HOME SLIDER
“அழகை வெளிப்படுத்துவதற்கு வயது ஒரு தடையேயில்லை” ; பேரழகி சச்சு கொடுக்கும் டிப்ஸ்..!
'கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ்' சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ'. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சீனியர் நடிகை சச்சு இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்..
படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.
ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். அதன்பின் படத்தில் நடக்க...
நெடுநல்வாடை படத்திற்கு கிடைத்த முதல் விருது!
பூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15 ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைவராலும் பாராட்டப்பட்ட படம் " நெடுநல்வாடை "
26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட Innovatie Film Acadamy ( IFA) சார்பில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் " நெடுநல்வாடை " கலந்துகொண்டு அனைவரது பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளது .
விருது கிடைத்த மகிழ்ச்சியில் இயக்குனர் செல்வக்கண்ணன் விழாவில் பேசியதாவது..
ரொம்ப பெருமையா இருக்கு இவ்வளவு பெரிய, பல நாடுகளில் இருந்து, பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குனர்கள், சினிமாத்துறையில் இருந்து வந்திருப்போர்கள் முன்னாடி எங்கள மாதிரி புதியவர்கள் நிக்கிறோம்கிறது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எங்களை அங்கீகரித்த Innovatie Film Acadamy ( IFA) க்கு ரொ...
பாம்பின் சாகச காட்சிகள்…. குழந்தைகளை மகிழ்விக்க வரும் ’நீயா 2’
ஜெய், கேத்தரின்தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படம் 'நீயா2'. இவர்களைத் தவிர இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது கருநாகம் தான் பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் பாம்பின் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் நிறைந்திருக்கும். அந்த பாம்பை பற்றியும், கிராபிக்ஸ் பற்றியும் கிராபிக்ஸ் நிபுணர் வெங்கடேஷ் கூறியது:
தற்போது சின்னத்திரையில் பல தொடர்கள் பாம்பை மையமாக வைத்து வருகிறது. அதனுடைய சாயல் வெள்ளித்திரையில் இருக்கக் கூடாது என்பதற்காகவும், அதற்கு வேறுபட்டும் பிரம்மாண்டமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தோனேசியாவிற்கு சென்று அங்கிருக்கும் கருநாகத்தின் பயிற்சியாளரை சந்தித்து பாம்பைப் பற்றிய தகவல்களை சேகரித்தோம். இந்திய அளவில் சுமார் 20 அடி முதல் 28 அடி வரை இந்த பாம்பு இருக்கும். படத்திற்காக நாங்கள் 25 அடி பாம்பை தேர்வு ...
டூ பீஸ் உடையில் படுத்தபடி ரசிகர்களை சூடேற்றும் உடுக்கை பட நாயகி…!
டூ பீஸ் உடையில் படுத்தபடி ரசிகர்களை சூடேற்றும் உடுக்கை பட நாயகி...!
ரேணிகுண்டா, மீகாமன், அசுரவதம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். இவர் அடுத்து நடிக்கும் படம் உடுக்கை. தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கும் கிரைம் திரில்லராக இந்த படம் உருவாகிறது.
படம் பற்றி இயக்குனர் எம்.ஆர்.பாலமித்ரன் கூறும்போது, ‘தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பல நன்மைகளை கொடுத்தாலும் சில ஆபத்துகளும் நமக்கு ஏற்பட்டுள்ளன. இதை புதுமையான அன்பு, அதிர்ச்சி, அதிரடி, திகில் கலந்த கதையாக உருவாக்கி இருக்கிறோம். இப்படத்தில் சஞ்சனா சிங் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர இருக்கிறார் என்கிறார்.
படத்தில் மட்டுமல்லாமல் சமீபத்தில் தனது சமூகவலைதள பக்கத்தில் கடற்கரை மணலில் மிக செக்சியாக டூ பீஸ் பிகினி உடை அணிந்தபடி கிளாமர் ஸ்டில் எடுத்து பதிவிட்டிருந்தார். இந்த படங்களை பார்த்தவ...
மோசடிக்காரர்களை மக்கள் ஒருபோதும் மன்னிப்பதில்லை அமேதி மக்கள் மோடிக்கு தக்க பதில் அளிப்பார்கள் – பிரியங்காகாந்தி
மோசடிக்காரர்களை மக்கள் ஒருபோதும் மன்னிப்பதில்லை அமேதி மக்கள் மோடிக்கு தக்க பதில் அளிப்பார்கள் - பிரியங்காகாந்தி
உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது நன்மதிப்பை சீர்குலைப்பதற்காக ரபேல் விமான ஒப்பந்தத்தில் ராகுல் காந்தி தன்னை குற்றம்சாட்டி வருவதாக தெரிவித்தார்.
உங்கள் (ராகுல் காந்தி) தந்தை ராஜீவ்காந்தி நேர்மையானவர் என்று அவரது விசுவாசிகளால் கூறப்பட்ட நிலையில் அவர் தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் ஊழலில் ‘நம்பர் ஒன்’னாக திகழ்ந்தார் என்று கடுமையாக இறந்து போன ஒரு தலைவரை பற்றி விமர்சனம் செய்தார்.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டதை சுட்டிக்காட்டி மோடி இவ்வாறு பேசினார்.
இறந்துப்போன ஒரு தலைவரை அதிலும் மிக கொடூரமாக குண்டு வைத்து கொல்லப்பட்ட ஒரு தலைவரைப் பற்றி இவ்வாறு பேசிய பிரதமர் மோடி பேசியது குறித...
காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டும் கோமாளி ஆன ஜெயம் ரவி..!
ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்தி வந்த ரொம்ப ஆர்வத்துடன் மீண்டும் முழு நீள காமெடி படத்தில் நடிக்கிறார். கோமாளி என்று பெயரிடப்பட்ட படத்தில்
ஜெயம் ரவி 9 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். , 90களின் பின்னணியில் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
யோகிபாபு ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகராக இல்லாமல், ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க இருப்பார். கே.எஸ்.ரவிகுமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்..
காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டுகிறார்களாம். ஒரு பாடல் காட்சியில்... ஏற்கனவே குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் இருந்த தமிழ் சினிமா இப்போது காஜல் அகர்வாலுக்கு கற்பனையில் கோயில் கட்டுகிறதாம்.
இந்த படத்தை வேல்ஸ் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
பைசா நோட்டு’ பாடல் அதன் இசைக்காகவவும், தயாரிப்புக்காகவும் நிச்சயம் பேசப்படும். இது ஒரு கற்பனை பாடல...
நான் அதிகம் சம்பளம் கேட்கிறேனா – யோகிபாபு விளக்கம்
நான் அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறுவது பொய் – யோகிபாபு "தர்ம பிரபு"
யுகபாரதி பேசும்போது,
என் நண்பர் தயாரிப்பாளராகியிருப்பது மகிழ்ச்சி. நகைச்சுவைக்கு இவரைத் தவிர ஆள் இல்லை என்பதை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. தமிழ் சினிமாவில் பெரும்பாலான இயக்குனர்களிடம் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், என் நண்பன் முத்துகுமாருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.
ரேகா பேசும்போது,
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ராதாரவியுடன் இணைந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை. இயக்குநர் அம்மா கதாபாத்திரத்திரம் இருக்கிறது பணியாற்றுகிறீர்களா? என்று கேட்டார். யோகிபாபுவிற்கு அம்மா என்றதும் ஒப்புக்கொண்டேன். நானே விரும்பி கேட்ட கதாபாத்திரம் இது. அவருடன் நடித்தால் நகைச்சுவை நன்றாக இருக்கும். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன். இப்படத்தின் டிரெய்லரை பார்த்து என் கதாபாத்திரத்தைப் பற்ற...
என் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படம் தான் இந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு…- தினேஷ்
என் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படம் தான் இந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு...- தினேஷ
'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு 'திரைப்படம் என் சினிமா வாழ்க்கையில் பெருமைக்குறிய படமாக இருக்கும்.
"அட்டகத்தி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக பெரும் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார்.
அடுத்தடுத்து நடிப்பிற்கு சவாலான கதாபாத்திரங்களே இவரை தேடிவந்தது. அவற்றில் முக்கியமானவை "குக்கூ", "விசாரணை" ஆகிய படங்கள் முக்கியமானவை. கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்தும் இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் நடிகர் தினேஷ், அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
குக்கு மற்றும் விசாரணை படங்களைப் போல சவாலான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் "திருடன்...
நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக முடியாது – மம்தா பானர்ஜி
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகப்போவது கிடையாது. அவர் திரும்பி வரமுடியாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அவர் வருவதற்கான கணக்கை நீங்கள் கூறுங்கள் என்று பேசியுள்ளார். மத்தியில் மாநில கட்சிகளின் கூட்டணியுடன் புதிய அரசு அமையும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மம்தா பானர்ஜி....

