அம்பானி மகனின் திருமணத்தை முன்னிட்டு மும்பை போலீசாரின் அறிவிப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!
அம்பானி மகனின் திருமணத்தை முன்னிட்டு மும்பை நகரின் முக்கிய சாலைகள் மூடப்படவுள்ளது பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்க்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் திருமணத்துக்கு முந்தைய விழா, குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடத்தப்பட்டது.
இந்த விழாவுக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரை பிரபலங்கள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் போன்றோர் அழைக்கப்பட்டு இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், மும்பையின் முதன்மை வட்டாரத்தில் ஹோட்டல் அறைக் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன.
திருமணம் நடைபெறவுள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் பகுதியில் உள்ள இரு பிரதான ஹோட்டல்களில் அறைகளுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாக பயண, ஹோட்டல் இ...









