கடந்த 11-ந் தேதி செவ்வாய் கிரகத்தில் பறக்கவிட நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் மென்பொருள் தொடர்பான பிரச்சினையால், திட்டம் தள்ளிவைக்க...
மருத்துவமனையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்!

மருத்துவமனையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்!

HOME SLIDER, NEWS, politics
மருத்துவமனையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்! முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் கொரோனா தொற்று பரவல் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார் இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல் இறக்க பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர். அதன்படி எடப்பாடி பழனிசாமிக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர் இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஸ் ஆனதை தொடர்ந்து வீட்டில் 3 நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என ...
தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா!

தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தவறான பேசியலால் முகம் வீங்கி போன ரைசா! பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வேலை இல்லா பட்டதாரி 2, தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது த சேஸ், காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர், ஹாஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ரைசா வில்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரைசா வில்சனின் முகம் வீங்கி இருக்கிறது. புகைப்படத்தின் கீழ் ரைசா வில்சன் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் முகத்துக்கு எளிமையான முறையில் 'பேசியல்' செய்ய பெண் அழகுகலை நிபுணரிடம் சென்றேன். அந்த பெண் எனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி சில அழகு செயல் முறைகளை செய்தார். அதன் விளைவாக எனது முகம் வீங்கி விட்டது. நான் தொடர்பு கொண்டபோது என்னை சந்திக்கவோ என்னுடன் ப...
கொரோனா 2-வது அலை எதிரொலி – சசிகுமார் படம் தள்ளிவைப்பு!

கொரோனா 2-வது அலை எதிரொலி – சசிகுமார் படம் தள்ளிவைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கொரோனா 2-வது அலை எதிரொலி - சசிகுமார் படம் தள்ளிவைப்பு! கொரோனா 2-வது அலை உலகம் முழுவதும் உக்கிரமாக பரவி வருகிறது. சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தியேட்டர்களில் பார்வையாளர்கள் 50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சசிகுமார், சத்யராஜ், சமுத்திரகனி, மிர்ணாளினி ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் எம்.ஜி.ஆர்.மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விரைவில் தியேட்டரில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்....
காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்!

காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்! பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். மேலும் வீரமாதேவி என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில், யுவன் இயக்கும் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தினை வி4யு மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை, பெரம...
தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்!

தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் பகலில் கூடுதல் பஸ்கள் இயக்கம்!   நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை (20-ந்தேதி) முதல் இரவுநேர ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள், அரசு பஸ்கள், வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவுநேர பஸ்களுக்கு தடை விதிக்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களுக்...
ஆம்பூர் அருகே வெள்ளை காகம்

ஆம்பூர் அருகே வெள்ளை காகம்

HOME SLIDER, NEWS
ஆம்பூர் அருகே வெள்ளை காகம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குள்பட்ட வன்னியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரது வீட்டின் அருகில் நேற்று மாலை வெள்ளை நிறமுடைய காகம் ஒன்று இரை தேடிவந்து தஞ்சம் அடைந்துள்ளது இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வெள்ளை காகம் சுவரின் மீது அமர்ந்திருக்கும் காட்சிகளைக் காணொலியாகவும், புகைப்படமாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்....
தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு…

தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு…

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இன்று 4 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… தமிழகத்தில் வெளியில் கொளுத்தி வரும் நிலையில், 4 தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடல் பகுதிகளில் 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகம் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி)  ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 20.4.2021 முதல் 22.4.2021 : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய...