சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்… ஷாக் ஆன விஜய்!

திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்… ஷாக் ஆன விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்... ஷாக் ஆன விஜய்! விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் அறிவித்த நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஷூட்டிங் போனது. விஜய்சேதுபதி வில்லனாக மோதும் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி கலந்து கொண்டபோது விஜய்சேதுபதி திடீரென விஜய்யை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாராம் வழக்கமாக விஜய்சேதுபதி தனது ரசிகர்களை சந்திக்கும் போதும் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கம். அதேபோல விஜய்யையும் கட்டிப்பிடித்து எதிர்பாராதவிதமாக முத்தம் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்த சம்பவத்தை பார்த்த படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய்  இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விஜய்சேதுபதிக்கு நன்றி கூறியுள்ளா...
அஜீத்துக்கு ஷூட்டிங்கில் காயம்…?! தள்ளி வைக்கப்பட்ட வலிமை!

அஜீத்துக்கு ஷூட்டிங்கில் காயம்…?! தள்ளி வைக்கப்பட்ட வலிமை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்துக்கு ஷூட்டிங்கில் காயம்...?! தள்ளி வைக்கப்பட்ட வலிமை! நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் இணைந்திருக்கிறார் அஜீத். இந்த படத்தில் அஜீத் ஜோடி யார், வில்லன் யார் என்பதெல்லாம் அறிவிக்கப்படவில்லை. ஷூட்டிங் மட்டும் நடந்து வந்தது. இந்த நிலையில் வலிமை ஷூட்டிங்கை 2 மாதம் தள்ளி வைத்து விட்டாராம் அஜீத். அஜீத் ஷூட்டிங் நேரம் போக மற்ற நேரங்களில் குட்டி விமானங்களை இயக்கும் ஆர்வம் உள்ளவர். அதோடு பைக் ஓட்டுவது அஜீத்துக்கு ரொம்ப பிடிக்கும். வலிமை படத்திலும் பைக் ரேஸ் காட்சிகள் இடம் பெற்று உள்ளதாம். அப்படி ஒரு காட்சி படமாக்கும் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதால்தான் வலிமை ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டதாம். ரசிகர்களும் கெட்வில் சூன் தல என சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்து வருகின்றனர். அதே நேரம் அஜீத் காட்சிகள் முடிந்து மற்ற நடிகர்கள...
6 பிளஸ் 23 ஆண்டுகள்… அழகான ஒரு மில்லியன் தருணங்கள்… காதல் திருமண நாளை பகிர்ந்த பிரியங்கா!

6 பிளஸ் 23 ஆண்டுகள்… அழகான ஒரு மில்லியன் தருணங்கள்… காதல் திருமண நாளை பகிர்ந்த பிரியங்கா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  6 பிளஸ் 23 ஆண்டுகள்... அழகான மில்லியன் தருணங்கள்... காதல் திருமண நாளை பகிர்ந்த பிரியங்கா! காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ராபர்ட் வதேராவை 6 ஆண்டு காலம் காதலித்து, பின்னர் மணந்தார். இவர்களது திருமணம், குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் எண்.10, ஜன்பத் இல்லத்தில் 1997-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ந் தேதி நடந்தது. பிரியங்கா, ராபர்ட் வதேரா தம்பதியர் நேற்று தங்களது 23-வது திருமண நாளை கொண்டாடினர். அதில் அவர், “ ஒரு மில்லியன் அழகான தருணங்கள்... காதல், கண்ணீர், சிரிப்பு, செல்ல கோபம், நட்பு, குடும்பம், இறைவனின் 2 அன்புப்பரிசுகள் .. ஒப்பிட முடியாத நாய்குட்டிகள்... இருவரும் இணைந்த வாழ்நாளில் ஈடுசெய்ய முடியாத உறுதியான ஞானம்... 6 பிளஸ் 23 ஆண்டுகள்.. 29 ஆண்டுக...
அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளி – பெண்களை கேவலமாக சித்தரித்த குஜராத் சாமியாரின் சர்ச்சை பேச்சு

அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளி – பெண்களை கேவலமாக சித்தரித்த குஜராத் சாமியாரின் சர்ச்சை பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளி - பெண்களை கேவலமாக சித்தரித்த குஜராத் சாமியாரின் சர்ச்சை பேச்சு மாதவிடாய் காலத்தில் பெண்கள் சமையல் செய்தால் அவர்கள் அடுத்த பிறவியில் பாலியல் தொழிலாளியாக பிறப்பார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குஜராத் குருஷனஸ்வரப் தாஸ்ஜி என்ற சாமியாருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குஜராத்தின் பூஜ் நகரில் ஸ்ரீ சஹ்ஜானந்த் என்ற பெண்கள், கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகள், மாதவிடாய் காலங்களில் பூஜை அறைக்குச் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், அங்கே படிக்கும் 60 மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற சொல்லி காட்டுமிராண்டி தனமாக கல்லூரி நிர்வாகம் சோதனை செய்துள்ளது என சில நாட்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்வி நிறுவனத்தின் இந்த அத்துமீறிய அயோக்கியத்...
மாஃபியா மிக வித்தியாசமான அனுபவமாக ரசிகர்களுக்கு இருக்கும்!

மாஃபியா மிக வித்தியாசமான அனுபவமாக ரசிகர்களுக்கு இருக்கும்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக உள்ள படம் “மாஃபியா”. துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் “மாஃபியா - பாகம் 1” படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவாணி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டீஸர், டிரெயலர் படு பயங்கர வரவேற்பை பெற்ற நிலையில் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் அருண் விஜய்யின் 25 வருட வெற்றிகரமான சினிமா பயணத்தை பாராட்டி வகையில் ரசிகர்கள் மேடையில் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்வில் படக்குழு மாஃபியா பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டது. பாடலாசிரியர் விவேக் பேசியது... முதன் முதலில் துருவங்கள் பதினாறு படத்தில் வேலை செய்தபோதே இயக்குநர் கார்...
CAA சட்டத்தால் பாதிப்பா… நிரூபித்தால் 1 கோடி ரொக்கம் தருதாம் தமிழக பாஜக!

CAA சட்டத்தால் பாதிப்பா… நிரூபித்தால் 1 கோடி ரொக்கம் தருதாம் தமிழக பாஜக!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சிஏஏ சட்டத்தால் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக பாஜகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். கடந்த ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும், கலவரங்களையும் எதிர்கொள்ள செய்தது. பல இளைஞர், மாணவர்கள் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் சிஏஏவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கேரளா, புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்த பாஜகவினர் சிஏஏ விளக்க பிரச்சார கூட்டங்களை நாடு முழுவதிலும் நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை பகுதியில் CAA எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவியது. பின்னர்...
சச்சினுக்கு விளையாட்டில் புகழ் பெற்ற லாரியஸ் விருது… பெர்லின் விழாவில் கவுரவிப்பு!

சச்சினுக்கு விளையாட்டில் புகழ் பெற்ற லாரியஸ் விருது… பெர்லின் விழாவில் கவுரவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சச்சினுக்கு விளையாட்டில் புகழ் பெற்ற லாரியர்ஸ் விருது... பெர்லின் விழாவில் கவுரவிப்பு! விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது. அவ்வகையில் 2019- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வானது. அந்த விருதை சச்சின் பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக்  இந்த விருதை வழங்கினார். விருது பெற்ற பின் பேசிய சச்சின் டெண்டுல்கர், “இது மிகவும் சிறப்பு மி...
TNPC முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை உண்டு – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

TNPC முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை உண்டு – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப் பேரவையில்  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம்  
முட்டாள்தனமாக கருத்து சொல்லும் RSS தலைவர் – வெளுத்த நடிகை

முட்டாள்தனமாக கருத்து சொல்லும் RSS தலைவர் – வெளுத்த நடிகை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  அதிகரிக்கும் விவாகரத்து ஆர்.எஸ் எஸ் தலைவர் மோகன் கருத்துக்கு பிரபல நடிகை கடும் எதிர்ப்பு! விவாகரத்து பெறுவது என்பது மிக அதிகமாகி வரும் நிலையில் இந்த விவாகரத்துக்கு கல்வியும் வசதியும் தான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் கூறியுள்ளார்   திருமண உறவுகளில் விவாகரத்து ஏற்படுவது என்பது படித்தவர்கள் மற்றும் வசதி படைத்தவர்களின் மத்தியில் மட்டும் தான் என்றும், ஏழை எளியவர்கள் மற்றும் கல்வி கற்காதவர்கள் விவாகரத்து செய்வதில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்த கருத்து குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள நடிகை சோனம் கபூர் ”அறிவுள்ள எந்த மனிதரும் இப்படிப் பேசுவார்களா? இந்த கருத்து முட்டாள்தனமான பிற்போக்கான கருத்து” என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார் ஆர்எஸ்எஸ் தலைவரின் திருமணம் விவாகரத்து கு...
மார்ச் 3ல் தூக்கு… நிர்பயா கொலைக்கு கோர்ட் தீர்ப்பு!

மார்ச் 3ல் தூக்கு… நிர்பயா கொலைக்கு கோர்ட் தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    நிர்பயா கொலை குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட கோர்ட் உத்தரவு! டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் அக்சய் தாகூர், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், பின்னர் பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தண்டனையை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக்கோரி, திகார் சிறை நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோர் சார்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளான 4 பேரையும் மார்ச் 3-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள...