வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

கந்து வட்டி தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-பிரகாஷ்ராஜ்

கந்து வட்டி தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்-பிரகாஷ்ராஜ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அசோக்குமாரின் தற்கொலை திரையுலிகில் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். இந்த தற்கொலை சம்பவம் தமிழ் திரையுலகின் இன்றைய நிகழ்வை படம் பிடித்து காட்டுவதாக தெரிவித்த பிரகாஷ்ராஜ், நமக்கு தெரியாமல் எத்தனையோ தற்கொலைகள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். திரையுலகின் அனைத்து தரப்பினரும் இணைந்து நடவடிக்கை எடுப்போம் என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். கந்து வட்டி தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கருப்பு பண சம்பளம் வாங்குவதை நடிகர்கள் நிறுத்த வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார். நடிகர்கள் கருப்பு பணத்தில் சம்பளம் பெறுவதாக பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அனைத்து வரிகளை செலுத்தினாலும் பாதுகாப்பற்ற துறையாக திரைத்துறை உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படத்துறையில் ...
பாரதியார் போல மாறிய கமல் : வைரலாகிய புகைப்படம்

பாரதியார் போல மாறிய கமல் : வைரலாகிய புகைப்படம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அதிமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார். மக்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டால் ஆட்சியைவிட்டு இறங்குங்கள் என்றும் கருத்து தெரிவித்தார். அத்துடன் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்ட தான் அரசியல்கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறி உள்ளார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே இருந்த தனது புகைப்படததை மாற்றிவிட்டு தற்போது, பாரதியார் போன்று முண்டாசு கட்டி முறுக்கு மீசை தோற்றத்தில் தன்னுடைய புதிய படத்தை புரபைல் பிக்சராக மாற்றி வெளியிட்டிருக்கிறார்....
அன்புச் செழியனை பணப் பிசாசு என  இயக்குனர் கவுதம் மேனன் சாடல்..!

அன்புச் செழியனை பணப் பிசாசு என இயக்குனர் கவுதம் மேனன் சாடல்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்த கொண்ட தயாரிப்பாளர் அசோக்குமார் முடிவு குறித்து இயக்குனர் கவுதம் மேனன் டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘அசோக் உன்னுடைய மரணம் ஈவிறக்கம் அற்ற ஒரு பணப் பிசாசை அடக்கப் பயன்படக்கூடும் என்பதை அறிவேன். ஆனால் நீ உயிரோடிருந்து இந்த போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்பியிருப்போம்’ என குறிப்பிட்டுள்ளார். அன்புச் செழியனை பணப் பிசாசு என கவுதம் குறிப்பிட்டுள்ளார்....
மனைவிக்கு பேட்மின்டன் அரங்கம் பரிசளித்த அஜித்

மனைவிக்கு பேட்மின்டன் அரங்கம் பரிசளித்த அஜித்

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  காதலி அல்லது மனைவிக்கு பிறந்தநாள் வந்தால் காதலனோ, கணவனோ அவருக்கு வைர நெக்லஸ், பட்டுப்புடவை அதைவிட காஸ்ட்லியாக வீடு அல்லது ஆடம்பர கார் பரிசளிப்பதுண்டு. ஒரு நடிகர் தனது மனைவியின் பிறந்த நாளுக்கு பேட்மின்டன் அரங்கம் பரிசளித்திருக்கிறார். அவர் வேறுயாருமல்ல, அஜீத்குமார்தான். அஜீத் மனைவி ஷாலினிக்கு  39வது பிறந்தநாள். திரையுலகினர், தோழிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஷாலினி பேட்மின்டன் வீராங்கனை. மாவட்ட, தேசிய அளவிலான போட்டிகளில் அவர் கலந்துகொண்டிருக்கிறார். குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டுமே இந்த விவரம் தெரியும். ஷாலினிக்கு வித்தியாசமான பரிசளிக்க எண்ணினார் அஜீத். திருவான்மியூரில் உள்ள தனது வீட்டிற்குள்ளேயே சகல வசதிகளுடன் கூடிய பேட்மின்டன் விளையாட்டு அரங்கை அமைத்து அதை பிறந்தநாள் பரிசாக அளித்தார். ஷாலினி, அஜீத் தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். நடி...
மக்கள் ஸ்டார் ஆன ஓவியா

மக்கள் ஸ்டார் ஆன ஓவியா

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
மக்கள் ஸ்டார் ஆகிவிட்டார் ஓவியா.ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3 படப்பிடிப்பில் பிஸியாகஇருக்கிறார். இப்போ எனக்கு ரசிகர்களிடம் இமேஜ் ரொம்பவும்மாறிப்போயிருக்கு. அதுக்காக நான் மாறிட்டேன்னு அர்த்தமில்லை. இதோ இந்தப்படத்துலே கூட பழைய கிளாமர் டால் ஓவியாவை நீங்க பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  பிப்ரவரி 17-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட 'சிவகார்த்திகேயன் - பொன்.ராம்' படக்குழு முடிவு செய்திருக்கிறது. 'வேலைக்காரன்' படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதைத் தொடர்ந்து, பொன்.ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனோடு நடித்து வருகிறார்கள். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதுவரை 55% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அறிவித்திருக்கிறார்கள். மேலும், ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்...
‘நான் கடவுள்’ நேரத்தில் அஜித்தும் அசோக்குமார் மனநிலையில் இருந்தார்: இயக்குநர் சுசீந்திரன் தகவல்

‘நான் கடவுள்’ நேரத்தில் அஜித்தும் அசோக்குமார் மனநிலையில் இருந்தார்: இயக்குநர் சுசீந்திரன் தகவல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  நான் கடவுள்' நேரத்தில் இந்த அன்புசெழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார். திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அசோக்குமார் தற்கொலை குறித்து பைனான்சியர் அன்புசெழியனை கடுமையாக குற்றச்சாட்டி இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில...
அசோக்குமார் தற்கொலை: அன்புசெழியனை கைது செய்ய மதுரை விரைகிறது தனிப்படை

அசோக்குமார் தற்கொலை: அன்புசெழியனை கைது செய்ய மதுரை விரைகிறது தனிப்படை

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
நடிகர் சசிகுமாரின் உறவினர் அஷோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என புகாரளிக்கப்பட்ட நிலையில் பைனான்ஸியர் அன்புச்செழியனை கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார் மதுரை விரைய உள்ளனர். நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்னர் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் கந்து வட்டித்தான் என்றும் பைனான்சியர் அன்புச்செழியனின் மிரட்டல் காரணமாகவே தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் அன்புச்செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீஸார் அன்புச்செழியன் மீது பிரிவு 306 (தற்கொலைக்கு தூண்டியது) வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அன்புச்செழியனை கைது செய்ய சென்னை ...
இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா கப்பல்; இலங்கைக்கு இலவசமாக தாரை வார்ப்பு

இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா கப்பல்; இலங்கைக்கு இலவசமாக தாரை வார்ப்பு

HOME SLIDER, NEWS, politics
இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா ரோந்துக் கப்பலை இலங்கை கடற்படைக்கு இலவசமாக வழங்குவதற்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் கடற்கரையைப் பாதுகாக்கும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சுமார் 20 ரோந்துக் கப்பல்கள் வரையிலும் அன்றாட பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 1984-ம் ஆண்டு தயாராகி 1988-ம் ஆண்டு கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்ட வருணா கப்பலானது சுமார் 30 ஆண்டுகள் சிறப்பான சேவையாற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றது. இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் கடல்சார் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை காட்டிவரும் ஈடுபாட்டிற்காக இலங்கைக் கடற்படைக்கு 30 ஆண்டுகள் சேவையாற்றி வந்த இந்திய கடலோர காவல்படையின் வருணா ரோந்துக் கப்பலை இலங்கைக்கு அளிக்கப்பட உள்ளத...