செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

திருமணத்தில் முடிந்த ஹீரோயின் ஆனந்தி காதல்

திருமணத்தில் முடிந்த ஹீரோயின் ஆனந்தி காதல்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திருமணத்தில் முடிந்த ஹீரோயின் ஆனந்தி காதல் தமிழில் கயல், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஆனந்தி. இவருக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில்அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்துகொண்டனர். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றே கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது காதல் திருமணம் தானாம். ஆனந்தியின் கணவர் சாக்ரடீஸ் மூடர் கூடம் பட இயக்குனர் நவீனின் மைத்துனராம். நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் சாக்ரடீஸ் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில் ஆனந்தி தான் ஹீரோயின். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது. பின்னர் இருவீட்டாரும் சம்மதித்ததை அடுத...
நீ அசுரனா… நான் ஈஸ்வரன்…. என்று  வசனம் பேசிய சிம்பு! 

நீ அசுரனா… நான் ஈஸ்வரன்…. என்று  வசனம் பேசிய சிம்பு! 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நீ அசுரனா... நான் ஈஸ்வரன்.... என்று  வசனம் பேசிய சிம்பு! சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆகஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது. இதில் சிம்பு நீ அசுரனா... நான் ஈஸ்வரன்.... என்று சிம்பு பேசும் வசனம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது....
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப்பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும...
வெளியாகிய மாஸ்டர் 3 வது புரோமோ!

வெளியாகிய மாஸ்டர் 3 வது புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸ்டர்  3 வது புரோமோ வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனமே சிட்டி ஸ்டோரி, பாடல் வெளியாகி வைரலான நிலையில், இன்று மாலை 7 மணிக்கு மாஸ்டர் ரெய்ட் பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்தனர். மேலும், விஜய்யின் மாஸ்டர் படத்தின் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் சில்நாட்களுக்கு முன் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதேசமயம் இப்பாடலின் வீடியோ பிரமோவை படக்குழு வெளியிட்டது. அதேபோல் நேற்று மாலை மாஸ்டர் படத்தில் 2 வது வீடியோ புரோமோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது இப்படத்தயாரிப்பு நிறுவனம். விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தில் அவரது குரலைக் கேட்டு உற்சாகமடைந்துள்ளனர். சென்ற வருடத்தில் அவரது படம் எதுவும் கொரொனா கால ஊரடங்கினால் ரிலீசாகாத நிலையில...
ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வாய்ப்பு!

ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வாய்ப்பு! வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்.  அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் சசிகலா மீதான வருமானவரித்துறை தாக்கல் செய்துள்ள வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.   இந்த வழக்கில் சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி சசிகலா தரப்பில் அளித்த மனுவில் பெங்களூரு சிறையில் இருந்து ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே பதில் மனு அளிக்க அவகாசம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  ...
தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்!

தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்! ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் அடுத்து தனுஷ் வைத்து புதிய படம் இயக்கவுள்ளார் . தற்போது இவர் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷின் 43-வது படத்தை அவர் இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார்.இந்த படத்தில் வசனங்கள் மற்றும் கூடுதல் திரைக்கதைக்காக பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் இணைந்தார். தற்போது இந்த படத்தில் தடம்,மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்திய ஸ்ம்ருதி வெங்கட் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்!

தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்! அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 306 ஓட்டுகள் பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் (232 ஓட்டு) தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கூறிய டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாக டிரம்ப் தரப்பில் மாகாண கோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் மூலம் டிரம்பின் சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. ஆனாலும், டிரம்ப் தொடர்ந்து தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வந்தார். அதேபோல் அவரது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை பாராளும...
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் செகண்ட் புரோமோ வெளியாகியுள்ளது .   https://twitter.com/Jagadishbliss/status/1346796208568770565?s=20 தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர். இந்நிலையில் இன்று விஜய்யின் மாஸ் வசனங்களுடன் செகண்ட் புரோமோ இணையத்தை தெறிக்க விடுகிறது. அதில் ‘இதுக்கு முன்னாடி இங்க வந்த வங்கலாம் உயிர் பயத்தால ஓடிப்போய்ருக்கலாம் ஆன...
உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்ட கல்லக்குடி போராட்ட களம்!

உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்ட கல்லக்குடி போராட்ட களம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கல்லக்குடியில் போராட்டம் நடத்திய இடத்தை உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் கல்லக்குடியில் பெயர் டால்மியாபுரம் என மாற்றி அமைக்கப்பட்ட அதை கண்டித்து 1...
ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் – மத்திய அரசு

ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் பரவி வருகிறது. இது முந்தைய வைரசை விட வேகமாக பரவி வருவதாகவும், வீரிய மிக்கதாகவும் உள்ளதாக பிரிட்டன் அரசு கூறியது. இதையடுத்து பிரிட்டனுக்கு இடையேயான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்தது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் ஜனவரி8 முதல் 30ம் தேதி வரை 5 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களில் இருந்து பிரிட்டனுக்கு  விமானம் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது....