HOME SLIDER
டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது – ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் டிரம்ப் பிரசார குழு வழக்கு தொடுத்து உள்ளது.
இந்நிலையில்,வெல்லிங்டன் மாகாணத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜோ பைடன், டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது என்றார்.
இதுதொடர்பாக பைடன் கூறுகையில், டிரம்பின் நடவடிக்கை அதிபரின் பாரம்பரியத்திற்கு உகந்ததாக இருக்காது. ஜனவரி மாதத்தில் அனைத்தும் பலனளிக்கும் விதமாகவே அமையப் போகிறது.
நம்பிக்கையான எதிர்பார்ப்பு என்னவென்றால், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்கிறார்கள். கடந்த 5,6 ஆண்டுகளில் நாம் கண்டு வந்த கசப்பான அரசியலில் இருந்து நமது நாட்டை நாம் விடுவிப்போம் என்று நம்புகிறேன்.
நடந்து விடும் எ...
உறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டை போடும் விக்கி!!
தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. இங்கு இருப்பவர்கள் பல மொழி படங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
அதற்கு படத்தின் யதார்த்தத்தை மீறாமல் இருப்பதே முக்கிய காரணம். அந்த வகையில் 2016ல் வெளியான “உறியடி” படத்தில் இடம் பெற்ற சண்டைக்காட்சிகள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக அந்தப் படத்தில் தாபாவில் நடக்கும் சண்டைக்காட்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சண்டைக் காட்சியை யதார்த்தமாகவும் தத்துரூபமாகவும் வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் விக்கிக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வீரம் படத்தில் இடம் பெற்ற அஜித்-அதுல் குல்கர்னி க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியை விக்கி அமைத்தார். இப்படத்தின் சண்டைக் காட்சியும் அதிக அளவில் பேசப்பட்டது.
இப்படத்தில் பயணித்த அனுபவம் பற்றி விக்கி கூறும்போது, நான் உறியடி படத்தில் பணிப...
விஷால் செய்த தவறை இப்போது டி.ஆர்.செய்கிறார் பாசிட்டிவ் அப்ரோச் எங்களுடையது – ராமசாமி முரளி!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி சார்பில் பலர்போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில்” தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி” மட்டுமே தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது
இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேனாண்டாள் ராமசாமி@முரளியுடன்தேர்தல்களநிலவரம்பற்றி ஒரு பேட்டி.
1.என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.?
தமிழ்த்திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பதுVPF கட்டணம். அதைக்கட்ட மாட்டோம் என்றும் அதற்க...
தீபாவளி ரிலீசில் களம் இறங்கும் ரிஷியின் “மரிஜுவானா”
தீபாவளி ரிலீசில் களம் இறங்கும் ரிஷியின் "மரிஜுவானா"
மரிஜுவானா’ படத்தில் ரிஷி ரித்விக் கதாநாயகனாகவும் ஆஷா பாத்தலோம் நாயகியாகவும் நடித்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எம்.டி.ஆனந்த் இயக்கி உள்ளார். எம்.டி.விஜய் தயாரித்துள்ளார்.
போதை பழக்கத்துக்கு அடிமையான ஒருவனின் சைக்கோ கொலைகளை மையப்படுத்தி தயாராகி உள்ளது இந்த மரிஜுவானா. படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி யூ சான்றிதழ் கேட்டனர். ஆனால் 52 சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அவற்றை வெட்டி நீக்கினால் யூஏ சான்றிதழ் தருவதாகவும் தெரிவித்தனர். படக்குழுவினர் உடன்படவில்லை. இதையடுத்து படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் எம்.டி.ஆனந்த் கூறியதாவது:-
“உண்மை சம்பவங்களை வைத்து மரிஜுவானா படத்தை எடுத்துள்ளோம். போதைக்கு அடிமையானவர்களால் சமூகத்தில் நடக்க...
சூர்யாவின் சூரரைப் போற்று படம் ஏன் பார்க்க வேண்டும்? 4 காரணங்கள்
அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள்
இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக்கிறது.
ஒவ்வொரு புது அறிவிப்பின் மூலம் அமேசான் ப்ரைம் வீடியோவின் அடுத்த திரைப்படமான சூரரைப் போற்று ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும், சுவாரசியங்கள் நிறைந்த இந்தத் திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.
தங்களது சீட் பெல்டினை அணிந்து கொண்டு, ஒவ்வொரு ரசிகர்களும், அழகாகக் கோர்க்கப்பட்டுள்ள இந்தக் கதையை அனுபவிக்கக் காத்திருக்கின்றனர்.
சூர்யா, மோகன் பாபு, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி ஆகியோர் இதில் நடித்திருக்கின்றனர். குறைந்த விலை...
ஒரே ஷாட்டில் எடுக்கும் “இரவின் நிழல்” இன்னும் புதுசாய் இருக்கும் -TMJA தீபாவளி விழாவில் பார்த்திபன் அறிவிப்பு
ஒரே ஷாட்டில் எடுக்கும் "இரவின் நிழல்" இன்னும் புதுசாய் இருக்கும் -TMJA தீபாவளி விழாவில் பார்த்திபன் அறிவிப்பு
செய்யாமல்செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது,,,,
வணக்கம்,
இந்த கொரோனா பேரிடர் காலத்தில், எமது பத்திரிகையாளர்களுக்கு ,தக்க சமயத்தில் உதவிய நல் உள்ளங்களுக்கு பல கோடி நன்றிகள்,,தீபாவளி திரு நாளில், ஒரு குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி, இனிப்புகள், தீபாவளிக்கான சிறு தொகை என்று, இந்த இக்கட்டான நாட்களில், எங்கள் இல்லங்களில் தீப ஒளி ஏற்ற , வெளிச்சமாய் இருந்த அததனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும், தீபாவளி நல் வாழ்த்துக்களும்,,
இந்த தீபாவளி விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் தமிழ் சினிமாவின் புதிய பாதை ,இயக்குநர் பார்த்திபன் அவர்கள், விழாவில் கலந்து கொண்டதோடு,எமது மக்களுக்கு புத்தாடைகளும் வழங்கி சிறப்பித்தார்,மே...
அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன் – ஜோ பைடன் வாக்குறுதி
நான் அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக இருப்பேன் - ஜோ பைடன் வாக்குறுதி
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் தனது வெற்றி குறித்து டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ அமெரிக்கா, நமது மிகச்சிறந்த நாட்டை வழிநடத்த நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தற்காக நான் பெருமைப்படுகிறேன்.
நமது முன் கடினமான வேலைகள் உள்ளது. ஆனால், நான் உங்களிடம் வாக்குறுதி அளிக்கிறேன்.. நீங்கள் எனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்கவில்லை என்றாலும் நான் அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக இருப்பேன். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்’ என தெரிவித்துள்ளார்....
வேல் யாத்திரை வழக்கு விசாரணை நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை இன்று முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால் பாஜக சார்பில் தடையை மீறி வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ,நேற்று காலை தடையை மீறி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், கையில் வேலுடன் திருத்தணி நோக்கி புறப்பட்டார்.
பின் தடையை மீறி தொடங்கப்பட்ட வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த யாத்திரையை தொடங்கிய தமிழக பாஜக தலைவர், எல்.முருகன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்தனர்.பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டி.ஜி.பி உத்தரவை எத...
சிம்புவின் அடுத்த அதிரடி… திரையுலகம் ஷாக்!
சிம்புவின் அடுத்த அதிரடி... திரையுலகம் ஷாக்!
https://youtu.be/lpZtKJYvNmY

