பெண் பத்திரிகையாளர்களை தப்பாக பேசிய எஸ்.வி.சேகர் வீட்டில் கல் வீச்சு!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுனருடனான பத்திரிகையாளர்கள் சந்திப்பு குறித்து வேறு ஒரு நபர் பதிந்திருந்த கருத்துக்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிபடுத்தும் விதத்திலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஜநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படுகிற பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை அள்ளி வீசிய எஸ்.வி சேகருக்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரிடமிருந்தும் கடுமையான எதிர்வினைகள் ஆற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், சென்னையிலுள்ள எஸ்.வி சேகர் வீட்டை முற்றுகையிட்டு அவரின் இழி செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள். தொடர்ந்து எஸ்.வி சேகர் வீட்டின் மேல் கல் எரிந்தும் தங்களது எதிர்ப்பினை பத்திரிகையாள...









