செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்க‍ை விண்வெளியிலிருந்து பதிவுசெய்த விண்வெளி வீராங்கனை!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்க‍ை விண்வெளியிலிருந்து பதிவுசெய்த விண்வெளி வீராங்கனை!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை விண்வெளியிலிருந்தே இரண்டாவது முறையாக பதிவுசெய்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக அதிபர் தேர்தலுக்கான தனது வாக்க‍ை விண்வெளியிலிருந்து பதிவுசெய்தார் ரூபின்ஸ். குறை புவி சுற்றுப்பாதையில் இருந்துகொண்டு இவர் தனது வாக்கைப் பதிவுசெய்தார். அமெரிக்க விண்வெளி வீரர்கள், தேர்தலின்போது விண்வெளியில் இருந்தால், அவர்கள், தங்களுடைய வாக்குகளை அங்கிருந்தே பதிவுசெய்யும் வகையில், கடந்த 1997ம் ஆண்டு அமெரிக்காவில் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதுமுதற்கொண்டு, பல விண்வெளி வீரர்கள், இந்த சலுகையை அனுபவித்து வாக்களித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...
தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் கேவலமான சுவரொட்டிகள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் கேவலமான சுவரொட்டிகள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் கேவலமான சுவரொட்டிகள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை அநாமதேய தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழிக்க வேண்டாம்! வாழ்க வசவாளர்கள்! மாநில உரிமைகளைப் பறிகொடுக்கும் கொள்ளைக் கூட்டம் அர்த்தராத்திரியில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தொடர்ந்தால், தமிழ் மக்கள் வழங்கும் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும்! “மக்களை – மாணவர் நலனை – தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க எள்ளளவும் முயற்சிக்காத எத்தர்கள் – சுயஅரிப்பைச் சொறிந்துகொள்ள ஒட்டுபவைதான் அநாமதேயச் சுவரொட்டிகள்; மக்கள் வழங்கும் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும்” தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வெட்கித்தலைகுனிந்து, பெயரோ முகவரியோ வெளியிடத் தெம்பும் திராணியுமற்ற சில திரைமறைவு தில்லுமுல்லுப்...
தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் – நீதிபதிகள் கேள்வி

தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் – நீதிபதிகள் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் - நீதிபதிகள் கேள்வி தமிழ் வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என்றும், தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், தமிழ் வழியில் படித்து டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதில் பலர் இடஒதுக்கீட்டை முறைகேடான வழியில் பெறுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமி...
தமிழ் மொழியை தேசிய மொழியாக்க பாஜக கோரிக்கை வைக்குமா என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி

தமிழ் மொழியை தேசிய மொழியாக்க பாஜக கோரிக்கை வைக்குமா என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழ் மொழியை தேசிய மொழியாக்க பாஜக கோரிக்கை வைக்குமா என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா? என்று பதிவிட்டுள்ளார்....
இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் – ஸ்டாலின்

இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் – ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ​இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம், 11 பேர் உயிரைப் பறித்துள்ள நிலையில் – அது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டு – அது தொடர்பாக முடிவு எடுக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று எடப்பாடி அ.தி.மு.க. அரசு கேட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் இது தொடர்பாக வழக்குகள் ஏற்கனவே தொடரப்பட்டு – ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கடந்த ஜூலை மாதமே அ.தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க. அரசு, உயர்நீதிமன்ற மதுர...
கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை  தாக்கியதாக அர்னாப் மீது வழக்குப்பதிவு

கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை தாக்கியதாக அர்னாப் மீது வழக்குப்பதிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மும்பை அலிபாக் பகுதியில் 2018ம் ஆண்டு இன்டீரியர் டிசைனர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். . அவர் தனது மரணத்துக்கு ரிபப்ளிக் டிவி முதன்மை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி காரணம் என எழுதி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர். அதற்காக அர்னாப் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினருக்கும் அர்னாப் கோஸ்வாமிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதில் பெண் காவல் அதிகாரி ஒருவரை அர்னாப் கோஸ்வாகி தாக்கியதாகக் கூறப்படுகிறது. மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தன்னை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதாக அர்னாப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அர்னாப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள இல்லத்தில் சென்று கைது செய்ய முயன்றபோது பெண் காவலரை அர்னாப் தாக்கியதாக வழக...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை உளறிய சமந்தா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை உளறிய சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார். அதை தொடர்ந்து நான்காவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் ஒயில்ட் டாக் படப்படிப்பில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் நாகர்ஜுனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். நாகர்ஜுனா இல்லாத நேரத்தில் அவரின் மருமகளான சமந்தா பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் தொகுத்து வழங்கினார். ஒயில்ட் டாக் ஷூட்டிங் இன்னும் முடியாததால் இந்த வாரமும், அடுத்த வாரமும் சமந்தா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார் சமந்தா. மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை க...
சிம்பு முழுமையாக மாற்றியுள்ளார் – தங்கை இலக்கியா பாராட்டு

சிம்பு முழுமையாக மாற்றியுள்ளார் – தங்கை இலக்கியா பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார் சிம்பு. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஈஸ்வரன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தனது உடலமைப்பை மாற்றியவுடன், எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிம்பு. அந்தப் புகைப்படங்களுடன் இந்த மாற்றத்துக்கு உதவிய, வழிகாட்டிய அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார். சிம்புவின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு அவருடைய தங்கை இலக்கியா ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சிம்பு பல மாற்றங்களைக் கண்டிருக்கிறார். இந்த மாற்றம் எடைக் குறைப்பு பற்றியது மட்டுமல்ல. தனது சுயம், வாழ்க்கையின் நோக்கம், லட்சியங்களை அறிந்து கொள்ளவும்தான். இந்தப் பயணத்தில் சில நாட்கள் நான் அவருடன் இருந்தேன். அவரது இலக்கை நோக்கி அவர் கடுமையா...
புதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை…தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி

புதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை…தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  புதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் அறிவித்தார். அதில் வருகிற நவம்பர் 10-ந் தேதி முதல் உரிய கட்டுப்பாடுகளுடன் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் வி.பி.எப் என்ற திரைப்பட ஒளிபரப்பு கட்டணத்தை செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒருமுறை கட்டணத்தை மட்டுமே செலுத்த முடியும். ஒரே ஒரு முறை வி.பி.எப் கட்டணத்தை செலுத்தும் முறைக்கு தியேட்டர் உரி...