ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா
ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
அந்த வழக்கில் இன்று அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென கடந்த 28-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால் தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் தான் சிகிச்சை எடுத்து வருவதாகவும், அதனால் இன்று தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாதென்றும் கூறி, தன் மீதான விசாரணையை ஒத்திவைக்க குற்றப்பிரிவுக்கு இன்று கடிதம் அளித்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.
தனது அக்கடிதத்தில், “எனக்கு கடந்த 23ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது.
அதனால் நான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன்.
மீண்டும் தற்போது கொரோனா பரிசோதனை செய்து உள்ளேன்.
அதன் முடிவில் தொற்று இல்லை என்று சான்று வந்ததும் நான் விசாரணைக்கு ஆஜராகி...









