அதிமுக எம்.பி சசிகலாவிற்கு டெல்லியில் திருமணம்?
அதிமுக எம்.பி சசிகலாவிற்கு டெல்லியில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக-வின் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் சசிகலா புஷ்பா. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலாவும் அவரும் சேர்ந்து தன்னை தாக்கியதால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க இவர் கோரிக்கை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்கியதும் அடுத்த பரபரப்பாக சசிகலா புஷ்பாவும், திமுக எம்.பி., திருச்சி சிவாவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்ததாக அவர் வீட்டு பணிப்பெண்கள் சசிகலா புஷ்பாவால் தாங்கள் துன்புறுத்தப்படுகிறோம் என்று தூத்துக்குடி காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா புஷ...









