புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் நலன் காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா என்ற பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அதிகபட்சமாக ஒருநாளைக்கு தொற்றால் பாதிக்கப்படுகிற வர்கள் 36 ஆயிரமாக இருந்தனர். இது 50ஆயிரமாக உயரும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துகொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக விரைவாக குறைந்து கொண்டே வருகிறது. மருத்துவமனை...
முதலிடம் பிடித்த விஜய்யின் ‘மாஸ்டர்’!

முதலிடம் பிடித்த விஜய்யின் ‘மாஸ்டர்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முதலிடம் பிடித்த விஜய்யின் ‘மாஸ்டர்’! பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி, 2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஜனவரி மாதம் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘மாஸ்டர்’ படம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்பிரன்ட்ஸ் என்கிற வெப் தொடர் இரண்டாம் இடத்தையும், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான தி வைட் டைகர் திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம்-2 திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக தமன்னா நடிப்பில் அண்மையில் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் எனும் வெப் தொடர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் 6வது இட...
‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநாடு படத்தின் டிரெய்லர் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாநாடு படத்தின் டிரெய்லர் வருகிற ஜூலை 21-ந் தேதி பக்ரீத் பண்டிகையன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது....
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்!

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்!

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்! தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து, அரசு நிர்வாகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றும் 24 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 54 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கின்றனர். இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீடுகள் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் ஜே.விஜயராணி சென்னை மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்துறை இணை செயலாளர் ஏ.ஆர்.ராகுல் நாத் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு சிமெண்ட் கழகம் மேலாண்மை இயக்குனர் எம்.ஆர்த்தி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (சுகாதார...
பாலியல் புகார் சில்மிஷ சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

பாலியல் புகார் சில்மிஷ சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாலியல் புகார் சில்மிஷ சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது தமிழகத்தில் பிரபலமான பள்ளிகளின் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதலில் சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த புகார்கள், பின்னர் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் சென்று, விசாரணை நடைபெறுகிறது. குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். இந்நிலையில், தன்னை கடவுளின் அவதாரம் என கூறிக்கொண்டு ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வரும் சாமியார் சிவசங்கர் பாபா  மீதும் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அவர் நடத்தி சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைத்தளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக...
Family man2  திட்டமிட்ட சதிச் செயல்… கொச்சைப்படுத்தாதீர்கள் கண்ணீருடன் பிரான்ஸ் தமிழர் வேண்டுகோள்

Family man2 திட்டமிட்ட சதிச் செயல்… கொச்சைப்படுத்தாதீர்கள் கண்ணீருடன் பிரான்ஸ் தமிழர் வேண்டுகோள்

HOME SLIDER, kodanki voice, உலக செய்திகள், வீடியோ
  Family man2 திட்டமிட்ட சதிச் செயல்... கொச்சைப்படுத்தாதீர்கள் கண்ணீருடன் பிரான்ஸ் தமிழர் வேண்டுகோள் https://youtu.be/2YL9UYDu56A
வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்!

வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்! ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அவருடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டனர். ராணி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி  கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இதுவாகும். இந்த நிகழ்வின் போது, ஜி 7 கூட்டமைப்பின் தலைவர்கள், ராணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புகைப்படம் எடுக்கையில், ராணி 2ம் எலிசபெத் நகைச்சுவையாகப் பேசி, அனைத்துத் தலைவர்களையும் சிரிக்க வைத்து மகிழ்ந்தார். மாநாட்டிற்கிடையில், ராணி 2ம் எலிசபெத் கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் சிறப்பம்சமாக ராணி வாள் கொண்டு கேக் வெட்டியத...
பாலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

பாலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பாலிவுட்டில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு! மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம்வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மூன்று படங்களும் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகின்றன. அதன்படி மாநகரம் படத்தை இந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜின் மூன்றாவது படமான மாஸ்டரும் விரைவில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதில் விஜய் கதாபாத்...
‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்!

‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்! நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ், இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரட்டையர்களான இவர்கள் இருவரும், ஏற்கனவே கேஜிஎப், கைதி, கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் – மீனா!

25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் – மீனா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் - மீனா! மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர். தமிழிலும் ‘திரிஷ்யம் 2’ படம் பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகை மீனாவை நடிக்க வைக்க பேச...