செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

யுவனை வாழ்த்திய போனி கபூர் – ட்ரெண்டிங்கில் ‘வலிமை’ ஹேஷ்டேக்

யுவனை வாழ்த்திய போனி கபூர் – ட்ரெண்டிங்கில் ‘வலிமை’ ஹேஷ்டேக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதில் நடிகர் கார்த்திகேயா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட்டன. அதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது ரசிகர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகின. ஆனாலும்‘வலிமை’ படக்குழு நீண்ட நாட்களாக படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடாததால் அப்டேட் வெளியிட வேண்டும் ...
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளி...
ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்… இது தமிழகமா, வடமாநிலமா?- மு.க. ஸ்டாலின்

ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்… இது தமிழகமா, வடமாநிலமா?- மு.க. ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்... இது தமிழகமா, வடமாநிலமா?- மு.க. ஸ்டாலின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ‘‘தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கிக் கலாச்சாரம்; கள்ளத்துப்பாக்கிகளின் கணக்கற்ற புழக்கம்! காவல்துறையை வைத்திருக்கும் முதல்வருக்கு சுயவிளம்பரப் படப்பிடிப்புக்கு மட்டும்தான் நேரம் இருக்கிறதா?’’ எனப் பதிவிட்டுள்ளார். சென்னையில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். சிறுபனையூர் தக்கா கிராமத்தில் ஷான் என்பவர் மீது ஹாரூண் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த நிலையில்தான் பழனியில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. https://twitter.com/mkstalin/status/1328346141637832704?s=20...
அல்வா விற்கும் கதை சொல்ல வரும் அமித்ஷா – காங்கிரஸ் எம்.பி.

அல்வா விற்கும் கதை சொல்ல வரும் அமித்ஷா – காங்கிரஸ் எம்.பி.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பா.ஜனதா கட்சியின் முக்கியத் தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா வருகிற 21-ந்தேதி தமிழகம் வருகிறார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் எல். முருகன் நேற்று தெரிவித்தார். மேலும், அமித் ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ‘‘அல்வா விற்பதைப் போன்ற பெரும் கதை ஒன்றை சொல்ல வருகிறார் அமித்ஷா. இதற்கு முன் பலமுறை தமிழகம் வந்த அமித் ஷா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’’ என்றார்....
2021 சட்டமன்ற தேர்தலில் மு.க. அழகிரி ஆதரவு யாருக்கு?

2021 சட்டமன்ற தேர்தலில் மு.க. அழகிரி ஆதரவு யாருக்கு?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  2021 சட்டமன்ற தேர்தலில் மு.க. அழகிரி ஆதரவு யாருக்கு? மதுரையில் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே அது குறித்த முடிவுகள் தெரிவிக்கப்படும். கொரோனா நோய் பரவல் காரணமாக எனது ஆதரவாளர்களை சந்திக்கவில்லை எனது ஆதரவாளர்கள் என்னிடம் தான் உள்ளனர் அனைவரும் நன்றாக உள்ளனர். திமுகவில் புகைச்சல் அதிகமாகியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திமுகவின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளலாம். அதுகுறித்து தற்போது என்னால் கூற முடியாது ஏனெனில் நான் ஜோதிடன் கிடையாது. தற்போது திமுகவில் தற்போது உள்ள சில தலைவர்கள் பதவிக்காகவே இருக்கின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அந்த நிலைமையை நீங்களே பார்க்கத்தான் போகிறீர்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கல...
சிம்புவின் ‘மாநாடு’ பட ஃபர்ஸ்ட் லுக் விரைவில்…

சிம்புவின் ‘மாநாடு’ பட ஃபர்ஸ்ட் லுக் விரைவில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் நேற்று தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஈஸ்வரன் டீசருக்கு வாழ்த்து தெரிவித்த வெங்கட் பிரபு ”ஈஸ்வரனுக்கு எங்கள் அப்துல் காலிக்கின் வாழ்த்துக்கள். விரைவில் மாநாடு ஃபர்ஸ்ட் லுக்” என பதிவிட்டுள்ளார்.   https://twitter.com/vp_offl/status/1327854118635937793?s=20  ...
இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி

இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி  நடித்த  ‘சுல்தான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜார்ஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். தீபாவளியை முன்னிட்டு இந்த அறிவிப்பை இப்படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://twitter.com/johnsoncinepro/status/1327662325470433280?s=20...
வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினி!

வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ரஜினி விரைவில் கட்சி அறிவிப்பை வெளியிட்டு, 2021ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில்  போட்டியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை வந்து ரஜினியின் அரசியல் திட்டத்தை மாற்றிவிட்டது. ரஜினி தன் உடல்நலனை கருத்தில் கொண்டு வீட்டிலேயே இருக்கிறார். ரஜினியின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவது வழக்கம். ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். கேட்டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி கோஷமிட்டனர். உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால், பண்டிகை நாளான இன்று சந்திக்க வந்த ரசிகர்களை ஏமாற்றம...
சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

CINI NEWS, HOME SLIDER, REVIEWS, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், நடிகர்கள், விமர்சனம்
தீபாவளி அன்று ரிலீஸ் ஆன புதுப்பட டீசர்கள் குறித்த கோடஙகி பார்வை https://youtu.be/HiesRfT8lkU