செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் நடிகர்!

ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் நடிகர்! இரண்டு பெயர் கொண்ட நடிகரின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறதாம். அவர் நடிக்கும் படமெல்லாம் ஹிட்டாகி வருவதால், இதுவரை ஒரு படத்துக்கு இத்தனை கோடி என டீல் பேசி வந்தவர், தற்போது ஒரு நாளைக்கு ஒரு கோடி தர வேண்டும் என்று தடாலடியாக அறிவித்துவிட்டாராம். சீப் அண்ட் பெஸ்டாக இருந்த அந்த நடிகர், இப்போ காஸ்ட்லியாகி விட்டதால் தயாரிப்பாளர்கள் வேறு நடிகர்களை நாடத் தொடங்கிவிட்டார்களாம். இதனால் தனது மார்க்கெட் பாதிக்கப்படுமே என அந்த நடிகர் துளியும் கவலைப்பட வில்லையாம். நான் கேட்ட சம்பளத்தை கொடுக்க ரெடினா வாங்க, இல்லைனா போய்கிட்டே இருங்க என கறாராக பேசி அனுப்பி விடுகிறாராம்....
பிரேசிலை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 83,367 பேருக்கு பாதிப்பு உறுதி!

பிரேசிலை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 83,367 பேருக்கு பாதிப்பு உறுதி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
பிரேசிலை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் 83,367 பேருக்கு பாதிப்பு உறுதி! உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து இந்தியவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 83,367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 58 லட்சத்து 98 ஆயிரத்து 558 ஆக உயர்வடைந்து உள்ளது. அந்நாட்டில் 2,527 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்து 391 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட பின்னர் இதுவரையில் 1 கோடியே 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.  10 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவானது – ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு!

இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவானது – ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவானது - ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு! இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறது. மேற்கு கரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்கு கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தலத்தில் கடந்த 10-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்...
கொரோனாவால் ரிலீஸ் பிளானை மாற்றிய ‘தளபதி 65’ படக்குழு!

கொரோனாவால் ரிலீஸ் பிளானை மாற்றிய ‘தளபதி 65’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரோனாவால் ரிலீஸ் பிளானை மாற்றிய ‘தளபதி 65’ படக்குழு! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதமாவதால், ரிலீஸ் ப...
நான் படத்தில் காமெடிக்காக சொன்னது…. இப்போ நிஜத்தில் நடக்குது – வடிவேலு!

நான் படத்தில் காமெடிக்காக சொன்னது…. இப்போ நிஜத்தில் நடக்குது – வடிவேலு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நான் படத்தில் காமெடிக்காக சொன்னது.... இப்போ நிஜத்தில் நடக்குது - வடிவேலு! தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் வடிவேலு பேசியிருப்பதாவது: “கொரோனாவால் பீதி ஏற்பட்டு உள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாது என்கின்றனர். மருத்துவ உலகத்தையும், மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை. என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் ஆள்...
ஊரடங்கு நீட்டிப்பா?-முதலமைச்சர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பா?-முதலமைச்சர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பா?-முதலமைச்சர் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை! தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 24-ந்தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை 10 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடனும், பின்னர் எம்.எல்.ஏ.க்கள் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆலோசனைக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....
சஞ்சனா கல்ராணி மீது வழக்குப்பதிவு!

சஞ்சனா கல்ராணி மீது வழக்குப்பதிவு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பீர் பாட்டிலால் மாடல் அழகியை தாக்கிய விவகாரம் - சஞ்சனா கல்ராணி மீது வழக்குப்பதிவு! கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி. இவர் பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். நடிகை சஞ்சனா கல்ராணி, சமீபத்தில் போதை மருந்து வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு, பின்னர் பல மாதங்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாடல் அழகி வந்தனா ஜெயின் என்பவரை தாக்கியதாக தற்போது, நடிகை சஞ்சனா கல்ராணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடல் அழகி வந்தனா ஜெயின் மீது பீர் பாட்டிலை வீசி உடல்ரீதியாக தாக்கி, சஞ்சனா கல்ராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. சஞ்சனா கல்ராணி தாக்கியதில் வந்தனா ஜெயினுக்கு பார்வை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, வந்தனா சார்பில் கப்பன் பார்க் போலீசில் புகார் அ...
‘ஜகமே தந்திரம்’-முக்கிய அப்டேட்!

‘ஜகமே தந்திரம்’-முக்கிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘ஜகமே தந்திரம்’-முக்கிய அப்டேட்! பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘ரகிடா ரகிடா’ மற்றும் ‘புஜ்ஜி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 22-ந் தேதி ‘நேத்து’ என்கிற பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்பாடல் வெளியிடப்படும் என அறிவி...
‘ஜன கன மன’ இயக்குனருடன் ஜெயம் ரவி கூட்டணி!

‘ஜன கன மன’ இயக்குனருடன் ஜெயம் ரவி கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘ஜன கன மன’ இயக்குனருடன் ஜெயம் ரவி கூட்டணி! ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படம் கடந்த ஜனவரியில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தற்போது மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’, அஹ்மத் இயக்கும் ‘ஜன கன மன’ ஆகிய படங்கள் ஜெயம் ரவி கைவசம் உள்ளன. ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு பாதி முடிந்துள்ள நிலையில் கொரோனாவால் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. ‘ஜன கன மன’ படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க வேண்டி உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ‘ஜன கன மன’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால், நடிகர் ஜெயம்ரவி, இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் முழு படப்பிடிப்...