செவ்வாய்க்கிழமை, மே 26
Shadow

HOME SLIDER

சிவகார்த்திகேயன் நடிக்கும் “அமரன்” அக்டோபர் 31  தீபாவளி அன்று உலகமெங்கும் வெளியாகிறது!

சிவகார்த்திகேயன் நடிக்கும் “அமரன்” அக்டோபர் 31  தீபாவளி அன்று உலகமெங்கும் வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் 2024  அக்டோபர் 31  தீபாவளி அன்று உலகமெங்கும் வெளியாகிறது. திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்திய ராணுவ வீரர்களின் தீரம் மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருக்கிறார். காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் இந்தப் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய இராணுவ மேஜர் வரதராஜனாக நடிக்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயன் உணர்ச்சிகரமான நடிப்பையும், அதிரடி ஆக்சனையும் வெளிப்படுத்தியிருப்பதால் அமரன் திரைப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கதாநாயகி சாய் பல்லவி தனது ஆழமான நடிப்பினால் பட...
1200 VFX ஷாட்ஸ்களுடன் உருவாகியிருக்கும் படம் சதுர் – இயக்குநர் அகஸ்டின் பிரபு !!

1200 VFX ஷாட்ஸ்களுடன் உருவாகியிருக்கும் படம் சதுர் – இயக்குநர் அகஸ்டின் பிரபு !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
டிரெய்லர் பார்த்து பிரமித்து விட்டேன் - சதுர் பட விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் !! Rocks Nature Entertainment சார்பில், தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் தயாரிப்பில், இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில், அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் ஃபேண்டஸி ஜானரில், நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும், வித்தியாசமான எண்டர்டெயினர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “சதுர்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, தற்போது திரைவெளியீட்டு பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குனர் அகஸ்டின் பேசியதாவது… இந்தப்படத்தில் 1200 VFX ஷாட்ஸ் இருக்கிறது. சாதாரணமாக சின்னப்படத்தில் இவ்வளவு சிஜி இருக்காது. தயாரிப்பாளரிடம் இரண்டு கதை சொன்னேன்...
படம் எடுக்க கோடிகள் முக்கியமல்ல நல்ல கதை தான் முக்கியம் : இயக்குநர் ஆர் .வி .உதயகுமார் பேச்சு!

படம் எடுக்க கோடிகள் முக்கியமல்ல நல்ல கதை தான் முக்கியம் : இயக்குநர் ஆர் .வி .உதயகுமார் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இயக்குநருக்கு கதைப்பற்றும் கதாநாயகிக்கு சதைப் பற்றும் தேவை : 'பார்க்' திரைப்பட விழாவில் பேரரசு கலகல பேச்சு! 'பார்க் 'பட விழாவில் பாட்டு பாடி அசத்திய இயக்குநர் சிங்கம் புலி! படம் எடுக்க கோடிகள் முக்கியமல்ல நல்ல கதை தான் முக்கியம் : இயக்குநர் ஆர் .வி .உதயகுமார் பேச்சு! அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்' திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது, "இந்த இயக்குநர் முருகன் பத்தாண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார்.சினிமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு ரசிகனாக,நான் 30 ஆ...
ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ், ஆல்ஃபா படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகை அலியா பட்!

ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ், ஆல்ஃபா படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகை அலியா பட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகைகள்
  ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ், ஆல்ஃபா படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகை அலியா பட்! பாலிவுட் சூப்பர் ஸ்டார் அலியா பட் இந்த வார தொடக்கத்தில் தனது பெரிய ஆக்‌ஷன் என்டர்டெய்னரான ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ் படமான ஆல்ஃபாவில் தனது படப்பிடிப்பைத் தொடங்கினார். ஆல்ஃபாவின் செட்களில் உற்சாகமாக அலியா வலம் வரும் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த வீடியோ காட்சிகளில் உள்ள அலியாவின் தோற்றம் படத்திற்கான லுக் அல்ல என்பதை தயாரிப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இன்று அதிகாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட செட்டுக்குள் அலியா நடந்து செல்லும் போது வெகு தொலைவில் இருந்து கிளிக் செய்யப்பட்டார். ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ் திரைப்படமான ஆல்ஃபாவில் முதன்மை பெண் கதாபாத்திரமாக, சூப்பர் ஏஜென்டாக ஷிவ் ராவைல் இயக்கத்தில் அலியா பட் நடிக்கிறார். ஷிவ் ராவைல் இதற்கு முன்பு ஒய்ஆர்எஃப் ...
“இவன் தந்திரன்” இரண்டாம் பாகம் ஆரம்பம்!

“இவன் தந்திரன்” இரண்டாம் பாகம் ஆரம்பம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
“இவன் தந்திரன்” இரண்டாம் பாகம் ஆரம்பம்! ‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் தமிழ் திரைப்பபட உலகில் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர்.கண்ணன். வெற்றி பெற்ற இவரது பல படங்களில் ‘இவன் தந்திரன்’ படமும் மாபெரும் வெற்றி பெற்ற படம். ஏழு வருடங்களுக்கு பின் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார் ஆர்.கண்ணன். ‘தள்ளி போகாதே’, ‘பூமராங்’, ‘இவன் தந்திரன்’, ‘காசேதான் கடவுளடா’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ போன்ற படங்களை தயாரித்த மசாலா பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கினார். இப்பொழுது ஜெ.ஜெயகிருஷ்ணன் நல்லாசியுடன், மசாலா பிக்சர்ஸ் சார்பில் “இவன் தந்திரன்-2” படத்தை தயாரித்து இயக்குகிறார், ஆர்.கண்ணன். மணிரத்னம் அறிமுகம் செய்த கவுதம் கார்த்திக், ஷரத்தா ஶ்ரீநாத் இருவரும் ‘இவன் தந்திரன்’ படத்தில் நடித்திருந்தார்கள். இதன் இரண்டாம் பாகத்தில் சரண் நாயகனாக நடிக்கிறார். இவரை, ‘நீதானே...
விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’

விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் 'நொடிக்கு நொடி' பூஜையுடன் துவக்கம் நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் 'நொடிக்கு நொடி' ஆச்சரியங்களை தாங்கி வருகிறது தொலைக்காட்சி நடிகராகவும் தொகுப்பாளராகவும் கொடி கட்டி பறந்த விஜய் ஆதிராஜ், 'புத்தகம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் தனது முத்திரையை பதித்தார். எண்ணற்ற விளம்பர படங்களை இயக்கியதற்கு பின்னர் திரைப்படத்துறையில் தனது லட்சிய பயணத்தை தொடர்வதற்காக 'நொடிக்கு நொடி' எனும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது. நாக்ஸ் ஸ்டுடியோஸ்' ஆரோக்கியதாஸ் தயாரிப்பில் 'செம்பி' புகழ் அஷ்வின் குமார், ஷியாம் மற்றும் நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜனரஞ்சகம் மிக்க ஆக்ஷன் பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகவுள்ளது 'நொடிக்கு நொடி'. திரைப்ப...
அனுராக் காஷ்யப் வழங்க, சைஜு ஸ்ரீதரனின் “ஃபுட்டேஜ்” டிரெய்லர் வெளியாகியுள்ளது !

அனுராக் காஷ்யப் வழங்க, சைஜு ஸ்ரீதரனின் “ஃபுட்டேஜ்” டிரெய்லர் வெளியாகியுள்ளது !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  அனுராக் காஷ்யப் வழங்க, சைஜு ஸ்ரீதரனின் "ஃபுட்டேஜ்" டிரெய்லர் வெளியாகியுள்ளது ! தனித்துவமான கதைசொல்லல் மற்றும் புதுமையான தோலைநோக்கு படைப்புகளுக்காக பெயர் பெற்ற எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் "ஃபுட்டேஜ்"  படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான அனுராக் காஷ்யப் வழங்க, "ஃபுட்டேஜ்" டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது சினிமா ஆர்வலர்கள்  மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “ஃபுட்டேஜ்” படத்தின் டிரெய்லர் தனித்துவமான அழகியல் மற்றும் அழுத்தமான கதைசொல்லலுடன் படம் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. அற்புதமான விஷுவல்கள் மற்றும் அழுத்தமான கதை என  மிகச்சிறப்பான அனுபவம் தருகிறது. மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ ...
நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 'சிங்கப்பூர் சலூன்', 'ஜோஷ்வா இமைப் போல் காக்க', 'பி டி சார்' என வரிசையாக வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் அடுத்த வெற்றி படைப்பாக 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படம் தயாராகவுள்ளது. இதில்  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரின் பட தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தய...
விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் இப்போது பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜா வசூல் ராஜாதான்!

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் இப்போது பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜா வசூல் ராஜாதான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *நடிகர் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் இப்போது பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜா!* கோலிவுட்டில் இந்த ஆண்டு 2024ல் முதல் ஆறு மாதங்கள் வெளியான படங்கள் வணிகம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தது. அதில், விஜய்சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படத்தின் பெரும் வெற்றி வணிக வட்டாரங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 105 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் பான்-இந்திய படங்கள் வந்த போதிலும் 'மகாராஜா' திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், வெளிநாடுகள் மற்றும் தமிழ் பேசாத பிரதேசங்களில் இருந்தும் இப்படம் அற்புதமான வரவேற்பை பெற்றுள்ளது. தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறும்போது, “இது வணிகர...
அம்பானி மகனின் திருமணத்தை முன்னிட்டு மும்பை போலீசாரின் அறிவிப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

அம்பானி மகனின் திருமணத்தை முன்னிட்டு மும்பை போலீசாரின் அறிவிப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அம்பானி மகனின் திருமணத்தை முன்னிட்டு மும்பை நகரின் முக்கிய சாலைகள் மூடப்படவுள்ளது பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்க்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் திருமணத்துக்கு முந்தைய விழா, குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடத்தப்பட்டது. இந்த விழாவுக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரை பிரபலங்கள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் போன்றோர் அழைக்கப்பட்டு இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிலையில், மும்பையின் முதன்மை வட்டாரத்தில் ஹோட்டல் அறைக் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. திருமணம் நடைபெறவுள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் பகுதியில் உள்ள இரு பிரதான ஹோட்டல்களில் அறைகளுக்கான முன்பதிவு முடிந்துவிட்டதாக பயண, ஹோட்டல் இ...