புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

‘பகலவன்’ கதை சர்ச்சை ‘பின்வாங்கப் போவதில்லை’ – லிங்குசாமி

‘பகலவன்’ கதை சர்ச்சை ‘பின்வாங்கப் போவதில்லை’ – லிங்குசாமி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
'பகலவன்' கதை சர்ச்சை 'பின்வாங்கப் போவதில்லை' – லிங்குசாமி கடந்த 2013ல் இயக்குநர் சீமான் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் இயக்குநர் லிங்குசாமி நடிகர் சூர்யாவை வைத்து இயக்க இருக்கும் கதை தன்னுடைய 'பகலவன்' கதை சாயலில் இருப்பதாகவும், இந்தக் கதையைப் பத்து வருடங்களுக்கு முன்பே நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரமிடம் சொல்லியிருப்பதாகவும் அதன் பிறகு நடிகர் 'ஜெயம்' ரவியிடம் சொல்லி அவர் கதைக்கும் கால்ஷீட் கொடுத்ததாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால், 'பகலவன்' சாயலில் இருக்கும் கதையை லிங்குசாமி எடுத்தால் அதனால் தாம் பாதிக்கப்படுவதாகவும் அந்த கதையை இயக்குநர் லிங்குசாமி கைவிட வேண்டும் எனவும் அந்த கடிதத்த்தில் சீமான் தெரிவித்திருந்தார் இயக்குநர் சீமான் கடிதத்திற்கு பதில் சொல்லும் விதமாக இயக்குநர் லிங்குசாமி, தாம் இந்தக் கதையை நடிக...
இயக்குனர் ஷங்கருக்கு தடை இல்லை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இயக்குனர் ஷங்கருக்கு தடை இல்லை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இயக்குனர் ஷங்கருக்கு தடை இல்லை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்துவிட்டார். இதை எதிர்த்து லைகா தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இதன் விசாரணையின் போது, ஏற்கனவே லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல எனக்கூறி, லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது....
‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?… நடிப்பது யார்? – முழு விவரம்!

‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?… நடிப்பது யார்? – முழு விவரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?... நடிப்பது யார்? - முழு விவரம்! கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி இருக்கிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதனை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில், இந்த வெப் தொடரில் இடம்பெறும் 9 குறும்படங்களின் தலைப்பு மற்றும் அதில் யார் யார் பணியாற்றி உள்ளார்கள் என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதனை இந்த தொகுப்பில் காணலாம். கிட்டார் கம்பி மேலே நின்று 'காதல்' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'கிட்டார் கம்பி மேலே நின்று' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கியுள்ளார். சூர்யா, ப்ரயாகா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். பிராஜக்...
தமிழ்நாடு முழுவதும் ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு!

தமிழ்நாடு முழுவதும் ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு! தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு  ஆய்வு செய்தார். அதன்படி ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில், கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவில், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி, தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் உள்பட கோவிலில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆகியோருடன் அமைச்சர் சேகர்பாபு  ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து கோவில்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கோவிலின் சார்பில் நடைபெறுகின்ற அனைத்து மையங்களையும் ஆய்வு செய்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் குற்றாலத்தி...
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்! பிரதமர் மோடி  தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. ஆனால் இந்த 2 ஆண்டுகளில் ஒரு முறைகூட மத்திய மந்திரிசபையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படவில்லை. இந்த நிலையில், மத்திய மந்திரிசபையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 மந்திரிகள் நேற்று ராஜினாமா செய்தனர். 12 மந்திரிகளின் ராஜினாமாக்களை  பிரதமர் மோடியின் பரிந்துரை பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரிசபையில் புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்தது. இதில் புதிதாக 43 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி  தலைமையில் இன்...
டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய தடகள அணியில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள்

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய தடகள அணியில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள்

HOME SLIDER, sports, உலக செய்திகள்
டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய தடகள அணியில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 போ் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. இதில் தனிநபா் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 போ், ஆண்களுக்கான 4x 400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 போ், கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டத்தில் 2 வீரர்கள், 3 வீராங்கனைகள் ஆகியோர் உள்ளனர். காயம் காரணமாக கர்நாடகத்தின் பூவம்மா, கலப்பு 4x400மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்களான ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இரு...
படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு!

படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு! இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 2 பாடல் காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதில் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்து, அதற்கான இடத்தை தேடி வந்த ராஜமவுலி, இறுதியாக உக்ரைனில் படமாக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் ...
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை!

திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை! மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, கடந்த 2019ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்த அவர், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். வழக்கமாக மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தும் அவர், அண்மையில், சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அதிக லைக்குகளையும் பெற்று வருகிறது....
‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்!

‘துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ்’ இணையும் படத்தின் அப்டேட்! விக்ரமின் மகன் துருவ், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இப்படத்தில், துருவ் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து தற்போது, தனது தந்தையுடன் இணைந்து ‘சியான் 60’ படத்தில் நடித்து வருகிறார் துருவ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....