செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல்! டார்ச் லைட்டுக்கு “வாய்ஸ்” வருமா?

ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல்! டார்ச் லைட்டுக்கு “வாய்ஸ்” வருமா?

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
    ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல்! டார்ச் லைட்டுக்கு "வாய்ஸ்" வருமா? தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ள நேரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது நண்பரும் நடிகருமான ரஜனிகாந்த்தை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் சந்தித்து பேசினார். ரஜினியின் அரசியல் பிரவேசம் இல்லை என கூறப்பட்ட நிலையில் ரஜினியை திடீரென கமல் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை கமல் எந்த கூட்டணியிலும் இணையவில்லை. ரஜினியை சந்தித்து தனது கட்சிக்கு வாய்ஸ் ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறது....
ஜோதிமணி MP திடீர் கைது!

ஜோதிமணி MP திடீர் கைது!

HOME SLIDER, NEWS, politics
    கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.பி. ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்தி சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. 70 ஆண்டுகள் பழமையான சிலையை அகற்றிவிட்டு, முதல்வர் புதிதாக திறப்பதற்காக அவசரகதியில் இரவோடு இரவாக தரமற்ற நிலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது என ஜோதிமணி குற்றம்சாட்டியிருந்தார்....
“சக்ரா” விஷாலுக்கு இன்னொரு விருதா – கோடங்கி விமர்சனம்

“சக்ரா” விஷாலுக்கு இன்னொரு விருதா – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    "சக்ரா" விஷாலுக்கு இன்னொரு விருதா - கோடங்கி விமர்சனம் டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் சந்தி சிரிக்கும் படம் தான் சக்ரா. இராணுவ அதிகாரியாக விஷால், போலீஸ் அதிகாரியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத். இருவரும் காதலர்கள். ஒரு சின்ன சம்பவத்தால் காதலில் விரிசல். சுதந்திர தினத்தில் சென்னையின் முக்கிய பகுதிகளில் தொடர் கொள்ளை நடக்கிறது. 50 வீடுகளில் துப்பாக்கி முனையில் நடக்கும் கொள்ளையில் விஷாலின் பாட்டி வீடும் ஒன்று. அங்கிருந்த விஷாலின் அப்பா வாங்கிய சக்ரா விருதையும் கொள்ளையர்கள் எடுத்து செல்கிறார்கள். அந்த வழக்கை ஷ்ரத்தா விசாரிக்கிறார். அவரோடு விஷாலும் கை கோர்க்கிறார். கொள்ளை அடித்தவர்கள் யார்? அந்த சக்ரா விருது திரும்ப கிடைத்ததா? இதுதான் கதை. இன்னொரு நாயகியாக ரெஜினா கசண்ட்ரா பின் பாதியில் எண்ட்ரி கொடுக்கிறார். வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக கொஞ்சம் மெனக்கெடுகிறார்....
நடிகர் மாதவன் டாக்டர் பட்டம் பெற்றார்

நடிகர் மாதவன் டாக்டர் பட்டம் பெற்றார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தமிழில் அலைப்பாயுதே, மின்னலே படங்களின் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்திய மாதவன், இந்தியிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். குறிப்பாக, தனு வெட்ஸ் மனு, த்ரீ இடியட்ஸ், உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. தமிழில் கடைசியாக மாதவன் நடிப்பில் ஓடிடி தளத்தில் ‘மாறா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். நடிகராக மட்டுமல்லாது ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார் மாதவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாகி வ...
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை  உத்தரவு

பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு

HOME SLIDER, NEWS, politics
  பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கிடையே, தெலுங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார். இதற்கிடையே புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவந்தரராஜன் உத்தரவிட்டுள்...
40 கிலோ எடை குறைத்த ஹீரோ – அர்ஜுன் வெளியிட்ட ரகசியம்!

40 கிலோ எடை குறைத்த ஹீரோ – அர்ஜுன் வெளியிட்ட ரகசியம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!" -'செம திமிரு' பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான மூன்று படங்களும் தாறுமாறாய் ஹிட்டடிக்க, அடுத்ததாக 'செம திமிரு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். துருவா சர்ஜா ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. நந்தகிஷோர் இயக்கியுள்ள இந்த படத்தில் துருவா சர்ஜாவுக்கு ஜோடி ராஷ்மிகா மந்தனா. வரும் பிப்ரவரி 19-ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு (17.2.2021) இன்று சென்னையில் நடந்தது. சந்திப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜுன், படத்தின் நாயகன் துருவா சர்ஜா, படத்தின் கதையாசிரியர் அருண் பாலாஜ...
இளையராஜா ஸ்டுடியோவுக்கு விசிட் அடித்த ரஜினி!

இளையராஜா ஸ்டுடியோவுக்கு விசிட் அடித்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  இசைஞானி இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை தி நகரில் இசைஞானி இளையராஜா சொந்தமாக "இளையராஜா ஸ்டுடியோ" என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை இளையராஜா தி நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் , அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். பின்னர் இளையராஜா சொந்த ஸ்டூடியோ கட்டியிருப்பதை கேள்விப்பட்டு அந்த ஸ்டூடியோவுக்கு இளையராஜாவுடன் சென்று இருக்கிறார் ரஜினிகாந்த். ஸ்டூடியோவை சுற்றி பார்த்து, வியந்து, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி இருக்கிறார். பின்னர் இசைஞானியுடன் நீண்ட நேரம் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். இந்நிலையில் இன்றும் 2வது முறையாக இளையராஜா ஸ்டூடியோவுக...
திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை – பேரரசு

திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை – பேரரசு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை - ‘உதிர்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், தலைவெட்டி முருகன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். “நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா...” உள்ளிட்ட பல உலக புகழ்பெற்ற ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்த அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 15 ஆம் தேதி மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவி...
தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டு பிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்!

தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டு பிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டுபிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்! தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிக்கான டெண்டர் விட்டதில் 668 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்ததை வீட்டுவசதி வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆதாரங்களுடன் வெளியில் கொண்டுவந்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். இந்த விவகாரம் குறித்து விருதுநகரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தலைவர் பேசும்போது அழுத்தம் கொடுக்கவே இப்போது அந்த டெண்டர்கள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தலைவரின் பேச்சுக்கு கிடைத்த பெரிய வெற்றி. அதற்காக வீட்டுவசதி வாரிய தொ.மு.ச. பேரவை சார்பில் அதன் பொதுசெயலாளர் பூச்சி எஸ்.முருகன், சங்க வழக்கறிஞர்கள் புகழ் காந்தி, முத்துக்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் இன்று தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்....
சிலிண்டர் விலை உயர்வு தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதன் பரிசு – முக ஸ்டாலின் கண்டனம்

சிலிண்டர் விலை உயர்வு தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதன் பரிசு – முக ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics
  சிலிண்டர் விலை உயர்வு தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதன் பரிசு - முக ஸ்டாலின் கண்டனம் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்த நிலையில் இன்று கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதற்கான பரிசுதான் மானியமில்லா சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்வு என திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதன் பரிசு மானியமில்லா சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்வு என்று கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே மானியத்துடன் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூபாய் 100 உயர்ந்துள்ளது என்றும் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்துகொண்டே போகிறது என்றும் ஏன் இந்த கொடூரம் என்றும் மக்கள் நிம்மதியாக வாழ வரிகளை குறைத்து விலகி விலை உயர்வை தடுக்க என்றும் அவர் கூறியுள்ளார் நேற்று சென்னை வந்த பிரதமர் அடுத்த நாளே தமிழக மக்கள் உள்பட இந்த...