Vijay attends SPB's funeral
Actor Vijay today attended the funeral of singer SPB. He visited SPB's guest house at Thamaraipakkam and was part of the last journey.
SPB was cremated with State honours. Security was tightened at the guest house. SP Charan performed the last rites.
SPB cremated with State honours
Veteran singer SPB who passed away last afternoon was cremated with State honours today.
His last rites were performed at Thamaraipakkam guest house this morning and the body was taken for cremation.
21 rounds of bullets were fired as his body was laid to rest.
His son SP Charan performed last rites. Fans thronged near his guest house in large numbers to mourn his death.
State Minister Mafoi Pandiarajan paid his last respects on the occasion.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: “என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தீர்கள். உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும். நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன். நம்முடன் இனி எஸ்.பி.பி இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
எஸ்.பி.பி. பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள். எஸ்.பி.ப...
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம்தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி.பி.’’ எஸ்.பி.பி-யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்....
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று.
40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனை ஒன்றையும் தன்வசப்படுத்தி இருக்கிறார்
ஆரம்பத்தில் மோசமான தமிழ் உச்சரிப்புக்காக புறந்தள்ளப்பட்ட எஸ்.பி.பி, பின்னர் எம்எஸ்வி-யின் ஆலோசனைக்கு இணங்க ஓராண்டு பயிற்சி பெற்று தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்றார். அதன்பின் கிடைத்த முதல் வாய்ப்பி...
*பாடகர் எஸ்.பி.பி மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் !!
இந்தியாவில் புகழ் பெற்ற பாடகரும் நடிகருமான திரு. எஸ்.பி .பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது.
"திரு. எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் அவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினரான அவர் பார்போற்றும் பாடகர் மட்டுமல்ல நடிகராகவும் திறமையை வெளிப்படுத்திய ஒப்பற்ற கலைஞர். அவரது மறைவு திரை உலகிற்கும் , கோடான கோடி இசை பிரியர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது இழப்பால் மீளா துயரத்தில் இருக்கும் குடும்பத்தார் ,உற்றார் ,உறவினர்கள் , ரசிகர்கள் ஆகியோர் துக்கத்தில் தென்னிந்திய நடிக...
தன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது - கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்
* "தன்னுடைய சிறைவாசம் மற்றும் விடுதலை குறித்த விவரங்களை மூன்றாவது நபருக்கு தெரிவிக்கக் கூடாது.. சசிகலா விடுதலை குறித்து ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தில் விவரம் பெறப்பட்டது
* 3ம் நபர் விவரம் பெற்றதற்கு எதிராக சசிகலா கடிதம்...
5 ஆண்டுகள்... 58 நாடுகள்... ரூ.517 கோடிகள் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயண செலவாம்!
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:-.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2015 முதல், பிரதமர் 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்’’ என கூறி உள்ளார்
இந்த பயணங்களின்போது இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் விவரங்களுடன் 2015 மார்ச் முதல் 2019 நவம்பர் வரை பிரதமர் மோடி பார்வையிட்ட நாடுகளையும் அவர் பட்டியலிட்டு உள்ளார்...
தமிழகத்தில் வேலை பார்க்கும் வங்கி மேனேஜரின் இந்தி வெறி - ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து கடைசியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள யுத்தப்பள்ளம். இவருக்கு இந்த யுத்தப்பள்ளம் ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் சொந்த நிலம் வீடு ஆகியவை உள்ளது. இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்து வரவு-செலவு பார்த்து வருகிறார், இந்நிலையில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்...