பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை இமானுவேல் மேக்ரோன் அடுத்து 7 நாள் தனிமைப்படுத்திக் கொண்டார்.
சபரிமலையில் 20ம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்
சபரிமலையில் தினமும் 5000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது.
நவம்பர் 17-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ள ஐந்து நாட்கள் தினமும் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்களும், மகரவிளக்கு அன்று 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஆன்லைன் புக்கிங் கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. புக்கிங் தொடங்கிய 2 மணி நேரத்தில் அனைத்து நாள்களுக்கு...
அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட் 4 மாதங்களில் 4 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29 ஆயிரத்து 437 கோடி) 384 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அப்போது அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தனது மனைவி மெக்கன்சிக்கு ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் அப்போதைய மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் கோடி ஆகும். தற்போது மெக்கன்சியின் சொத்து மதிப்பு 60.7 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது.
இதன் மூலம் அவர் உலகின் 18-வது பணக்காரராகவும், உலக அளவில் பெண்க...
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேர் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிவடைகிறது.
விடுமுறை மற்றும் நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று அவரது வக்கீல்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது தண்டனை காலம் முடிந்து ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட இருக்கிறார். இந்த தகவலை கர்நாடக சிறைத்துறை ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்து உள்ளது.
இதனிடையே சசிகலா, இளவரசி 2 பேரும் விசாரணை கைதியாக 33 நாட்கள் சிறையிலிருந்தார்கள். அந்த 33 நாட்கள் மற்றும் சசிகலா 2 முறை பரோலில் சென்ற 17 நாட்கள் கழித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலையாக வாய்ப்ப...
3 நாள் விசா...
ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு
ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார். கைலாசா தொடர்பான பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின.
கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார். விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசுவது போன்ற ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கைலாசா நாட்டிற்கு வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாகவும், இதற்காக 3 நாட்கள் கொண...
டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நாளை (18-ந்தேதி) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்துக்கு முறைப்படி போலீசாரிடம் அனுமதியும் கேட்டுள்ளனர்.
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டங்கள் நடைபெறும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க தி.மு.க. சார்பில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இது தொடர்பான கடிதமும் தி.மு.க.வுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போலீஸ் தடையை மீறி நாளை திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடத்த தி.மு.க...
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா ...
எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக்கொள்ள துடிப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும் - கொதித்த கமல்
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் , மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ள கமல்ஹாசன், மதுரை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் என மாவட்டவாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மக்கள் மத்தியில் பேசிய கமல் ஹாசன், “மக்கள் திலகம் எம்ஜிஆர் எங்கள் சொத்து. அவர் மடியில் அமர்ந்தவன் நான்” என தெரிவித்தார். முன்னதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், எம்ஜிஆரிடமிருந்து விருது வாங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கமலின் நெற்றில் எம்ஜிஆர் முத்தமிடும் நெகிழ்ச்சியான காட்சியும் இடம்பெற்றுள்ளது
இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி பரப்புரை செய்யும் க...
2021 ம் வருடத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் 2021 ஆம் வருடத்தில் ஐரோப்பாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது. உலகிலுள்ள நாடுகளில் ஒரு சிலவற்றில் கொரோனா நோயின் இரண்டாம் மூன்றாம் நிலைகள் உக்கிரமடைந்துள்ளது. இதானால் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மீண்டும் பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கிறிஸ்துமஸ் விழா வரவிருப்பதால் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமடையும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் “மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் விழாவை கொண்டாடுங்கள், மேலும் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்” என்றும் அறிவுறுத்தியுள்ளது....
ஓடிடியில் வெளியாகி அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் டாப் 10-ல் 3 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் சில புதிய திரைப்படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டது. அதன்படி முதலில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடியில் வெளியானது .இதையடுத்து தொடர்ந்து பல்வேறு மொழி படங்களும் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் டாப் 10-ல் 3 தமிழ் படங்கள் இடம் பெற்றுள்ளது
அதில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் 2-வது இடத்திலும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ 8-வது இடத்திலும் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ 10-வது இடத்திலும் உள்ளன. மேலும் ம...