‘சீதா பயணம்’ பட விமர்சனம் 3/5
பெரும் பணக்காரர் சத்யராஜின் ஒரே மகளான ஐஸ்வர்யா அர்ஜூன், தான் செல்ல வேண்டிய ஒரு இடத்திற்கு போகும் வழியில் சிலரால் பல இடையூறுகளை சந்திக்கிறார். நாயகன் நிரஞ்சனாலும் அவருக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கிடையே, அவர் செல்ல இருந்த இடத்தில் பெரும் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கிறார்கள். காலதாமதமாக வந்ததால் ஐஸ்வர்யா அர்ஜூன், அந்த விபத்தில் இருந்து தப்பித்து விடுகிறார். விபத்தில் சிக்காமல் தான் உயிர் பிழைத்ததற்கு காரணம், வழியில் தனக்கு இடையூறு செய்தவர்கள் தான் என்று உணரும் ஐஸ்வர்யா அர்ஜூன், அவர்களை மீண்டும் சந்தித்து நன்றி தெரிவிக்க முடிவு செய்கிறார்.
அதன்படி, அவர்களை மீண்டும் சந்திக்க ஐஸ்வர்யா அர்ஜூன் மேற்கொள்ளும் பயணத்தில் அவருக்கு காதலோடு, சில பிரச்சனைகளும் வருகிறது. அது என்ன ?. அதில் இருந்து விடுபட்டு அவர் நினைத்ததை செய்தாரா ?, என்பதை பாசம், கதல், அன்பு ஆகிய உணர்வுகளை போற்ற...









