8 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக் – சாதிப்பாரா? சறுக்குவாரா?
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பேஸ்ட்மேனாக இருக்கும் இவர் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியை வழிநடத்தினார். கடந்த 2004-ம் ஆண்டு மும்மையில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 19 வயதில் தினேஷ் கார்த்திக் அறிமுகமானார்.
அதன்பின்னர், தோனி இந்திய அணிக்குள் நுழைந்ததும் அவரது சிறப்பான செயல்பாட்டால் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. விக்கெட் கீப்பராக தோனி இருக்கும் நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பரை சேர்க்க அணி நிர்வாகம் விரும்பவில்லை.
கடைசியாக 2010-ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான போட்டி தினேஷ் கார்த்திக் விளையாடிய கடைசி டெஸ்ட் ஆகும். அதன் பின்னர், இம்மாதம் 14-ம் தேதி பெங்களூரில் நடக்க உள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அவர் விளையாட உள்ளார். முதலில் விருத்திமான் சாஹா தேர்வாகியிருந்தார்.
காயம் காரணம...









