வியாழக்கிழமை, நவம்பர் 19
Shadow

HOME SLIDER

சினிமாவுக்கு வர உதவி செய்த சனம் ஷெட்டி மீது வழக்கு தொடரும் எண்ணம் இல்லை – தர்ஷன்

சினிமாவுக்கு வர உதவி செய்த சனம் ஷெட்டி மீது வழக்கு தொடரும் எண்ணம் இல்லை – தர்ஷன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    சனம் ஷெட்டி எனக்கு ஆரம்பகாலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு நிறைய உதவி புரிந்து இருக்கிறார்; அவர் மீது எந்த வழக்கும் தொடர மாட்டேன் - தர்ஷன் பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அதுகுறித்து விரிவான விளக்கம் அளித்து அவர் கூறியதாவது: 2016-ல் சென்னைக்கு வந்தேன். நான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, என்னுடைய இருசக்கர வாகனத்தை விற்று விட்டு தான் சென்னைக்கு வந்தேன். வந்ததும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் ஆறு மாத காலம் உதவியாளராக பணிபுரிந்தேன். அங்கங்கே நடக்கும் ஆடிஷனில் கலந்து கொண்டு விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். பிறகு வில்லனாக ஒரு படத்தில் நடித்தேன். 2017 தான் சனம் ஷெட்டியை சந்தித்தேன். அப்போது என்னை அவரது முகநூலில் சேர்த்தார். அதன் பிறகு என்னுடைய ஒவ்வொரு படத்தின் புகைப்படங்கள...
பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தனிநபர் வருமானம் 5 லட்சம் ரூபாய் இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. 5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக வரி குறைப்பு. 7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக வரி குறைக்கப்பட்டு உள்ளது. 10 லட்சம் முதல் 12,5 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால்  30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வரி குறைப்பு 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரி வருமானம் இருந்தால் 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 30 சதவீதம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த வருமான வரி குறைப்பு நடவட...
நேர்மையாக தேர்தல் நடந்தால் ராதாரவி தோல்வி உறுதி என்பதால் சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டமா?

நேர்மையாக தேர்தல் நடந்தால் ராதாரவி தோல்வி உறுதி என்பதால் சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டமா?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டம்! தமிழ் சினிமாவில் இப்போது ஹாட் டாப்பிக் டப்பிங் யூனியன் தேர்தல்தான். நில மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடுகிறார். சின்மயி அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக நடிகர் சங்க தலைவராக இருந்த நாசர் டப்பிங் யூனியன் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு செய்துள்ளார். ஏற்கனவே ராதாரவி டப்பிங் யூனியனை தனது சொந்த அலுவலகம் போல பயன்படுத்தி பல வகையில் பண முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினாலும் அப்படி குற்றம் சுமத்தியவர்களையே சங்கத்தை விட்டு வெளியேற்றியிருக்கிறார் ராதாரவி. பொதுக்குழுவிலும் சங்கத்துக்கு தொடர்பில்லாத அடியாட்களை வைத்துக் கொண்டு யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாதபடி கூட்டத்தை நடத்தி முடித்தார் என்ற க...
டப்பிங் யூனியன் தேரத்லில் ராதாரவியை எதிர்த்து நாசர் போட்டி!

டப்பிங் யூனியன் தேரத்லில் ராதாரவியை எதிர்த்து நாசர் போட்டி!

HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டப்பிங் யூனியன் தேரத்லில் ராதாரவியை எதிர்த்து நாசர் போட்டி! சினிமா டப்பிங் யூனியன் சங்கத்தின் தலைவராக உள்ள ராதாரவி பதவி காலம் முடிவடைந்ததால் தேர்தல் அறிவிக்கபட்டது. டப்பிங் சங்கத்தில் ராதாரவி தலைமையிலான நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்த போதும், அப்படி புகார் எழுப்பும் உறுப்பினர்களை சங்கத்தை விட்டே ராதாரவி நீக்கிவிட அதை எதிர்த்து பலர் நீதிமன்றம் போனார்கள். அப்படி நீக்கப்பட்ட பாடகி சின்மயி நீதிமன்றம் சென்று ராதாரவி எடுத்த தடையை நீக்கி மீண்டும் உறுப்பினராக ஆனார். இந்த நிலையில் டப்பிங் தலைவராக ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராமராஜ்ஜியம் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாடகி சின்மயி போட்டியிடுகிறார். இந்த நிலையில் சின்மயி உள்ள ராமராஜ்ஜியம் அணி சார்பாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் திடீரென மனுத்தாக்கல...
50 லட்சம் மியூசிக் டிராக்குகளை அனுமதியுடன் வைத்திருக்கும் லேகா மியூசிக்!

50 லட்சம் மியூசிக் டிராக்குகளை அனுமதியுடன் வைத்திருக்கும் லேகா மியூசிக்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
    உலக தரத்தில் முறையான உரிமை பெற்ற 50 இலட்சம்  மியூஸிக் ட்ராக்குகள் தயார் நிலையில்! லேகா மியூஸிக்... பிரபல விளம்பர பட இயக்குநரான லேகா ரத்னகுமார் தலைவராக இருக்கும் இந்த இசை நிறுவனம் மிகப் பெரிய சாதனைகளைப் படவுலகில் புரிந்து கொண்டிருக்கிறது. இன்றைய கலைத்துறை வளர்ச்சியில், தொழில் நுணுக்க முன்னேற்றத்தில் இசை விஷயத்தில் நம் திரைப்படங்களும், வெப் தொடர்களும், குறும்படங்களும், வேறு பல கலைப் படைப்புகளும் உலகத் தரத்தில் இசையைக் கொண்டிருக்க வேண்டியது அவசிய தேவையாகவும், காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. இந்தச் சூழலில் அதற்கென்றே அவதாரம் எடுத்திருக்கிறது ‘லேகா மியூஸிக்’ நிறுவனம். இந்திய திரைப்படத் துறைக்கு இதன் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத, மதிப்பிற்குரிய செயலை இந்த இசைக் கருவூலத்தின் மூலம் செய்கிறார் லேகா ரத்னகுமார். அதற்காகவே படவுலகம் நன்றியுடன் அவருக்கு கடன்பட்டிருக்கிற...
இன்று முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

இன்று முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக்கூட்டம் நடக்கிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அவரது உரையில், அரசின் கொள்கைகள் மற்றும் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம்பெறுகின்றன. ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டுக்கான (2019-2020) பொருளாதார ஆய்வறிக்கையை, பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடியாக இந்த ஆய்வு அறிக்கை இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாகவும் வெற்றிகரமாகவும் செயல்பட அனைத்து எம்பிக்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்....
கமல் – ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்!

கமல் – ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கமல் - ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்! கமல் , ரஜினி இருவரும் சினிமாவில் தனித்தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தாலும் நட்பு ரீதியாக மிக நெருங்கியே இருக்கிறார்கள். அபூர்வ ராகங்கள் படத்தில் இவர்கள் இணைந்து நடித்த பின் பல படங்களில் இணைந்து நடித்தார்கள். அதன் பின் இருவரும் தனித்தனியாக நடித்து வருகிறார்கள். மீண்டும் இவர்களை இணைத்து படம் எடுக்க பிரபலமான இயக்குனர்கள் பலர் முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதற்கிடையில் இருவரும் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்கள். கமல் கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் நின்றார். ரஜினிகாந்த் விரைவில் வருவேன் என சொல்லி இருக்கிறார். இந்த சூழலில் சமீபத்தில் ஹிட் ஆன கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ராஜ்கமல் நிறுவனத்தில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதே நேரம் ரஜினிகாந்த் அவரை அழைத்து பாராட்டியதும் கோடம்பாக்கம் ப...
சினிமாவில் ஜாதி அதிகமாகி விட்டது புறநகர் பட விழாவில்   இயக்குனர் பாக்யராஜ் வருத்தம்!

சினிமாவில் ஜாதி அதிகமாகி விட்டது புறநகர் பட விழாவில் இயக்குனர் பாக்யராஜ் வருத்தம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கமல் கோவின்ராஜ்   தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். E.L.இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் கே.ராஜன் பேசியதாவது.. " இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப்பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. இந்த ஹீரோ அர்னால்டு மாதிரி வந்திருப்ப. இவர் ஹைய்ட்டு இப்படி டான்ஸ் பண்றது கஷ்டம். அதை சூப்பரா பண்ணிருந்தார். இவரிடம் குறையே இல்லை. ஆனால் நம் தமிழ்நாடு ரசிகர்கள் மோசம். ஆயிரம் ரூபாய் கொடுத்து அடுத்தவன் படத்திற்கு ஓடுகிறார்கள். படத்தின் இயக்குநர் மின்னல் முருகன் அருமையா படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் கேமரா ப்யூட்டில்புல். இதை சின்னப்ப்படம் என்று சொல்ல முடியாது. 60 கோடிக்கு படம் எடுத்து ரசிகர்கள் தலையில் கட்டி விடுகிறார்கள். மக்கள் பணத்தை இப்ப...
காவல்துறை உங்கள் நண்பன் பட உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

காவல்துறை உங்கள் நண்பன் பட உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    காவல்துறை உங்கள் நண்பன் பட உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! பி.ஆர்.டாக்கீஸ் தயாரிப்பில் ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தில் சுரேஷ் நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயனின் கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து ஜி. தனஞ்செயன் கூறியதாவது “காவல்துறை உங்கள் நண்பன்” படத்தை பார்த்தபோது தயாரிப்பு மற்றும்  விநியோகத்தில் எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் படைப்பாக விளங்கும் என்று தோன்றியது. மிக வலுவான கதையும், திரைக்கதையும் கொண்ட...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா! விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார். 2015-ல் வெளியான இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. நானும் ரவுடிதான் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்து இப்போது வரை நீடித்து வருகிறது. அதன்பிறகு சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் அந்த படம் கைவிடப்பட்டது. இப்போது புதிய கதையை விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார். அந்த கதை விஜய்சேதுபதிக்கு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பை மே மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்...