இலங்கைக் கலவரம் குறித்து விசாரணை நடத்த கமிஷன் : சிறிசேனா அறிவிப்பு
இலங்கையில் கண்டி மாகாணத்தின் மத்திய பகுதி ஒன்றில், பெரும்பான்மை சிங்கள பெளத்த மக்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கும் இடையே எற்பட்ட மோதலை அடுத்து, மார்ச் மாதம் 6-ஆம் தேதி, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனை அங்குள்ள எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவும், கலவரத்தை சரியான முறையில் கையாள தவறிவிட்டனர் என்று எதிர்கட்சிகள் கடுமையாக தாக்கி உள்ளன.
அதே சமயம் இலங்கைகண்டியில் முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், மசூதிகள் தாக்குதல்களுக்கு இரையாகின. கடந்த திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடந்த வன்முறை சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கமிஷன் ஒன்றை இலங்கை அதிபர் சிறிசேனா அமைத்துள்ளார்.
அந்த விசாரணை கமிஷனில் 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். அந்த ...









