செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்!

சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சல்மான்கான் படத்தில் இணையும் பிரபல நடிகர்! சல்மான் கான் நடிப்பில் வெளியான டைகர் படத்தின் பாகம் ஒன்று மற்றும் 2 சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டைகர் படத்தின் 3ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சல்மான்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைப் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சல்மான் கான் படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பது, ரசிகர்கள் மத்தியில் டைகர் 3 பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தை தவிர பதான் என்ற படத்திலும், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
சுல்தான் பாடல் படைத்த புதிய சாதனை!

சுல்தான் பாடல் படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சுல்தான் பாடல் படைத்த புதிய சாதனை! எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம் சுல்தான். அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்திருந்த இப்படம், ஏப்ரல் 2-ந் தேதி தமிழ், தெலுங்கில் வெளியானது. தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் சுல்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் சுல்தான்...’ என்ற பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில் இப்பாடல் யூடியூப் தளத்தில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை கார்த்தி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்....
திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்து விபத்து!

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்து விபத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்து விபத்து! சென்னையை புறநகர் பகுதியான திருவெற்றியூரில்  4 மாடிகள் கொண்ட 336 குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன. 1998 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடுகள், தேனாம்பேட்டை திருவொற்றியூர் உள்பட சென்னை மாநகரின் பல்வேறு பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இந்த வீடுகளில் கடுமையான விரிசல் ஏற்பட்டதாக இங்குள்ள பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் சிறுசிறு பணிகளை மேற்கொண்டிருந்தனர். நேற்று இரவு 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு லேசாக விரிசல் ஏற்பட்டது. அந்த பகுதியில் இருக்கும் திமுக பகுதி செயலாளரிடம் பொதுமக்கள் இது குறித்து புகார் கூறினர். இதையடுத்து இன்று காலை அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்கள் அவசர அவசரமாக  வெளியேற்றப்பட்டனர். காலை பத்...
“ரா” வான ராக்கி கோடங்கி விமர்சனம்

“ரா” வான ராக்கி கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட "ராவாக" வரும் படங்கள் மிக மிக குறைவு. அதிர்ச்சி ரகத்தில் ரத்தம், வெட்டு குத்து கொலை எல்லாம் போதும் போதும் என சொல்லும் அளவுக்கு அவ்வளவு அதிகம். கேரக்டர்கள் என்னமோ ஒன்றிரண்டு தான்... ஆனால் வயலென்ஸ் யப்பா... முடியலடா சாமி... கதைப்படி சிறையில் இருந்து ரிலீஸ் ஆகும் ஹீரோ வசந்த் ரவிக்கு அவனது அம்மா ரோஹிணி கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. தங்கை காணாமல் போயிருந்தார். அம்மாவை கொன்றவர்களை ஹீரோ பழி வாங்கினாரா? காணாமல் போன தங்கை என்ன ஆகிறார் என்பதுதான் கதை. ஹாலிவுட்டில் இதுபோன்ற திகிலூட்டும் படங்கள் ரொம்ப சாதாரணம். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் டிவிஸ்ட், மிரட்டல் எல்லாம் புதுரகம்... அந்த ஈகிள் மேட்டர் அல்டிமேட். இப்படி பட்ட ராவான கதைகள் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காமல் போகும். வில்லனாக வரும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ...
ரைட்டர் “ரைட்” கதையா? கோடங்கி விமர்சனம்

ரைட்டர் “ரைட்” கதையா? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் அத்தித் பூத்தார்போல வந்த படங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்ட படம் தான் ரைட்டர். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் ரைட்டர் என்பவரின் பவர்புல் அதிகாரம் என்ன என்பதை சொல்வதற்கு பதில் சமுத்திரக்கனி போன்ற மனசாட்சி உள்ள நபர்களும் போலீசாக இருக்கிறார்கள் என்பதை செல்வதற்கு ஒரு சபாஷ். ஒரு போலீஸ் கதைக்குள் திறமை இருந்தும் ஜாதியால் பதவியை பெற முடியாமல் மேலதிகாரியின் அடக்குமுறையால் தன் உயிரையே பலி கொடுக்கும் இனியா கதாபாத்திரம் கொஞ்ச நேரம் வந்தாலும் நெஞ்சை உலுக்கும் நிஜம். இனியாவின் அந்த குதிரையேற்றம் ப்பா... என்ன ஒரு காட்சி... கதைப்படி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து பி.எச்.டி. படிக்கும் ஒரு மாணவன் திடீரென போலீஸ் பிடியில் சிக்கி எப்படி வாழ்வை தொலைக்கிறார்? எதற்காக அவர் போலீஸ் பிடியில் சிக்க வேண்டும்? அவர் காப்பாற்றப்பட்டாரா? இல்லையா என்பதும், கிளைக்கதையாக போலீ...
விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..!

விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் - யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு..! விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சந்தித்து இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் என்று பதிவு செய்து வருகிறார்கள்.  ...
பார்த்திபனுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

பார்த்திபனுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பார்த்திபனுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்! ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர் பார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு துபாயின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் விசாவை வழங்கினர். தனக்கு தங்க விசா வழங்கிய துபாய் அரசுக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து பேசிய அவர், "எனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். துபாய் அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த சிறப்புரிமைக்கு தகுதியானவன் என்று என்னை கருதியதற்காக துபாய் அரசுக்கு அன்பும் நன்றியும்,” என்று கூறினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா என்பது நீண்ட கால குடியிருப்பு...
ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிம்பு!

ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிம்பு! ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பல தடைகளை கடந்து நவம்பர் மாதம் 25-ந்தேதி தியேட்டரில் வெளியானது. அடுத்த சில நாட்களில் மாநாடு படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் சிம்பு கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் சில தினங்களுக்கு முன்பு மாநாடு படத்தின் 25 வது நாளை படக்குழுவினர் கொண்டாடினார்கள். இந்நிலையில் மாநாடு படம் ஹிட் ஆனதையொட்டி நடிகர் சிம்பு தன் ரசிகர்களுடன் ஒரு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விழா ஜனவரி 6-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்...
நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் – இயக்குனர் மறைவுக்கு கமல் இரங்கல்!

நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் – இயக்குனர் மறைவுக்கு கமல் இரங்கல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் - இயக்குனர் மறைவுக்கு கமல் இரங்கல்! கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் சேதுமாதவன். மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான இவர் சென்னையில் வசித்து வந்தார். 90 வயதான சேதுமாதவன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இயக்குனர் சேதுமாதவனுக்கு மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மலையாளத்தில் பல படங்களை இயக்கிய சேதுமாதவன் தமிழில் சிவகுமார்-ராதா நடித்த மறுபக்கம் படத்தை இயக்கினார். இப்படம் தேசிய அளவில் சிறந்த சினிமாவுக்கான விருதை பெற்றது. மலையாள சினிமாவில் நடிகர் கமல்ஹாசனை இவர்தான் அறிமுகம் செய்தார். 1962-ம் ஆண்டு கண்ணும் காராளும் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். இவரது மறைவுக...
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு!

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு! இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்த ஹர்பஜன் சிங், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்தார். இந்த நிலையில் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளளார். 41 வயதாகும் ஹர்பஜன் சிங் 1998-ம் அண்டு மார்ச் 25-ந்தேதி டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 முதல் 15-ந்தேதி வரை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 1998-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 2015-ம் ஆண்டு வரை விளையாடினர். 2006 முதல் 2016 வரை டி20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டும், 236 ஒருநாள் போட்டியில் விளையாடி 269 விக்க...