எந்த அரசியலை பேச போகிறது ‘’பப்ளிக்’’ திரைப்படம்.
கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்து வருவதுடன். இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் ஸ்னீக்பீக் -3 வெளியாகியுள்ளது.
சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டைஅழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையாதேவர், ராமமூர்த்தி,
அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் படங்களை வைத்து வெளியிட்ட பாஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது.
சமுக ஊடகத்தில் இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை ...
அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் விக்ரம் நடிக்கும் படம் 'கோப்ரா'. இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடிச்சிக்கிட்டிருக்கார். ’கே.ஜி.எப்’ ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், மியா ஜார்ஜ், பத்மப்பிரியா, கனிகா, மிருணாளினி ரவி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கிறார்.
கொரோனா முதல் அலையின்போது, ரஷ்யாவில் சில முக்கியமான காட்சிகளை இந்தப் படக்குழு படமாக்கி வந்தது. அப்போது ரஷ்யாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படப்பிடிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பினார்கள்.
பின்னர், கடந்த ஆண்டு மீண்டும் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தது படக்குழு.
இந்தப் படத்தின் விக்ரம் தொடர்பான காட்சிகள...
எதற்கும் துணிந்தவன் தெலுங்கு வர்சனுக்கு நடிகர் சூர்யா தனது சொந்த குரலில் டப்பிங் பேசும் போட்டோவை படக்குழு பகிர்ந்துள்ளது
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன்.
இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) ஹீரோவாக நடித்துள்ளார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
தமிழில் தயாராகி உள்ள இப்படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்
எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இப்படம் பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரைய...
ஐ.பி.எல். மெகா ஏலம் நேற்று தொடங்கியது. இஷான் கிஷன், அவஷே் கான், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்,
பெர்குசன், ஷ்ரேயாஸ் அய்யர், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏலம் போனார்கள்.
இன்று 2-வது நாள் ஏலம் நடக்க இருக்கிறது
சென்னை சூப்பர் கிங்ஸ் 20.45 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 2 வெளிநாட்டு வீரர்களுடன் 10 பேரை எடுத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் 16.5 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 4 வெளிநாட்டு வீரர்களுடன் 13 பேரை எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் 18.85 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 4 வெளிநாட்டு வீரர்களுடன் 10 பேரை எடுத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12.65 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 3 வெளிநாட்டு வீரர்களுடன் 9 பேரை எடுத்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6.9 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 4 வெளிநாட்டு...
ஜெயம் ரவியின் இருபத்தி எட்டாவது படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் விரைவில் வெளியாக உள்ளது. அதை அடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஜெயம் ரவி நடித்த பூலோகம் திரைப்படத்தை இயக்கியவர்.
2015ல் பூலோகம் திரைக்கு வந்தது. சார்பட்டா பரம்பரை குத்துச் சண்டை படங்களுக்கெல்லாம் முன்னோடியாக அந்தப் படம் அமைந்தது.
த்ரிஷா அதில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது கல்யாண கிருஷ்ணனும், ஜெயம் ரவியும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட்டுள்ளனர்.
படத்துக்கு அகிலன் என பெயர் வைத்துள்ளனர். அதன் உப தலைப்பாக 'கிங் ஆப் தி இந்தியன் ஓசன்' என எழுதப்பட்டுள்ளது.
அதாவது இந்தியப் பெருங்கடல்களில் அரசன். சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பலின் ம...
ஆவினின் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த புகார்களில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில்,
கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் மாவட்ட குற்ற...
இந்தியாவில் வாகன போக்குவரத்து என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
அதிகரிக்கும் வாகன போக்குவரத்திற்கு ஏற்ப சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் உயருகிறது.
எனினும் மாநில அரசுகள் மற்றும் போக்குவரத்துக்கு காவல்துறை ஏற்படுத்தி வரும் தொடர்ச்சியான விழிப்புணர்வு காரணமாக பல மக்கள் முன்பை விட இப்போது சாலை பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கவன குறைவாக வாகனங்களை இயக்குவதன் காரணமாக விபத்துகள் நேரிடுவது அதிகரித்து வரும் நிலையில்,
டிரைவிங்கின் போது ஏற்படும் கவன சிதறலுக்கு முக்கிய காரணமாக இருந்து வரும் பழக்கம் வாகனத்தை இயக்கியபடியே மொபைலில் பேசுவது.
சில நேரங்களில் தவிர்க்க முடியாத அழைப்புகள் மொபைலில் வரும் நேரத்தில் ஓட்டி கொண்டிருக்கும் வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு பேசும் பழக்கம் கொண்ட டிரைவர்கள் இருக்கும் அதே நேரத்தில்,
ஓட்டி கொண்டிருக்கும் வாகனத்தின் ...
உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் படவுன் மற்றும் ஷாஜஹான்பூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
அவர்கள் (பா.ஜ.க.) மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.200 ஐ தாண்டும்.
ஏழைகள் விமானங்களில் பயணம் செய்வார்கள் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
ஆனால், அதிகரித்து வரும் எரிபொருள் விலையால், அவர்களுக்கு (ஏழைகளுக்கு) மோட்டார் சைக்கிள் அல்லது கார் கூட சொந்தமாக இல்லை.
பா.ஜ.க.வின் சிறிய தலைவர்கள் சிறு பொய்களை சொல்கிறார்கள், பெரிய தலைவர்கள் பெரிய பொய்களை சொல்கிறார்கள், அவர்களின் முக்கிய தலைவர் மிகப் பெரிய பொய்களை கூறுகிறார்கள். பாஜக பொய்யர்களின் கட்சி. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்...
ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியவர் அவேஷ் கான். ரபடா, நோர்ஜோ ஆகியோருடன் இணைந்து தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 140 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்து வீச்சு முன்னணி பேட்ஸ்களை திணறடித்தார்.
இதன்மூலம் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அவரை எடுக்க பல அணிகள் போட்டியிட்டன. அடிப்படை விலையான 20 லட்சத்தில் இருந்து கிடுகிடுவென உயர்ந்தது. லக்னோ அணி இவரை எடுக்க கடும் போட்டியிட்டது. இறுதியில் 10 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது.
அவேஷ் கான் இதுவரை சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர். இதன்மூலம் சர்வதேச விளையாட்டில் விளையாடாமல் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை படைத்துள்ளார்....