சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

கலர்புல் காதலா ஓ மை கடவுளே – கோடங்கி விமர்சனம்

கலர்புல் காதலா ஓ மை கடவுளே – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கலர்புல் காதலா ஓ மை கடவுளே - கோடங்கி விமர்சனம் அறிமுக இயக்குனர் அஷ்வந்த் காதலர் தினத்திற்கு கொடுத்திருக்கும் படம்தான் ஓ மை கடவுளே... அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா ஆகியோருடன் சிறப்பு தோற்றம் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம். சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருப்பவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் அந்த கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை புதுசாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் அஷ்வந்த். அதே நேரம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொண்ட மனிதனின் நிலை எப்படி இருக்கும் என்பதையும், இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகும் என்பதையும் குழப்பம் இல்லாமல் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர். அசோக் செல்வன் பெரும்பாலும் நல்ல கதைகளை தேடித் தேடி நடித்து வருகிறார். இதுவும் அவருக்கு பிடித்து ரசிகர்களிடமும் நல்ல பேரை...
நடு வானில் பாடல்… என் 20 வருட சினிமாவில் இதுதான் பெஸ்ட் “சூரரைப் போற்று” சூர்யா நெகிழ்ச்சி!

நடு வானில் பாடல்… என் 20 வருட சினிமாவில் இதுதான் பெஸ்ட் “சூரரைப் போற்று” சூர்யா நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    70 குழந்தைகளுடன் நடுவானில் வெளியிடப்பட்ட 'சூரரைப் போற்று' படத்தின் ஒரு பாடல். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் 'சூரரைப் போற்று' படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான 'வெய்யோன்சில்லி' என்று தொடங்கும் பாடல் நடுவானில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் சூர்யா இருவரும் வெளியிட்டனர். இதுகுறித்து நடிகர் சூர்யா கூறியதாவது :- எனது 20 வருட சினிமாவில் இந்த படத்தை தான் முக்கியமாக கருதுகிறேன். இப்படம் சிறப்பாக வருவதற்காக இயக்குநர் சுதா 10 வருடங்கள் உழைத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. மேலும், சுமார் 30 நிமிட காட்சிகள் விமானத்தில் எடுக்கப்பட்டது. அதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனதிற்கு மட்டும் நன்றி கூற முடியாது. படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒவ்வொரு குழுவ...
பறக்கும் விமானத்தில் சூரரைப் போற்று பாடல் வெளியிட திட்டம்!

பறக்கும் விமானத்தில் சூரரைப் போற்று பாடல் வெளியிட திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில், அரசுப் பள்ளியில் பயிலும் 100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்ல சூரரை போற்று படக்குழு முடிவு எடுத்துள்ளது. விமான நிறுவனம் தொடங்குவது தொடர்பான கதை களத்தில் சூர்யா நடிக்கிறார். இதனால் பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்ல படக்குழு முடிவு எடுத்தது. அதன்படி அகரம் பவுண்டேசன் சார்பில் சுமார் 100 மாணவ, மாண...
வாழ்த்திய பா.சிதம்பரத்தை வசைபாடிய முன்னாள ஜனாதிபதி மகள்..!

வாழ்த்திய பா.சிதம்பரத்தை வசைபாடிய முன்னாள ஜனாதிபதி மகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்தது. பா.ஜனதா 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது. அந்த கட்சியை சேர்ந்த 63 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவினாலும், அந்த கட்சினர் பா.ஜனதா வெற்றியடையாததற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரமும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த டுவிட்டர் பதிவை வைத்து காங்கிரசை கேலி செய்யும் விதமாக ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை, உங்களை தோற்கடித்ததற்காக இந்த நன்றியா என்று பலர் கேலி விமர்சனங்களை முன்வைத்தனர். ப.சிதம்பரத்தின் கருத்து தொடர்பாக விமர்சனங்கள் ஒரு பக்கம் பறந்து கொண்டிருக்க முன்னாள்...
ஜூன் 30ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்த ஐகோர்ட்டு உத்தரவு!

ஜூன் 30ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்த ஐகோர்ட்டு உத்தரவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ஜூன் 30ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்த ஐகோர்ட்டு உத்தரவு! தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது. தனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்ததுவிட்டது. மேலும் சேகர் என்பவர் பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் பணிமாறுதல் ஆனதால், அந்தப் பதவிக்கு புதிய சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. மேலும், இவர் ஒரு வருட காலமாக நீடிப்பார் எனவும் அரசாணை பிறப்பித்தது இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரண...
மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள ஒரு குட்டிக்கதை பாடல் சர்ச்சையை கிளப்புமா?

மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள ஒரு குட்டிக்கதை பாடல் சர்ச்சையை கிளப்புமா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள ஒரு குட்டிக்கதை பாடல் சர்ச்சையை கிளப்புமா? விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது. பிகில் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் முதன்முறையாக பாடிய வெறித்தனம் பாடல் பட்டி தொட்டி எங்...
தோல்வி பயத்தால் மேடை நாகரீகம் கூட இல்லாமல் எதிரணி வேட்பாளர்களை “மயிரு… நாய்.,. முண்டம்” என ஏகவசனத்தில் பேசும் ராதாரவி!

தோல்வி பயத்தால் மேடை நாகரீகம் கூட இல்லாமல் எதிரணி வேட்பாளர்களை “மயிரு… நாய்.,. முண்டம்” என ஏகவசனத்தில் பேசும் ராதாரவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தோல்வி பயத்தால் மேடை நாகரீகம் கூட இல்லாமல் எதிரணி வேட்பாளர்களை "மயிரு... நாய்.,. முண்டம்" என ஏகவசனத்தில் பேசும் ராதாரவி! தென்னிந்திய டப்பிங் யூனியன் சங்கத்தில் பல ஆண்டுகளாக பதவி சுகம் அனுபவித்து வருபவர் ராதாரவி. இதே போல நடிகர் சங்கத்தில் பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் பதவியில் இருந்த ராதாரவியை விஷால் தலைமையிலான அணி மண்ணை கவ்வ வைத்தது. அதோடு நடிகர் சங்கத்துக்கு இலவசமாக வந்த வேங்கட மங்கலம் நிலத்தை மோசடியாக விற்று ஏமாற்றிய விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்ததோடு ராதாரவி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அந்த மோசடி வழக்கில் தனக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என தெரிந்ததால் தன்னை பாதுகாத்துக் கொள்ள மத்தியில் ஆளும் பிஜேபியில் போய் சேர்ந்து கொண்டார் ராதாரவி. இந்த நிலையில் டப்பிங் யூனியன் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி மனு செய...
டெல்லியில் மண்ணைக்கவ்விய பாஜக… மீண்டும் மகுடம் சூடிய ஆம் ஆத்மி!

டெல்லியில் மண்ணைக்கவ்விய பாஜக… மீண்டும் மகுடம் சூடிய ஆம் ஆத்மி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெற்று உள்ளோம் - வெற்றி மகிழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது.  இதில் 62.59 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி கண்ட நிலையில் தற்போது அக்கட்சி 63  தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களையே கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், டெல்லி முதல்-மந்தி...
எதற்கும் மனம் தளராத தொண்டர்கள் என் பக்கம் இருக்கும் வரை எப்போதும் வெற்றிதான் – விஜயகாந்த்

எதற்கும் மனம் தளராத தொண்டர்கள் என் பக்கம் இருக்கும் வரை எப்போதும் வெற்றிதான் – விஜயகாந்த்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    எதற்கும் மனம் தளராத தொண்டர்கள் என் பக்கம் இருக்கும் வரை எப்போதும் வெற்றிதான் - விஜயகாந்த் தே.மு.தி.க.வின் 20-வது ஆண்டு கொடி நாளையொட்டி, சென்னை  உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் 118 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் நாளை(புதன்கிழமை) கட்சிக் கொடியை ஏற்றுகிறார். இதையொட்டி கட்சி தொண்டர்களை விஜயகாந்த் வெகுவாக பாராட்டி உள்ளார். இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி தொண்டர்களுக்கு எழுதும் கடிதம் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2000-ம் ஆண்டு நம் ரசிகர் மன்றத்திற்கு கொடி வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று 12-02-2000 அன்று சிவப்பு, மஞ்சள், கருப்பு, என்ற மூவர்ணத்துடன் நீலநிறத்தில் ஜோதியை கையில் ஏந்திய நம் கொடியினை அறிமுகப்படுத்தினோம். கொடியை அறிமுகப்படுத்தியவுடன் பட்டி, தொட்டி எங்கும் நம் கொடி பட்...
ரசிகர்கள் கூட்டத்தில் தான் எடுத்த செல்பி படத்தை வெளியிட்டு இணையத்தை கலக்கிய விஜய்..!

ரசிகர்கள் கூட்டத்தில் தான் எடுத்த செல்பி படத்தை வெளியிட்டு இணையத்தை கலக்கிய விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக அடுத்த 3 நாட்களில் நேரில் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனிடையே படப்பிடிப்பின்போது அவ்வப்போது ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து வந்த நடிகர் விஜய் நேற்று (ஞாயிற்று...