விவேக்கின் ஜாஸ் சினிமா முறைகேடு: சத்யம் சினிமா தியேட்டர்கள் உள்பட 33 இடங்களில் வருமானவரி வேட்டை
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளை குறிவைத்து வருமானவரி துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரடி சோதனை நடத்தினர்.
சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயா தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். ஜாஸ் சினிமா என்கிற நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். சசிகலா உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் நடந்த சோதனையின் போது நுங்கம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் வீடும் தப்பவில்லை.
வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமா நிறுவனத்திலும் சோதனை நடந்தது. சத்யம் குழுமத்திடமிருந்து ஜாஸ் சினிமா நிறுவனத்தை விவேக் வாங்கி இருந்தார். அதற்கு முன்னர் லக்ஸ் சினிமா என்ற பெயரில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தின் பெயர் விவேக்கிற்கு கைமாறிய பின்னரே ஜாஸ் சினிமா என்று மாற்றப்பட்டது.
இதனை வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அப்போது நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் சிக்கி இருப்ப...









