“‘வாரண்ட்’ – மே 22ல் வெளியாகும் ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை”
முதன்மை கதாபாத்திரத்தில் விலங்கு, மாமன் பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராக அறிமுகம்
இந்தியா, XX மே 2026: தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய இவர், இந்த தொடரில் நடிப்பதின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் ப...
சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.
சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார். விமான நிலையம் போன்ற நிஜ அனுபவத்தை வழங்கும் ஏர்லைன் கேட்-பாஸ் சிமுலேஷன் பகுதி, சிறிய விமான நிலைய மாதிரி அமைப்பு, உண்மையான விமான அமைப்பு மற்றும் விமான எஞ்சின் பயிற்சி வசதிகள் ஆகியவை மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவத்தை நேரடியாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு.பூமிநாதன் அவர்கள் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 28 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினார்.
சென்னைஸ் அமிர்தாவின் தனித்துவமான பயிற்சி முறையை வெகுவாக பாராட்டிய ஸ்ரீலீலா, மாணவர்களுக்கு வழங்கப...
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க - விஜய்க்கு வாழ்த்தும் அட்வைசும் செய்த ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. Actor Vijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என...
வழக்கறிஞராக தீர்க்கமான பார்வையுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் “சத்தியவான் சாவித்திரி” ஃபர்ஸ்ட் லுக் !!
Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒரு சந்தோசமான சராசரி பெண்ணாக வாழும் கீர்த்தி, அவரது சீனீயர் ஒரு வழக்கில் தவறான பக்கம் வாதாடும் போது, அதை அவருக்...
*மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு 'மொத ராத்திரி' என தலைப்பிடப்பட்டுள்ளது!*
நல்ல கதையம்சத்துடன் கூடிய இந்த எண்டர்டெயினர் திரைப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்!
இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். 'புஷ்பா', 'குட் பேட் அக்லி' போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்ஷன் நம்பர் 3 தற்போது 'மொத ராத்திரி' என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்...
நடிகர் விது நடிக்கும் '29' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ - ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் '29' திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் 'Welcome To The World of 29' என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
'மேயாதமான்', 'ஆடை', 'குலுகுலு' படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளி...
பிரைம் வீடியோ - புஷ்கர் & காயத்ரி - வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) - A.சற்குணம் - கூட்டணியின் 'எக்ஸாம் - EXAM' தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு
இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள 'எக்ஸாம் - EXAM' எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எக்ஸாம் - EXAM' இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஏழு அத்தியாய...
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் “பெத்தி” ஜூன் 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில், உருவாகி வரும் கிராமத்து ஆக்ஷன் டிராமா “பெத்தி” (Peddi), படத்தின் முழு படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது.
வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும் தோற்றத்தில் தோன்றும், அசத்தலான ரி...
இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கிய ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலிருந்து வலுவான கதாபாத்திர காட்சிகளை வெளியிட்டார் விஜய் சேதுபதி!!
விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தொடக்கத்திலிருந்தே அதிரடியான தலைப்பாலும், மர்மமூட்டும் கதைச்சூழலாலும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தத் திரைப்படம், தற்போது தனது புதிய அப்டேட்டின் மூலம் மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது .
படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணிப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு ஒரு சக்திவாய்ந்த முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, புகழ்பெற்ற நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படத்தின் கதாபாத்திர அறிமுக காட்சியை வெளியிட்டு, இந்தத் தீவிரமான குற்ற உலகத்திற்கான முதல் வலுவான பார்வையை வழங...