செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

சிக்ஸ் பேக் தோற்றத்திற்காக ஆறுமாத காலம்  கடின உழைப்பை போட்ட பிக்பாஸ் பிரபலம்!

சிக்ஸ் பேக் தோற்றத்திற்காக ஆறுமாத காலம் கடின உழைப்பை போட்ட பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது இவரது நடிப்பில் ராஜபீமா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் ‘வா மணவாளா..’ என்ற ஆல்பம் சாங் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், ஆரவ் சிக்ஸ் பேக் தோற்றத்திற்கு மாறியிருக்கிறார். இதற்காக 6 ஆறுமாத காலமாக கடின உழைப்பையும், அர்ப்பணிப்பும் செய்திருக்கிறார். ஆரவ் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
வடிவேலு படத்தில் நடித்த பிக்பாஸ் நடிகை!

வடிவேலு படத்தில் நடித்த பிக்பாஸ் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். சுராஜ் இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார். மேலும் வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷம் என்று ஷிவானி பதிவு செய்திருக்கிறார்....
மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் இயக்கி வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை “பொன்னியின் செல்வன்”. இது அனைவரும் அறிந்ததே. இதைத் திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள். சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத்  திரைக்கு...
சூர்யாவுக்கு புரட்சி நாயகன் பட்டம் கொடுத்த சத்யராஜ்!

சூர்யாவுக்கு புரட்சி நாயகன் பட்டம் கொடுத்த சத்யராஜ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவுக்கு 'நடிப்பு நாயகன்' பட்டம் வழங்கிய கதாநாயகி சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா. சத்யராஜ். வினய். சூரி, நடிகை பிரியங்ககா மோகன், இசையமைப்பாளர் டி இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருட...
110 நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது – விக்ரம் பட அப்டேட்!

110 நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது – விக்ரம் பட அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஊரடங்கு காரணமாகவும் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினாலும் விக்ரம் படப்பிடிப்பு தாமதமானது. அதன்பின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் விக்ரம் படத்தின் 110 நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளத...
உக்ரைன் போர் நிமிதமாக சிறிது நேரம் பிராத்தனை செய்தார் நடிகர் சூர்யா!

உக்ரைன் போர் நிமிதமாக சிறிது நேரம் பிராத்தனை செய்தார் நடிகர் சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சூரி, வினய் ராய், இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யா “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழித்து என்னுடைய படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. நாம கொண்டாடிகிட்டு இருக்குற ...
மாஸ் காட்டும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டிரைலர் !

மாஸ் காட்டும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டிரைலர் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். https://youtu.be/cKrz-kWoaSI...
டான் ரிலீஸ் தேதி மாற்றம்!

டான் ரிலீஸ் தேதி மாற்றம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தனர்.   சமீபத்தில் டான் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சிவகார்திகேயன் அறிவித்திருந்தார். மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த ரிலீஸ் தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்...
கதிர் நடிக்கும் ‘இயல்வது கரவேல்’

கதிர் நடிக்கும் ‘இயல்வது கரவேல்’

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் கதிர் நடிக்கும் ‘இயல்வது கரவேல்’ - புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றது !! ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரி மாணவனாக நடித்த கதிர், மீண்டும் முழுக்க முழுக்க கல்லூரியை கதைகளமாக கொண்ட புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாக கொண்ட இந்த படத்திற்கு ‘இயல்வது கரவேல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர், ‘எஸ். எல். எஸ். ஹென்றி’ எழுதி இயக்கும் இப்படத்தை எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். குழந்தை நட்சத்திரமாக நம் அனைவருக்கும் அறிமுகமான யுவலக்ஷ்மி முதல் முறையாக இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ‘மாஸ்டர்’ மகேந்திரன், கரு. பழனியப்பன், ஆடுகளம் நரேன், ...
அஜீத்துக்கு அரசியல் ஆசை இல்லை – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேலாளர் சுரேஷ் சந்திரா!

அஜீத்துக்கு அரசியல் ஆசை இல்லை – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேலாளர் சுரேஷ் சந்திரா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிநடை போடுகிறது. அஜித் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ள இந்த படம் வசூலிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது. இதனிடையே வலிமை திரைப்படத்தின் தாய் பாசம் பற்றிய பாடல் ஜெயலலிதா நினைவு நாளிலும் திரைப்படம் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று வெளியானது. இதனால் அஜித் அரசியலுக்கு வருவார் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நடிகர் அஜித்குமார் மனதளவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டவர் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஜெயலலிதாவின் மேலளார் பூங்குன்றன் சங்கரலிங்கம் அஜித் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.   இதனால் அஜித் குறித்த அரசியல் செய்திகள் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தது. இந்நி...