சிறையிலிருக்கும் ஹரி நாடாரை சொந்தம் கொண்டாடும் இரு மனைவிகள்!
தமிழகத்தின் நடமாடும் நகைக்கடை என அழைக்கப்படும் ஹரி நாடார், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ளார்.
கடந்த 8 மாதங்களாக சிறையில் இருக்கும் அவரை வெளியே கொண்டு வரும் முயற்சியில் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண் ஈடுபட்டிருந்தார்.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக
நடிகை விஜயலட்சுமியைக் கண்டித்து வீடியோ ஒன்றை ஹரி நாடார் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விஜலட்சுமி ஹரி நாடார் மீது புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் திருவான்மீயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் ஹரி நாடாரை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஹரி நாடார் ஒருங்கிணைப்பாளராக இருந்த பனங்காட்டுப் படை கட்சியிலிருந்து அ...









