செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

90 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவு – அசாமில் அதிர்ச்சி

90 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவு – அசாமில் அதிர்ச்சி

HOME SLIDER, NEWS, politics
  அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்துக்கு உட்பட்ட ஹப்லாங் தொகுதியில் கடந்த 1-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் கோட்லிர் பள்ளியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் தகுதிவாய்ந்த மொத்த வாக்காளர் எண்ணிக்கை 90 ஆகும். ஆனால் வாக்குப்பதிவு முடித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பரிசோதித்த போது, 171 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரி, அந்த வாக்குச்சவாடியில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். மேலும் அந்த வாக்குச்சாவடியில் பணியில் இருந்த 5 அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்து அவர் உத்தரவிட்டு உள்ளார். அந்த வாக்குச்சாவடிக்கு தேர்தல் கமிஷன் வெளியிட்டிருந்த வாக்காளர் பட்டியலை ஏற்க மறுத்திருந்த கிராம தலைவர், தானே ஒரு வாக்காளர் பட்டியலை கொண்டு வந்து அதன்படி மக்களை ஓட்டுப்போட வைத்ததாக தேர்தல் ஊழியர்...
சினிமா நட்சத்திரங்கள் அஜித்,விஜய், ரஜினி,கமல் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்!

சினிமா நட்சத்திரங்கள் அஜித்,விஜய், ரஜினி,கமல் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே  நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினியுடன், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.  வாக்குப்பதிவு தொடங்கியதும், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் வாக்களித்துவிட்டு புறப்பட்டுச்சென்றனர் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். அதுபோல் சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். தற்போது நடிகர் வி...
தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு ஓட்டு போட்ட மு.க.ஸ்டாலின்!

தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு ஓட்டு போட்ட மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு ஓட்டு போட்ட மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் மு.க.ஸ்டாலின் தன் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவ...
செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ள நாசாவின் நவீன ஹெலிகாப்டர்!

செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ள நாசாவின் நவீன ஹெலிகாப்டர்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ள நாசாவின் நவீன ஹெலிகாப்டர்! செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸரோ பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உயிரினங்களுக்காக கரிம படிகங்கள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை இந்த விண்கலம் சேகரித்து பூமிக்கு அனுப்பி உள்ளது. இந்த விண்கலத்தில் நவீன ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பெர்சவரன்ஸ் ஆய்வு விண்கலத்துடன் 47.1 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து செவ்வாய் கிரகத்துக்கு சென்றுள்ளது. இந்த ஹெலிகாப்டர், பெ...
இந்தோனேசியாவில் கொட்டி தீர்த்த கன மழை!

இந்தோனேசியாவில் கொட்டி தீர்த்த கன மழை!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
இந்தோனேசியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கன மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 பேர் மாயமாகி உள்ளனர். https://twitter.com/SBSNews/status/1378911766046855168?s=20 இந்த நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வாரம் இந்தோனேசியாவின் சில பகுதிகள் கடும் மழை, பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. https://twitter.com/WIONews/status/1379122914105118721?s=20...
தமிழகத்தில் தயார் நிலையில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள்!

தமிழகத்தில் தயார் நிலையில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள்!

HOME SLIDER, NEWS, politics
தமிழகத்தில் தயார் நிலையில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை  நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,585 பேர் ஆண்கள். 411 பேர் பெண்கள். சட்டமன்ற தேர்தலில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 528 சாவடிகள் பதட்டமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மேற்பார்வையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மையங்களுக்கு கொண்டு சேர்த்தனர். வாக்குப்ப...
தமிழகத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.428 கோடி பறிமுதல் – சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.428 கோடி பறிமுதல் – சத்ய பிரதா சாகு

HOME SLIDER, NEWS, politics
தமிழகத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.428 கோடி பறிமுதல் - சத்ய பிரதா சாகு சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். * வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வழங்கப்படும். * வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. * தமிழகத்தில் 50% வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். * வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். * 21 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. * பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் உரிய ஆவணத்துடன் வாக்களிக்கலாம். * க...
234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி தேர்தல்!

234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி தேர்தல்!

HOME SLIDER, NEWS, politics
  தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும். சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முறையாக பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம். 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா நோயாளிகள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்....
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஷாலின் ‘மதகஜராஜா’!

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஷாலின் ‘மதகஜராஜா’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஷாலின் ‘மதகஜராஜா’! விஷால் நடிப்பில் உருவான படம் ‘மதகஜராஜா’. சுந்தர் சி இயக்கிய இப்படம் கடந்த 2013-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. இருப்பினும் பண பிரச்சினையால் இப்படம் ரிலீசாகாமல் முடங்கியே உள்ளது. இப்படத்தை வெளியிட விஷால் தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், எதுவும் பலனளிக்காததால், இப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதகஜராஜா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், சோனு சூட் வில்லனாகவும் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி ...
ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஜோடி!

ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஜோடி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஜோடி! பிரபல இயக்குனர் அகத்தியனின் இளைய மகள் நிரஞ்சனி. இவர் கடந்தாண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். நடிகை நிரஞ்சனியும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால், இருவரும் பிப்ரவரி 25ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றிருக்கிறார்கள். மாலத்தீவில் இருக்கும் புகைப்படத்தை நடிகை நிரஞ்சனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்....