பேரறிவாளன் விடுதலை ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் முடிவெடுப்பார் – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
பேரறிவாளன் விடுதலை ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் முடிவெடுப்பார் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மாநில ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப்பெற்று சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குதான் உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
குடியரசுத் தலைவருக்கு பதிலாக மாநில ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் முடிவு செய்வார் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா தெரி...









