செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

ஸ்லிம் லுக்கில் எமி ஜாக்சன் வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்!

ஸ்லிம் லுக்கில் எமி ஜாக்சன் வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ஸ்லிம் லுக்கில் எமி ஜாக்சன் வெளியிட்ட அரை நிர்வாண புகைப்படம்! தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு எமி மாறி இருக்கிறார். ஸ்லிம் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் எமி ஜாக்சன், தற்போது அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.  ...
புற்றுநோய் பாதிப்பு… சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் நடிகர்

புற்றுநோய் பாதிப்பு… சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் நடிகர்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்தவர் தவசி. அப்படத்தில் சூரியின் தந்தையாக நடித்திருந்த அவர், கருப்பன் குசும்புக்காரன் என்கிற ஒற்றை வசனம் மூலம் பிரபலமானவர். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் தவசி நடித்துள்ளார். தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருகிறார். இந்நிலையில் சிகிச்சைக்கு நிதியுதவி செய்யுமாறு தவசி மற்றும் அவரின் மகன் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரிய மீசையும், தாடியுமாய் கம்பீர குரலுடன் இருப்பது தான் அவரின் அடையாளமே. ஆனால் அவர் தற்போது மொட்டை அடித்து எலும்பும், தோலுமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு சினிமா பிரபலங்கள் உதவுமாறு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். https...

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்” பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு.G.N.அன்புசெழியன் அவர்களின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் அவர்கள் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். தீபாவளி திருநாளாகிய இன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” மதுரை மல்டிபிளக்ஸை திறந்து வைத்தார். தீபாவளி தினமான இன்று வெளியாகும் புதிய படங்களை “கோபுரம் சினிமாஸ்” திரையரங்குகளில் திரையிட்டு இதன் சேவையை துவக்குகிறார். மேலும் தமிழகமெங்கும் பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். “கோபுரம் சினிமாஸ்” நிற...
ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஜுனியர் என்.டி.ஆர். இப்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ‘RRR’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய பழங்குடியின தலைவரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. “ஆர் ..ஆர்..ஆர்” படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நிறைவடைந்ததும், மார்ச் மாதம் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார், ஜுனியர் என்.டி.ஆர். இந்த படத்தை திரிவிக்ரம் டைரக்ட் செய்கிறார் ஜுனியர் என்.டி.ஆரும் திரிவிக்ரமும் இணைந்து ஏற்கனவே ‘அரவிந்த சமதே வீர ராகவா’ என்ற படத்தை கொடுத்துள்ளனர். ‘AINANU POYIRAVALE HASTINAKU’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படம், ஜுனியர் என்.டி.ஆருக்கு 30 – வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஜுனியர் என்.டி.ஆர். ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். இந்தப்ப...
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சி யதார்த்தமானதாக இருக்கும் – தினேஷ் குண்டுராவ் 

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சி யதார்த்தமானதாக இருக்கும் – தினேஷ் குண்டுராவ் 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சி யதார்த்தமானதாக இருக்கும் - தினேஷ் குண்டுராவ் காங்கிரஸின் பலம் மற்றும் கட்சிகளின் வாக்கு அடிப்படையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு இருக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்து உள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், தமிழக சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு மிகக்குறைந்த இடங்களே வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 8 இடங்களை மட்டுமே அந்த ...
தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய வழிமுறைகள்!

தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய வழிமுறைகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்றவற்றைச் செய்ய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன தமிழக வரைவு வாக்காளர் பட்டியலைத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வெளியிட்டார். இந்த வரைவு பட்டியலின் அடிப்படையில் பெயர் சேர்க்க, நீக்க, மற்றும் பெயரில் அல்லது திருத்தங்கள் செய்ய விரும்புவோர் டிசம்பர் 15 வரை செய்யலாம். மேலும் இதற்கான முகாம்கள் அந்தந்த பகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் நவம்பர் மாதம் 21 ,22, 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டிசம்பர் மாதம் 5, 6, 12 மற்றும் 13 ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 22.01.2021 அன்று வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் புதியதாகப் பெயர் சேர்க்க விரும்புவோர் 01.01.2021 அன்று அல்லது அதற்கு முன்பு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்...
மம்மூட்டியின் ‘மாஸ்டர் பீஸ்’ காப்பிதான் ‘மாஸ்டர்’?

மம்மூட்டியின் ‘மாஸ்டர் பீஸ்’ காப்பிதான் ‘மாஸ்டர்’?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியானது . ஏற்கனவே கொரியன் திரைப்படமான சைலன்ஸ்ட் திரைப்படத்தின் காப்பி என சொல்லப்பட்ட மாஸ்டர் டீசரில் இடம்பெற்றிருந்த சில காட்சிகளை வைத்து இந்த படம் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த மாஸ்டர் பீஸ் என்ற படத்தின் காப்பி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது....
2 மில்லியன் லைக்ஸ்: புது உலக சாதனை படைத்த விஜய்யின் மாஸ்டர் டீஸர்!

2 மில்லியன் லைக்ஸ்: புது உலக சாதனை படைத்த விஜய்யின் மாஸ்டர் டீஸர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் மாஸ்டர். மாஸ்டர் படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய முடியாமல் இருந்தாலும் விஜய் இல்லாத தீபாவளியா? என்பதைப்போல மாஸ்டர் படத்தின் டீசர் வெளியானது. இதுவரை வந்த விஜய் படங்களில் முற்றிலும் மாறுபட்டு இருந்த மாஸ்டர் டீசர் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதன் விளைவாக வெறும் 24 மணி நேரத்தில் 20 மில்லியன்(2 கோடி) பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அது மட்டுமில்லாமல் வேறு ஒரு முக்கியமான உலக சாதனை படைத்துள்ளது மாஸ்டர் டீசர். மிகக் குறுகிய காலத்தில் 2 மில்லியன் லைக் பெற்ற ஒரே டீசர் என்ற சாதனை படைத்துள்ளது. உலக சினிமாவிலேயே இதுதான் முதல் முறையாம். இதனை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்....
ஹாலிவுட்டை ஓரம் கட்டி அமேசானில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சரித்திரம் படைத்த சூரரை போற்று

ஹாலிவுட்டை ஓரம் கட்டி அமேசானில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சரித்திரம் படைத்த சூரரை போற்று

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹாலிவுட்டை ஓரம் கட்டி அமேசானில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சரித்திரம் படைத்த சூரரை போற்று சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வாழ்க்கை வரலாறு படமாக உருவான சூரரைப்போற்று அமேசான் தளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. தியேட்டரை குறி வைத்து உருவான சூரரைப்போற்று திரைப்படம் எதிர்பாராத சிக்கல்களால் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியானது. ரசிகர்கள் பெரிய அளவில் கவலை அடைந்தாலும் சூர்யா நடிப்பில் புதிய படத்தை பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் அமேசான் தளத்தை நோக்கி ரசிகர்கள் பெரிய அளவில் படையெடுக்க ஆரம்பித்தனர். இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு அமேசான் தளத்தில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதால் சர்வரே திணற... அதுமட்டுமல்லாமல் இதுவரை அமேசான் தளத்தில் வெளியான ஹாலிவுட் படங்களுக்கு கூட இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்கிறார்கள். தற்போது சூரரைப்போற்று படம் அமேசான் ...
தென்னிந்திய மொழிகளில் ‘ரவுடி பேபி’ படைத்த புதிய சாதனை!

தென்னிந்திய மொழிகளில் ‘ரவுடி பேபி’ படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மாரி படத்தின் இரண்டாவது பாகமாக வெளியான படம் மாரி 2. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் 2018-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதில், ரவுடி பேபி பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷ் , சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைராலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. மேலும் இந்தப் பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளையும் 41 நாட்...