ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22
Shadow

HOME SLIDER

யாகசாலை பூஜையுடன் தொடங்கியதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா!

யாகசாலை பூஜையுடன் தொடங்கியதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர் கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டினார். இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. கடைசியாக 1997-ம் ஆண்டு பெரியகோவில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெற்றது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு விழா இன்று அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடை...
நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்

நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்* தமிழ் சினிமாவில் இவர் இல்லாத படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு பிசியானவர் யோகிபாபு. வடபழனியில் தான் கட்டிய வீட்டு கிரகபிரவேசத்திற்கே வர முடியாத அளவில் படு பிசியாக நடித்து சம்பாதித்து வரும் யோகிபாபுவுக்கு திருமணம் செய்ய பெண் தேடினார்கள். இதற்கிடையில் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். ஆனால் அதெல்லாம் பொய் என்றும் வீட்டில் உள்ளவர்கள் பெண் பார்ப்பதாக யோகிபாபு கூறியிருந்தார். இந்த சூழலில் காமெடி நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது . மார்ச் மாதம் சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பிரபலமாக உள்ள யோகிபாபு இப்படி திடீர் திருமணம் செய்ததற்கு ஜோதிடர்களின் ஆலோசனைதான் என்று கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் இரு வீ...
ஹாலிவுட் போகும் ஜிவி.பிரகாஷ்!

ஹாலிவுட் போகும் ஜிவி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும்  நடிகர் நெப்போலியன்  முதல்முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சிறந்த இசையமைப்பாளருமான  ஜீ வி பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) என பெயர் சூட்டி உள்ளார்கள். சர்வதேச தரத்தில் இருக்கும்  இப்படத்தை கைபா பிலிம்ஸ் (Kyyba Films),  நாசிக் ராவ் மீடியா (Nasik Rav  Media) மற்றும்  கிங்டம் ஓவர் ஏவரிதிங் (Kingdom Over Everything - KOE) என மூன்று சிறந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில்,  ஜிவி பிரகாஷ் மற்றும் நெப்போலியன் உடன் சேர்ந்து டிராபிக் தண்டர் (Tropic Thunder), பர்சி ஜாக்சன்(Percy Jackson) மற்றும் பிக் மாமா ஹவுஸ் (Big Momma House) போன்ற ...
டெல்லியில் மீண்டும்  ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல் அதிர்ச்சியில் பாஜக

டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல் அதிர்ச்சியில் பாஜக

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல் டெல்லி மாநில சட்ட சபைக்கு வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் டெல்லியில் உச்சக்கட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும் முனைப்போட்டி நிலவுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது மும் முனைப்போட்டி ஏற்பட்டது. அப்போது மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்தது. பாரதிய ஜனதா கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த தடவை தேர்தலிலும் அதேபோன்று இமாலய வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் கெஜ...
அருண் விஜய்யின் “மாஃபியா” விரைவில் ரிலீஸ்!

அருண் விஜய்யின் “மாஃபியா” விரைவில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அருண் விஜய் நடிப்பில் துருவங்கள் பதினாறு புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் படம் “மாஃபியா - பாகம் 1”. இப்படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். டீஸர் வெளியீட்டிற்கு பிறகு இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படமாக மாறியுள்ளது “மாஃபியா”. பட வெளியீட்டை முன்னிட்டு  இன்று இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்நிகழ்வில் அவர் கூறியதாவது... “மாஃபியா - பாகம் 1 “என்னோட 3 வது படம். போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. இரு வலிமையான பாத்திரங்கள் இடையே ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் நடக்குற மாதிரியான கதை தான் இந்தப்படம்.  இப்படம்   நான் - லீனியர் முறையில நடப்பதாக கதை  அமைக்கப்பட்டுள்ளது. படத்தில்  நான்கு பாடல்கள் இருக்கிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் திரைக்கதையோட சம்பந்தபட்டதா தான் இருக்கும். தனியா இருக்காது. ...
தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் இக்கோவில் அமைந்திருக்கும் தஞ்சை மண்ணில் பிறந்த பலர், தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள். அரசியல், கலை, சினிமா, தொழில்த்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள் வெற்றிக் ...
கணவன், மனைவி உறவு பாதிப்பை சொல்லும் புதுப்படம்!

கணவன், மனைவி உறவு பாதிப்பை சொல்லும் புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *கணவன், மனைவி உறவு பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை  சொல்லும்  'அதையும் தாண்டி புனிதமானது'!* வேல்’ஸ் மூவீஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்  'அதையும் தாண்டி புனிதமானது'. ஜெகின், பிரபுசாஸ்தா, திலக், ஹேமா, கோபிகா,குஷி,வீன் ஷெட்டி,வெங்கடசுப்பு, நாகமுருகேசன் போன்ற நடிகர்களுடன்  கராத்தே ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். குடும்பங்களில் கணவன், மனைவி உறவுகள் பாதிக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்..? என்பது பற்றியும், பெண்களை ஏமாற்றித் திரியும் ஆண்களைப் பற்றியும் அலசும் இந்த திரைப்படம் பார்க்கும் மக்களுக்கு பாடமாகவும், அதே சமயம் காமெடி கலாட்டாவாகவும் உருவாகி இருக்கிறது. இந்த காமெடி தர்பாரில் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, சிசர் மனோகர், க்ரேன் மனோகர், விஜய கணேஷ், சின்னராசு, சாரைப்பாம்பு சுப்புராஜ் மற்றும் கம்பம் மீனா போன...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- 25ம் தேதி நேரில் ஆஜராக ரஜினிக்கு சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- 25ம் தேதி நேரில் ஆஜராக ரஜினிக்கு சம்மன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- 25ம் தேதி நேரில் ஆஜராக ரஜினிக்கு சம்மன் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு திரும்பும்போது கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் போது:- ‘தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினிகாந்த் பேசியிருந்தார்...
5ம், 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து – தமிழக அரசு ஆணை

5ம், 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து – தமிழக அரசு ஆணை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    5ம், 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து - தமிழக அரசு ஆணை தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்று கல்வியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணையை திரும்ப பெறப்போவதில்லை எனவும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்தன. இந்நிலைய...
தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்!

தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்! தமிழ் சினிமாவில் மதங்களை கிண்டல் அடித்து படங்கள் பெறும்பாலும் வருவதில்லை. அதிலும் குறிப்பாக காமெடி நடிகர் நகைச்சுவைக்காக கடவுள் வேஷம் போட்டு நையாண்டி செய்வதும் பின்னர் அது சர்ச்சை ஆனதும் வருத்தம் தெரிவிப்பதும் வழக்கமான ஒன்று தான். சில தினங்களுக்கு முன் யோகிபாபு கதை நாயகனாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதைப்பார்த்த அனைவருமே ஷாக் ஆனார்கள். அதில் தமிழ் கடவுள் முருகன் போல யோகிபாபு பட்டுடையில் கையில் வேலுடன் நிற்க அவருக்கு பின்னால் முருகனின் மயிலுக்கு பதில் வெளி நாட்டு வெள்ளைப்பறவை எட்டிப்பார்த்தபடி இருந்ததை பார்த்து அனைவருமே ஷாக் ஆனார்கள். அதைவிட ஷாக்... படத்தின் பெயர் காக்டெயில்... அந்த பெயரின் டிசைனிலும் சரக்கு பாட்டில்கள், மது குப்பிகள் போல இருந்ததுதான். வேண்டுமென்றே ஒரு சர்...