செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 5.8 ரிக்டர் அளவில் பதிவு

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 5.8 ரிக்டர் அளவில் பதிவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5.8 ரிக்டர் அளவில் பதிவு ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள புஷேர் நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.‌ இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது. இது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஈரான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் ஈரானின் புஷேர் அணு உலை அமைந்துள்ளது நிலநடுக்கம் காரணமாக அணு உலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. புஷேர் அணு உலையானது ரிக்டர் 8 வரையிலான நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது....
இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது ஹாங்காங்!

இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது ஹாங்காங்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது ஹாங்காங்! இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2.6 லட்சத்தை தாண்டி உள்ளது. இதனால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ஹாங்காங் அரசு நிறுத்தி உள்ளது. நாளை முதல் 14 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் ஹாங்காங்கில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான விமான போக்குவரத்தையும் தடை செய்துள்ளது இந்த மாதம் இந்தியாவில் இருந்து விமானங்களில் ஹாங்காங் வந்த பயணிகளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. ஹாங்காங் நாட்டிற்கு வருவோர் தங்கள் பயணத்தி...
மீண்டும் நடிக்க வந்த மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியானார்!

மீண்டும் நடிக்க வந்த மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியானார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் நடிக்க வந்த  மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியானார்! லிங்குசாமி இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின் தமிழில் கடைசியாக விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது ஆகிய படங்களில் நடித்திருந்த இவர் 2014-ம் ஆண்டு துபாயில் பணியாற்றும் அனில் ஜான் என்ற பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அத்ன் பின்னர் ஒரு சில மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த மீரா ஜாஸ்மின் 2018-ம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக திரைப்படங்களில் எதுவும் நடிக்கவில்லை. இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க மீரா ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது. 2004-ம் ஆண்டு  ச...
தமிழக அரசு, காவல்துறை, ரசிகர்களுக்கு விவேக் குடும்பத்தினர் நன்றி!

தமிழக அரசு, காவல்துறை, ரசிகர்களுக்கு விவேக் குடும்பத்தினர் நன்றி!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
தமிழக அரசு, காவல்துறை, ரசிகர்களுக்கு விவேக் குடும்பத்தினர் நன்றி! காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டதற்கு,  அவரது குடும்பத்தினர் அரசுக்கும், காவல்துறைக்கும், ரசிகர்களுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதையடுத்து விவேக்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விவேக்கின் குடும்பத்தினர் அரசு, காவல்துறை மற்றும் ரசிகர்களு...
ஃபேசியல் செய்யப் போன இடத்தில் பிக்பாஸ் நடிகைக்கு நடந்த விபரீதம்!

ஃபேசியல் செய்யப் போன இடத்தில் பிக்பாஸ் நடிகைக்கு நடந்த விபரீதம்!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
ஃபேசியல் செய்யப் போன இடத்தில் நடிகை ரைஸாவிற்கு நடந்த விபரீதம் பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து அனைவரது மத்தியிலும் கவனம் பெற்றார். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெறவே அடுத்தடுத்து ரைஸா வில்சனுக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தன. தற்போது தி சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரைஸா வில்சன். தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைஸா. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், சமீபத்தில் முக அழகுக்காக ஃபேசியல் செய்ய அழகுகலை மருத்துவரிடம் சென்றதாகவும் அப்போது தேவையற்ற சில ஒப்பனை செயல்முறைகளை அழகுக்கலை மருத்துவர் செய்ததால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள மு...
20ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு

20ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு

HOME SLIDER, NEWS, politics
20ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை - தமிழக அரசு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது இந்தநிலையில் வருகிற 20ந்தேதி முதல் இரவு 10 மணி வரை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஏப்ரல் 20ந்தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார் பொது போக்குவரத்து ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்படும். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ஒதிவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது  ...
புனேவில் போலி ரெம்டெசிவிர் 4 பேர் கைது

புனேவில் போலி ரெம்டெசிவிர் 4 பேர் கைது

HOME SLIDER, NEWS, செய்திகள்
புனேவில் போலி ரெம்டெசிவிர் 4 பேர் கைது இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. வைரஸ் பரவல் உயர்ந்து வரும் நிலையில் மறுபுறம் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகள் பயன்பாட்டிற்கான உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்துக்கும் பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ரெம்டெசிவிர் சட்டவிரோதமாக அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுகிறது இந்நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள பாரமதி பகுதியில் போலி ரெம்டெசிவிர் மருந்தினை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் என்று பெயரிடப்பட்ட மூன்று ஊசி குப்பிகள் அதில் இருந்ததாகவும், ஆனால் உண்மையில் திரவ வடிவத்தில் பராசிட்டமால் ...
பர்கூர் மலைப்பகுதியில் பூத்து குலுங்கும் நீல ஜரகண்டா பூக்கள்

பர்கூர் மலைப்பகுதியில் பூத்து குலுங்கும் நீல ஜரகண்டா பூக்கள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
பர்கூர் மலைப்பகுதியில் பூத்து குலுங்கும் நீல ஜரகண்டா பூக்கள் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது பர்கூர் மலைப்பகுதி. இது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்து உள்ளது. இந்த மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதுமட்டுமின்றி இந்த மலைப்பகுதியில் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்கும் செடிகள் முதல் அரியவகை மரங்கள் பல உள்ளன. அவைகள் கோடை காலம், குளிர் காலம், பனி காலம் என அந்தந்த பருவ கால நிலைக்கு ஏற்ப பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதில் பர்கூர் மலைப்பகுதியில் தேவர்மலையை அடுத்த ஒரு கோவில் அருகே மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் முழுவதும் நீல நிறத்தில் பூத்து குலுங்குகின்றன. அந்த மரத்தில் இலைகளே தெரியாத அளவுக்கு பூக்கள் மிகவும் அழகாக பூத்து குலுங்குவதை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து பார்த்து சென்றனர். மேலும் அவர்கள் தங்கள...
தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் ‘மகள்’

தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் ‘மகள்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 'மகள்' பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக உப்பேனா தெலுங்கு படம் புகழ் க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார். பாலாஜி மோகன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கவிருக்கிறார் தனுஷ். அது மாரி 3 படமா இல்லை புது கதையா என்பது இதுவரை தெரியவில்லை. பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். இது தொடர்பாக க்ரித்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று கூறப்படுகிறது. புதுமுகம் புச்சி பாபு சனா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான உப்பேனா தெலுங்கு படத்தின் ஹீரோயின் க்ரித்தி ஷெட்டி. உப்பேனா படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்....
ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை – குற்றம்சாட்டிய உத்தவ் தாக்கரே

ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை – குற்றம்சாட்டிய உத்தவ் தாக்கரே

HOME SLIDER, NEWS, politics
ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை - குற்றம்சாட்டிய உத்தவ் தாக்கரே ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர் தேர்தல் பிரசார வேலையில் தீவிரம் காட்டுவதாகவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார். மராட்டியத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டும் நிலையில், கொத்து கொத்ததாக உயிரிழப்பும் ஏற்படுகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல நோயாளிகளின் உயிரின் கதி கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டினார் தொழில் கூ...