சிம்பு திருமணத்திற்கு பிறகு என் திருமணம் – பத்திரிகையாளர் சங்க விழாவில் ஜெய் கல கல பேச்சு!
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை உறுப்பினர்களின் சந்திப்பு நடைபெற்றது. இந் நிகழ்வில் மாஸ்டர் தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ, நடிகர் ஜெய் மற்றும் சுப்பு பஞ்சு கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் சுவாரஸ்யமாக பல செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் பேச்சு...
சிம்பு திருமணத்திற்கு பிறகு என் திருமணம் - ஜெய்..
விஜய் சார் கிட்ட 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன் - ஜெய்
இதில் நடிகர் ஜெய் பேசும்போது பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன். ஆனால், அவர் நீ தான் ஹீரோ ஆகிட்டல்ல.. அப்புறம் ஏன்.. என்று கேட்டு விட்டார்.
திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செ...









