வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

HOME SLIDER

கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகி பாபு!

கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகி பாபு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகி பாபு! தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் யோகிபாபு அரண்மனை-3, கடைசி விவசாயி, டிக்கிலோனா உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. https://twitter.com/iYogiBabu/status/1405610446481018881?s=20...
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை விசித்ரா.. வைரலாகும் புகைப்படம்!

அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை விசித்ரா.. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை விசித்ரா.. வைரலாகும் புகைப்படம்! தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் நடிகை விசித்ரா. விசித்ரா தொடக்க காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார். அதன்பின் சின்னத்திரையில் நுழைந்த விசித்ரா, வாய்ப்பு குறைந்ததால் திருமணம் செய்து கொண்டு புனேவில் குடியேறினார். பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கும் விசித்ராவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் பலரும் நடிகை விசித்ரா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போனதாக குறிப்பிட்டுள்ளனர்....
ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் ஏறுமுகமாக இருந்தது. ஒருகட்டத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 36 ஆயிரத்தை தொட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதியில் இருந்து 31-ந்தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில் தொற்று சற்று குறைந்து முன்னேற்றம் காணப்பட்டது. எனவே தொற்றின் சங்கிலித்தொடரை அறுப்பதற்காக மீண்டும் ஒரு வாரம், அதாவது மே 31-ந்தேதியில் இருந்து ஜூன் 7-ந்தேதிவரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்த 2 முழு ஊரடங்கில் நல்ல பலன் கிடைத்ததைத் தொடர்ந்து 3-ம் முறையாக சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் கொர...
சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் முக்கிய அப்டேட்! வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது ‘விடுதலை’ படம் உருவாகி வருகிறது. சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி...
டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கா, பந்து வீச்சா? – இந்திய அணிக்கு கங்குலி அறிவுரை!

டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கா, பந்து வீச்சா? – இந்திய அணிக்கு கங்குலி அறிவுரை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கா, பந்து வீச்சா? - இந்திய அணிக்கு கங்குலி அறிவுரை! இங்கிலாந்தின் சவுத்தம்டனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் பேட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி ஆலோசனை கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் கோப்பையை இந்திய வீரர்கள் வெல்லுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் நியூசிலாந்து அணியின் தரம் மற்றும் திறமையை கருத்தில் கொள்ளும்போது அது எளிதாக இருக்காது. இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை பார்த்தால் நாம் முத...
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு! நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமீன் அளிக்க கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தனிப்படை முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க மதுரை விரைந்துள்ளது. மற்றொரு தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்....
ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை! தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஊரடங்கு நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்....
தியேட்டர் சீட் 100% புக் ஆகனுமா இத செய்தா போதும் ஐடியா தரும் மூத்த பத்திரிகையாளர்!

தியேட்டர் சீட் 100% புக் ஆகனுமா இத செய்தா போதும் ஐடியா தரும் மூத்த பத்திரிகையாளர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கொரோனாவிடமிருந்து திரையரங்குகளை காப்பது எப்படி? புதுமையான யோசனை, பரிசீலிக்குமா அரசு? இப்படி ஒரு ஐடியாவ சொல்லி அறிக்கை வெளியிட்டு இருப்பது மூத்த பத்திரிகையாளர் நவநீதன். அவர் என்ன சொல்லியிருக்கார்னு பாருங்களேன்... மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் அவர்களின் கவனத்திற்கு: கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திரைப்பட தொழில், குறிப்பாக திரையரங்குகள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், திரையரங்குகள் விரைவில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 50 சதவீதத்திற்கு மேல் பார்வையாளர்களை அரசு அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியே. மேலும், மூன்றாம் அலை விரைவில் தாக்கும் என்றும...
நடிகர் ரஜினிகாந்த் ஜூன் 19-ம் தேதி அமெரிக்கா பயணம்!

நடிகர் ரஜினிகாந்த் ஜூன் 19-ம் தேதி அமெரிக்கா பயணம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் ஜூன் 19-ம் தேதி அமெரிக்கா பயணம்! சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள ரஜினி, இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியும் கோரி இருந்தார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவர் வருகிற ஜூன் 19-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளனர். நடிகர் தனுஷ் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக கடந்த ப...