சூர்யா தயாரிக்கும் படத்தில் தனது மகன் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக நடிக்கும் அருண் விஜய்!
சூர்யா தயாரிக்கும் படத்தில் தனது மகன் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக நடிக்கும் அருண் விஜய்!
நடிகர் விஜய்குமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜய் அவர்களின் மகனுமாகிய ஆர்ணவ் விஜய், பிரபல நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார், எனும் செய்தி வெளியாகியதிலிருந்தே, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தற்போதைய மிகப்பெரும் ஆச்சர்யம் யாதெனில், இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார் என்பது தான்.
இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது...
இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் விளம்பரத்திற்காகவும், ஆர்ணவ் விஜய்க்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார். நான் த...









