ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

கொரானா சிக்கலில் பாலைவனத்தில் சிக்கிய நடிகர் மீண்டும் நாடு திரும்பினார்!

கொரானா சிக்கலில் பாலைவனத்தில் சிக்கிய நடிகர் மீண்டும் நாடு திரும்பினார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கொரானா சிக்கலில் பாலைவனத்தில் சிக்கிய நடிகர் மீண்டும் நாடு திரும்பினார். பிரித்விராஜ், ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக பிருத்விராஜ் உள்பட படக்குழுவை சேர்ந்த 58 பேர் கொரோனா ஊரடங்குக்கு முன்பே ஜோர்டான் சென்று விட்டனர். அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவன பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது ஊரடங்கை அறிவித்து விமான போக்குவரத்தை நிறுத்தியதால் அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை. பாலைவன பகுதியில் தங்கி இருப்பதாகவும், நல்ல உணவு கிடைக்கவில்லை என்றும் ப்ரித்விராஜ் உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார். அவரை மீட்டு வரும்படி கேரள அரசுக்கு மலையாள திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு முடியாது என்று கைவிரித்து விட்டது. இந்த நிலையில் ஜோர்டானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்பியது. இந்த...
கொரானா கால ஊழலை அம்பலப்படுத்தியதால் RS.பாரதி கைது- ஸ்டாலின் கண்டனம்

கொரானா கால ஊழலை அம்பலப்படுத்தியதால் RS.பாரதி கைது- ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா கால ஊழலை அம்பலப்படுத்தியதால் RS.பாரதி கைது- ஸ்டாலின் கண்டனம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடி போன்றவர்களின் கைது சலசலப்புக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை தூசுதட்டி எடுத்து அதிகாலையில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது செய்திருக்கிறார். அன்பகம் உள்ளரங்கத்தில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி, அது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்து மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேல...
ஆர்.எஸ்.பாரதி கைது… பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமி… திமுக பரபரப்பு!

ஆர்.எஸ்.பாரதி கைது… பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமி… திமுக பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஆர்.எஸ்.பாரதி கைது... பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமி... திமுக பரபரப்பு! தி.மு.க. அமைப்பு ஆர்.எஸ்.பாரதி இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு ஆர்.எஸ். பாரதி பேசிய போது சர்ச்சை கருத்தை பேசியதால் கைதாம். அந்த கூட்டத்தில் அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆர்.எஸ். பாரதி மீது தேனாம்பேட்டை போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பா...
கேரள கோழிகள் போடும் பச்சை முட்டை.. விடை தெரியா வினோதம்!

கேரள கோழிகள் போடும் பச்சை முட்டை.. விடை தெரியா வினோதம்!

HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கேரள கோழிகள் போடும் பச்சை முட்டை.. விடை தெரியா வினோதம்! கேரளாவை சேர்ந்த சில கோழிகள் போடும் முட்டையின் மஞ்சள் கருவானது வழக்கத்துக்கு மாறாக மஞ்சள் நிறத்தில் இல்லாமல் பச்சை நிறத்தில் உள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மலபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷிஹாபுதீன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது கோழி பண்ணையில் வளரும் ஒரு கோழியின் முட்டையை உடைத்து அதை வீடியோவாக வெளியிட அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. காரணம் அந்த முட்டையின் மஞ்சள் கரு பச்சை நிறத்தில் இருந்ததுதான் இதுகுறித்து ஷிஹாபுதீன் கூறுகையில், ஒருநாள் கோழியின் முட்டை ஒன்றை சமைப்பதற்காக உடைத்தபோது மஞ்சள் கரு பச்சை நிறத்தில் இருந்தது. அதனால் நாங்கள் அதனை சாப்பிடவில்லை. பின்னர் அந்த கோழியின் முட்டைகளை அடைகாக்க வைத்தபோது அதில் இருந்து வெளிவந்த கோழி குஞ்சுகளும் தற்போது வளர்...
மீண்டும் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் களமிறங்கும் விஷால் டீம்!

மீண்டும் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் களமிறங்கும் விஷால் டீம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    மீண்டும் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் களமிறங்கும் விஷால் டீம்! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதற்கு முன்பே சங்கத்தை அரசு தன் வசப்படுத்தியது. தனி அதிகாரி நியமிக்கப்பட்ட நிலையில் சங்க தேர்தலை நடத்த உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் ஜூன் மாதம் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியான நிலையில் கொரானா ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதே நேரம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் போட்டியிட அறிவிப்புகள் வந்தது. ஏற்கனவே பதவியில் இருந்த விஷால் தலைமையிலான அணி எந்த கருத்தையும் சொல்லாமல் அமைதி காத்தது. இந்த சூழலில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்போது விஷால் தலைமையிலான அணியில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ம...
கொரானா வார்டில் டூ பீஸ் உடை அணிந்த நர்சுக்கு மாடலிங் வாய்ப்பு!

கொரானா வார்டில் டூ பீஸ் உடை அணிந்த நர்சுக்கு மாடலிங் வாய்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள துலா நகர அரசு ஆஸ்பத்திரியில் கொரானா வைரஸ் வார்டில் பணி புரிந்த இளம் நர்ஸ் உள்ளாடைகள் மட்டும் அணிந்து அதற்கு மேல் கவச உடை அணிந்து பணியாற்றிய விவகாரம் உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷியாவில் இப்போது கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.இதன் காரணமாக அந்த இளம் நர்ஸ் ‘டூபீஸ்’ நீச்சல் உடை அணிந்து, அதன் மேல் கொரானா வைரஸ் வார்டில் பணிபுரிவதற்கு உரிய பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார். அவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. சுகாதாரம் மற்றும் தோற்றத்துக்கு இணங்க நர்சுகள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. நர்ஸ் டூ பீஸ் உடை அணிந்து பணியாற்றிய ஆண்கள் வார்டில் எந்த புகாரும் வராததால் நர்ஸ் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதே நேரத்தில் சமூக வலை...
ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி!

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி* இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது 'டிஜி பிலிம் கம்பெனி' என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மாவுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான...
பரபரப்பான சூழலில் WHO தலைமை பதவி இந்தியா வசம்… நெருக்கடியில் சீனா!

பரபரப்பான சூழலில் WHO தலைமை பதவி இந்தியா வசம்… நெருக்கடியில் சீனா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  பரபரப்பான சூழலில் WHO தலைமை பதவி இந்தியா வசம்... நெருக்கடியில் சீனா! ஐ..நா.-வின் உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, இந்த வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், மே 22-ம்தேதி பதவியேற்க உள்ளதாகவும் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக இந்தியாவின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். 34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்குவார்....
தரையிறங்கும் போது வீடுகளின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து சிதறிய பயணிகள் விமானம்… பாக்., சோகம்!

தரையிறங்கும் போது வீடுகளின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து சிதறிய பயணிகள் விமானம்… பாக்., சோகம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  தரையிறங்கும் போது வீடுகளின் மீது நொறுங்கி வெடித்து சிதறிய பயணிகள் விமானம்... பாக்., சோகம்! பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே இன்று, பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் 107 பயணிகள் பயணம் செய்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்  ...
தத்தெடுத்த தஞ்சாவூர் கார்காவயல் கிராமத்தினருக்கு விஷால் நிவாரண உதவி!

தத்தெடுத்த தஞ்சாவூர் கார்காவயல் கிராமத்தினருக்கு விஷால் நிவாரண உதவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    சத்தமில்லாமல் தன் அம்மாவின் பெயரில் தான் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் வறுமைக்கு உடப்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய விஷால். நடிகர் விஷால் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், ரயிலில் பயணம் செய்பவர்களிடம் சிறு வியாபாரம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார் இதற்கான ஏற்பாடுகளை தேவி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும், மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் செய்துவருகிறார், அதுமட்டுமின்றி விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். விஷால் தத்து எடுத...