வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

HOME SLIDER

ஆர்.கே.நகரில் நோட்டாவைவிட குறைவான வாக்கு பெற்ற பா.ஜனதா, ஜிக்னேஷ் மேவானி டுவிட்டரில் கேலி

ஆர்.கே.நகரில் நோட்டாவைவிட குறைவான வாக்கு பெற்ற பா.ஜனதா, ஜிக்னேஷ் மேவானி டுவிட்டரில் கேலி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 3,860 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயத்துக்கு 4-வது இடமும், 1,417 வாக்குகள் பெற்ற பாரதீய ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு 5-வது இடமும் கிடைத்தது. பாரதீய ஜனதா வேட்பாளரை விட நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) அதிக வாக்குகள் கிடைத்து இருந்தது. அதாவது நோட்டாவுக்கு 2,373 ஓட்டுகள் கிடைத்து இருந்தன. டி.டி.வி.தினகரனை எதிர்த்து போட்டியிட்டவர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மருது கணேஷ் (தி.மு.க.), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்), கரு.நாகராஜன் (பாரதீய ஜனதா) உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் ‘டெபாசிட்’ இழந்தனர். ஆர்.கே.நகரில் பாரதீய ஜனதா வாங்கிய வாக்கை கேலி செய்து உள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி, “உலகின் மிகப்பெரிய மிஸ்டுகால் கட்சியான பாரதீய ஜனதா, தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான மிஸ்டுகால்களை பெற்ற...
நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கியது

நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. மும்பைவாசிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசாக ஏ.சி. மின்சார ரெயில் கிறிஸ்துமஸ் தினமான இன்று முதல் (திங்கட்கிழமை) பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது. பயணிகளின் வசதிக்காக நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. புறநகர் மின்சார ரெயில்களை இயக்க கடந்த 2002–ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. முன்னதாக ரெயில் சேவையை தொடங்கி வைத்து மந்திரி வினோத் தாவ்டே கூறியதாவது:– மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் ஏ.சி. மின்சார ரெயில் கட்டாயம் தேவை. இந்த நகரங்களில் வெப்பம் மற்றும் தூசிக்கிடையே அலுவலகம் செல்லும் மக்கள் போராடி வருகின்றனர். ஏ.சி. ரெயிலில் அவர்கள் சவுகரியமாக பயணம் செய்ய முடியும். மெட்ரோ, ஏ.சி. ரெயில் சேவைகளால் மேலும் பலர் பொது போக்குவரத்து வசதியினை பயன்படுத்த முன்வருவார்கள் என ...
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? 5 அமைச்சர்கள் விளக்கம்

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? 5 அமைச்சர்கள் விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னையில்  நடந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, பாஸ்கரன் ஆகிய 5 பேர் பங்கேற்கவில்லை. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்தன. இந்தநிலையில் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து கட்சி தலைமைக்கு அமைச்சர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். அந்த விளக்கத்தில், ‘சொந்த ஊர்களில் இருந்தபோது, திடீரென ஆலோசனை கூட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ‘திடீர்’ அழைப்பால் உடனடியாக புறப்பட்டு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை’, என்று குறிப்பிட்டிருந்ததாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...
ஜெ.,சசிகலா மீது பரபரப்பு புகார் கூறிய அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா தினகரனுடன் திடீர் சந்திப்பு..!

ஜெ.,சசிகலா மீது பரபரப்பு புகார் கூறிய அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா தினகரனுடன் திடீர் சந்திப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் அதிக வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். நேற்று தினகரன் வீட்டுக்கு சென்ற வேலூர் எம்.பி. செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் விஷால், பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் அடையாறில் இல்லத்தில் தினகரனுடன் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா சந்தித்து பேசினார். நடிகர் மயில்சாமியும் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து இன்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டபோது முதல் சுற்றில் இருந்து இறுதி சுற்றுவரை நீங்கள் முன்னிலை வகித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதனால், உங்களை சந்தித்து வாழ்த்து தெர...
‘ஐயா’முதல் அறம் வரை சினிமாவில் 14 வருடங்களை நிறைவு செய்த நயன்தாரா..!

‘ஐயா’முதல் அறம் வரை சினிமாவில் 14 வருடங்களை நிறைவு செய்த நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. ஹரி இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதால் ராசியான நடிகை ஆனார். ஆரம்பத்தில் ஒருசில தமிழ் படங்களில் நடித்த இவர், குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்தார். ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி ஜோடி ஆனார். குசேலன் படத்திலும் ரஜினியுடன் நடித்தார். தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் முக்கிய இடம் பிடித்தார். தென்னக படங்களில் பேசப்படும் இடத்தை பிடித்தார். இதற்கிடையே சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்தார். என்றாலும், அதில் இருந்து மீண்டு வந்து நடிப்பில் முழு கவனம் செலுத்தினார். தனது திரையுலக மார்க்கெட்டை நிலையாக வைத்துக் கொண்டார். தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘அறம்’ ...
அரசியலுக்கு முன்னோட்டம் – ரஜினிகாந்த்  ரசிகர்களை நாளை சந்திக்கிறார்

அரசியலுக்கு முன்னோட்டம் – ரஜினிகாந்த் ரசிகர்களை நாளை சந்திக்கிறார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அரசியலுக்கு முன்னோட்டமாக ரஜினிகாந்த் நாளை முதல் தொடர்ந்து 6 நாட்கள் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு ரசிகர்கள் முன்னிலையில் பேச இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. கடந்த முறை ரஜினி காந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார். எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் அறிவிப்பு வரவில்லை. இந்த நிலையில், நாளை (26-ந்தேதி) முதல் ரஜினி மீண்டும் ரசிகர்களை 31-ந் தேதி வரை சந்திக்கிறார். இதில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று சொல்லப...
காஜல் அகர்வாலின் மேல் ஆடை இல்லாத  கவர்ச்சி படம்..!

காஜல் அகர்வாலின் மேல் ஆடை இல்லாத கவர்ச்சி படம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் நடித்தார். அஜீத்துடன் ‘விவேகம்‘ படத்தில் நடித்தார். இப்போது ‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘எம்.எல்.ஏ.’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். உபேந்திர மாதவ் இயக்கும் இந்த படத்தில் கல்யாண்ராம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த நிலையில், காஜல் அகர்வால் மேல் ஆடை அணியாத புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்றாலும், இது இப்போது எடுத்த படம் இல்லை. ஏற்கனவே ஒரு பத்திரிகைக்கு மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்தார். என்று செய்தி வெளியானது. ஆனால் அதை காஜல் மறுத்தார். ஆனால் அந்த பத்திரிகை தரப்பில் அது உண்மைதான் என்று கூறப்பட்டது. இப்போது வெளியாகி இருப்பது அந்த புகைப்...

தந்தையில்லாத 251 பெண்களுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்த சூரத் தொழிலதிபர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சவானி கடந்த 5ஆண்டுகளாக தந்தையை இழந்து வறுமையில் வாடும் பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து வருகிறார். இந்நிலையில், 251 தந்தையை இழந்த பெண்களுக்கு நேற்று சவானி ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார். மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட நிகழ்ச்சியில், சாதி, மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினருக்கும் அவரவர் முறைப்படி திருமணம் நடைபெற்றது. 251 மணப்பெண்களில் 108 பெண்களுக்கு சவானி குடும்பத்தினர் கன்னியாதானம் செய்து வைத்தனர். ஒரே சமயத்தில் நடைபெற்ற திருமண விழாவில் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பெண்களுக்கும் 5 லட்சம் ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. சவானி தந்தை இல்லாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் 824 பெண்களுக்கு திருமணம்...
மு.க.ஸ்டாலின் தலைமையில் 29-ந்தேதி தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு  கூடுகிறது..!

மு.க.ஸ்டாலின் தலைமையில் 29-ந்தேதி தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூடுகிறது..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் வருகிற 29-ந்தேதி கூடுகிறது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டம் மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொடங்குகிறது. உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆர்.கே. நகரில் தி.மு.க.வுக்கு ஏற்பட்ட படுதோல்வி அந்த கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனவே தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்படும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். தேர்தல் தோல்வி குறித்து அ.தி.மு.க. இன்று ஆலோசனை நடத்திய நிலையில் தி.மு.க.வும் ஆலோசனை நடத்த உள்ளது. கட்சியின் வாக்கு வங்கி குறைந்து இருப்பதன் மூலம் கட்சியின் பலத்தை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும்...
மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார் – முதல்வர் பழனிசாமி

மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார் – முதல்வர் பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அ.தி.மு.க.வின் உயர் மட்டக்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை  கூடியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டி.டி.வி. தினகரனும், ஸ்டாலினும் கூட்டுசேர்ந்து இரட்டை இலையை தோற்கடிக்க நினைத்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு கிடைத்தது தோல்வியே அல்ல. மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார்....