நாட்டு மக்களை ஒரு ராத்திரியில் திடீரென நடுத்தெருவில் நிற்க வைத்த பெருமைக்குரிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் திடீரென ராஜினாமா
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா முடிவை தேர்வு செய்ததாகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுனராக பதவி வகித்ததை பெருமிதமாக நினைப்பதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை ஒரு ராத்திரியில் திடீரென நடுத்தெருவில் நிற்க வைத்த பெருமைக்குரிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் திடீரென பதவியை ராஜினாமா செய்தார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம்ராஜன் திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதில் உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டார். மத்திய மோடி அரசின் இந்த நடவடிக்கை அப்போதே பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் திடீரென செப்டம்பர் 8ம் தேதி ...









