‘பகலவன்’ கதை சர்ச்சை ‘பின்வாங்கப் போவதில்லை’ – லிங்குசாமி
'பகலவன்' கதை சர்ச்சை 'பின்வாங்கப் போவதில்லை' – லிங்குசாமி
கடந்த 2013ல் இயக்குநர் சீமான் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அந்த கடிதத்தில் இயக்குநர் லிங்குசாமி நடிகர் சூர்யாவை வைத்து இயக்க இருக்கும் கதை தன்னுடைய 'பகலவன்' கதை சாயலில் இருப்பதாகவும், இந்தக் கதையைப் பத்து வருடங்களுக்கு முன்பே நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரமிடம் சொல்லியிருப்பதாகவும் அதன் பிறகு நடிகர் 'ஜெயம்' ரவியிடம் சொல்லி அவர் கதைக்கும் கால்ஷீட் கொடுத்ததாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனால், 'பகலவன்' சாயலில் இருக்கும் கதையை லிங்குசாமி எடுத்தால் அதனால் தாம் பாதிக்கப்படுவதாகவும் அந்த கதையை இயக்குநர் லிங்குசாமி கைவிட வேண்டும் எனவும் அந்த கடிதத்த்தில் சீமான் தெரிவித்திருந்தார்
இயக்குநர் சீமான் கடிதத்திற்கு பதில் சொல்லும் விதமாக இயக்குநர் லிங்குசாமி, தாம் இந்தக் கதையை நடிக...









