செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த கவர்னர் ரவி வரும் போது ஒலித்த “திராவிட நாடு வாழ்க” பாடல்!

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த கவர்னர் ரவி வரும் போது ஒலித்த “திராவிட நாடு வாழ்க” பாடல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்த கவர்னர் ஆர்.என்.ரவி சென்றபொழுது, அங்கு ‘வாழ்க திராவிடம், திராவிட நாடு வாழ்க’ என்ற பாடல் பாடப்பட்டது. மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப் படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மரியாதை செலுத்தியிருந்தார். இதற்காக நிகழ்விடத்திற்கு அவர் காரிலிருந்து இறங்கி சென்ற பொழுது, “வாழ்க வாழ்க திராவிடர்; வாழ்க திராவிட நாடு; வாழ்க!” என்ற பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலை சர்வதேச இசை சங்கம் குழுவினர் மற்றும் பள்ளி மாணவிகள் பாடலைப் பாடினர் முதலமைச்சர் ஸ்டாலின் வரும்பொழுது `மகாத்மா காந்தி வாழ்க; பாரத நாடு வாழ்க’ என்ற பாடல் ஒலிபரப்பானது. ஆளுநர் வருகை தரும் போது திராவிட நாடு பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   &nb...
பிப்ரவரி 1 முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி- சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

பிப்ரவரி 1 முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி- சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிப்ரவரி 1 முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி- சென்னை மாநகராட்சி அறிவிப்பு! சென்னையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு அமல்படுத்தியது. அதேபோன்று வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்லவும், அனைத்து நாட்களும் கடற்கரைகளுக்கு செல்லவும் தடை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்தது. இதை தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதேசமயம் கடற்கரைகளுக்கு கூட்டமாக மக்கள் ச...
உள்ளாட்சி தேர்தல்- தேசிய கட்சிகளுக்கு தண்ணீர் காட்டும் மாநில கட்சிகள்!

உள்ளாட்சி தேர்தல்- தேசிய கட்சிகளுக்கு தண்ணீர் காட்டும் மாநில கட்சிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மிக நீண்ட பாரம்பரியம் மிக்க தேசிய கட்சியான காங்கிரசுக்கும், பலம் வாய்ந்த ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜனதாவுக்கும் தமிழகத்தில் மாநில கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் நேரங்களில் தண்ணீர் காட்டி வருகின்றன. இதனால் காங்கிரசும், பா.ஜனதாவும் விழிபிதுங்கி தவிக்கின்றன. பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் அப்படி என்றால் இப்போது உள்ளாட்சி தேர்தலிலும் படாதபாடு படுகின்றன. 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு தி.மு.க. 14 இடங்களை கொடுத்தது. அப்போது மொத்த வார்டுகள் 155 தான். இப்போது வார்டு எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் காங்கிரசுக்கு ‘அந்த 14’ மட்டும்தான். வேண்டுமானால் மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 இடங்கள் தரலாம் என்று கூறுவதாக கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் சட்டமன்ற தொகுதிக்கு 2 வீதம் 21 சட்டமன்றத்துக்கும் 42 தொகுத...
நடிகை வாணி போஜன் படத்தின் புதிய அப்டேட்!

நடிகை வாணி போஜன் படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை வாணி போஜன் படத்தின் புதிய அப்டேட்! நடிகை வாணி போஜன் மற்றும் 'மெஹந்தி சர்க்கஸ்', 'பெண்குயின்' ஆகிய திரைப்படங்களில் நடித்த மதம்பட்டி ரங்கராஜ் இருவரும் இணைந்து தற்போது ஒரு திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு 'கேசினோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் மார்க் ஜோயல் இயக்குகிறார். கேசினோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது வாணிபோஜன் படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. கேசினோ திரைப்படத்திற்கு ஸ்டான்லி சேவியர் இசையமைத்து விக்னேஷ் ஜே.கே ஒளிப்பதிவு செய்துள்ளார்....
அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை!

அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. மனு தாக்கல் முடிவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. ஆனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்கள் தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேசி முடிவு செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் காங்கிரசுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலே இடங்கள் ஒதுக்குவதால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி நிலவுக...
சட்டென குறையும் கொரோனா… மீளும் தமிழகம்!

சட்டென குறையும் கொரோனா… மீளும் தமிழகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
      இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் 3வது அலை பாதிப்பு, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று 26 ஆயிரத்து 533 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 24,418 ஆக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த ஒருவாரத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிகை ஏறத்தாழ 5 ஆயிரம் குறைந்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 6வது நாளாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக, இன்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 57 ஆயிரத்து 846-ஆக அதி...
“வருங்கால சூப்பர் ஸ்டார் ” ஆகவேண்டுமா? அறிவிப்பு வெளியிட்ட இயக்குனர் சுசி கணேசன்!

“வருங்கால சூப்பர் ஸ்டார் ” ஆகவேண்டுமா? அறிவிப்பு வெளியிட்ட இயக்குனர் சுசி கணேசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இசை மேதை இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது . சுவரில் கரிக் கட்டையால் கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது இருவரும் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .அதற்கான விடை நடந்த பிரஸ்மீட்டில் கிடைத்தது தயாரிப்பாளர் மஞ்சரி சுசிகணேசன் பேசும்போது "ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறோம் . இது தமிழில் எங்களது முதல் தயாரிப்பு . எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் இயக்குனர் சுசி கணேசன் இந்த படத்தில் கதாநாயகன் தேர்வையும் புதுமையாக யோசித்திருக்கிறார் . இந்த படத்துக்குகாகவே பிரபலமான டிவியில...
இலங்கையில் விண்ணை முட்டும் சாப்பாட்டு விலை! பரிதாபத்தில் மக்கள்!!

இலங்கையில் விண்ணை முட்டும் சாப்பாட்டு விலை! பரிதாபத்தில் மக்கள்!!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  இலங்கையில்  அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பார்சல் விலையை மேலும் அதிகரித்திருப்பது மக்களிடயே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பதற்கு இடைநிலை வர்த்தகர்களே காரணம் என சங்கத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் இதுவரையில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோதுமை மாவு கையிருப்பு உள்ள போதிலும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கறுப்பு சந்தையில் கோதுமை மாவிற்கு மேலதிகமாக 2,500 ரூபாய் வழங்க நேரிட்டுள்ளது. அரிசி விலை அதிகரிப்பால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. சிகப்பு அரிசி ஒரு கிலோ கிராம் 170 ரூபாயை கடந்துள்ளது. வெளிநாட்டுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிகளில் பெரிதாக சோறு இல்லை. முன்னர் ஒரு கிலோ கிராம் அரிசியில் 6 பார்சல்கள் செய்ய ம...
தடுப்பூசிக்கு எதிராக நூற்றுக்கணக்கான வாகனங்கள் முற்றுகை – ரகசிய இடத்தில் தஞ்சமடைந்த  பிரதமர்

தடுப்பூசிக்கு எதிராக நூற்றுக்கணக்கான வாகனங்கள் முற்றுகை – ரகசிய இடத்தில் தஞ்சமடைந்த பிரதமர்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  அமெரிக்கா- கனடா எல்லையை கடக்கும் லாரிகளின் ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தலைமையிலான அரசு அறிவித்தது. இந்த கடுப்பாடுகள் ட்ரக் ஓட்டுநர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது   கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான ட்ரக்குகள் தலைநகர் ஒட்டாவாவில் நுழைந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் ரகசிய இடத்தில் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், கனடாவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது. கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே விமானம், ரயில் மற்றும் கப்பல்களில் பயணம் ...
ஆட்டோ சின்னம் கேட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்!

ஆட்டோ சின்னம் கேட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னத்தை வழங்க மாநில தேர்தல் ஆணையம் நிராகரிப்பு செய்துள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி-19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.  இதற்கென பல கட்சிகளும் தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகிறது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தினை சார்ந்தவர்கள் தங்களுக்கென்று பொதுவாக ஆட்டோ சின்னத்தினை வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த மாநில தேர்தல் ஆணையம்,  அவர்களுக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது  ...